தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
பால் – 200 மி.லி,
நீர் – 100 மி.லி,
நெய் – 200 கிராம்,
கேசரிப் பொடி – 1 தேக்கரண்டி,
ஏலப்பொடி – ½ தேக்கரண்டி,
முந்திரித் துண்டுகள் – ஒரு மேசைக்கரண்டி.
செய்முறை:
ஜவ்வரிசியை இலேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பாலையும் தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து, ஜவ்வரிசியைப் அதில் போட்டு, வெந்ததும் சர்க்கரையைச் சேருங்கள். பிறகு, நன்றாக வற்றும் வரை நெய் ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை, வாணலியில் ஒட்டாமல் வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறியவுடன் மேலே ஏலப்பொடி தூவித் துண்டமிடுங்கள். அதன் பின், முந்திரித் துண்டுகளால் அலங்கரித்தால் புதுமையான ஜவ்வரிசிக் கேசரி தயார்!