சேமியா பால் அல்வா

தேவையான பொருட்கள்:

சேமியா – 250 கிராம்
பால் – 250 மி.லிml
சர்க்கரை – 500 கிராம்
பச்சைக் கலர் – சிறிதளவு
ஏலப்பொடி – அரைத் தேக்கரண்டி
முந்திரித் துண்டுகள் – ஒரு மேசைக்கரண்டி
நெய் – 1 கப்

செய்முறை:

சேமியாவை முதலில் பாலில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் அதை மிக்சியில் அரைத்துத் தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு, பாகு காய்ச்ச வேண்டும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி, நன்றாகக் கரைந்ததும் இரண்டு தேக்கரண்டி பால் ஊற்றினால் சர்க்கரையில் இருக்கும் அழுக்குகள் தனியாகப் பிரிந்து வரும். அதை அப்படியே மேலோடு எடுத்து விடுங்கள். பிறகு, கம்பிப் பதம் வரும் வரை பாகு காய்ச்ச வேண்டும். கம்பிப் பதம் வந்ததும், பாகில் பச்சை நிறத்தைச் சேர்க்க வேண்டும். அத்துடன், அரைத்த  சேமியா மாவையும் சேர்க்க வேண்டும். பின்னர், அடுப்பை நிழல் போல் எரிய விட்டு, முந்திரித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறுங்கள். அல்வா நெய்யைக் கக்க ஆரம்பிக்கும். இதுவே பதம். இந்தப் பதத்துக்கு வரும் முன்பே அல்வா மிகவும் இறுகிப் போனால் நடுவில் ஒரு கப் கொதி நீரைச் சேர்த்துக் கொள்ளலாம். பதமானதும் ஏலப்பொடியைத் தூவி, நெய் தடவிய தட்டில் அல்வாவைக் கொட்டிச் சமப்படுத்தி, கேரட் சீவியில் மேலும் முந்திரிகளைச் சீவி அதன் மேல் கொட்டி அலங்கரித்துத் துண்டு போடுங்கள். இந்த அல்வா யார் செய்தாலும் நன்றாக வரும்!

About The Author