தேவையான பொருட்கள்:
சேப்பங் கிழங்கு – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 10 (உரித்தவை),
பூண்டு – 10 பற்கள் (உரித்தவை),
தக்காளி – 2 (நறுக்கியவை)
புளி – எலுமிச்சையளவு,
குழம்பு மிளகாய்ப் பொடி – 3 தேக்கரண்டி,
சீரகப் பொடி – 1 தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
எண்ணெய் – 2 மேசைக் கரண்டி,
கடுகு – கால் தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு – கால் தேக்கரண்டி,
வெந்தயம் – கால் தேக்கரண்டி,
பெருங்காயம் – கால் தேக்கரண்டி,
மிளகு – கால் தேக்கரண்டி,
சீரகம் – கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
சேப்பங்கிழங்கைச் சரியான பதத்தில் வேக வைத்து, சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளுங்கள்.புளியை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு, பொரிந்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதக்க வேண்டும்.
பின், சேப்பங் கிழங்கைப் போட்டு நன்கு வதக்கி, அதில் மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, உப்பு முதலியவற்றைப் போட்டு மூடி, ஒரு கொதி வந்ததும் புளிக்கரைசலைச் சேர்க்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி விடலாம். இறக்கும் முன் ஒரு தேக்கரண்டி பச்சை நல்லெண்ணெய் விட்டு இறக்கினால் சுவை கூடுதலாக இருக்கும்.
சுவையான சேப்பங் கிழங்கு புளிக் குழம்பு ரெடி. சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!