சேனைக் கிழங்கு மோகன் லாடு

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 1/4 கிலோ
சர்க்கரை – 1/4 கிலோ
எண்ணெய் – பொறிக்க
முந்திரி – 6
ஏலப்பொடி – சிறிது
ஜாதிக்காய் – ஒரு துண்டு
முந்திரித் துண்டுகள் – ஒரு மேசைக் கரண்டி
பச்சைக் கற்பூரம் – தேவைப்பட்டால்
நெய் – உருண்டைகள் பிடிக்க

செய்முறை:

சேனைக்கிழங்கைக் கழுவி, தோல் சீவி, வறுவலுக்கு சீவுவது போல் சீவி, நீரில் அலசி, துணியில் உலர்த்தி, மொறுமொறுப்பாகப் பொரித்துக் கொள்ளவும்.

சிறு துண்டு ஜாதிக்காயை நெய்யை விட்டு பொரித்துக் கொண்டு ஏலம், பச்சைக் கற்பூரத்துடன் பொடித்துக் கொள்ளவும். மிக்சியில் பொறித்த சேனைத் துண்டுகளை தனியாகவும், சர்க்கரையைத் தனியாகவும் பொடித்துக் கொள்ளவும்.

தேவையான நெய்யை சூடுபடுத்தி பொடித்த சர்க்கரை, சேனைத் துருவல், வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். சேனையைப் பொறிக்கும்பொழுது கருகாமல் பொறித்தால் ரவையில் செய்த மோகன் லாடு மாதிரியே மிகவும் சுவையாக இருக்கும்.

About The Author