விலங்குகள் – சங்கீதம் !
விலங்குகள் எழுப்பும் ஒலிகளுக்கும் நமது சங்கீதத்துக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது பாருங்கள்!
ஏழு ஸ்வரங்கள் – விலங்குகளின் ஒலி
சட்ஜமம் — மயில்
ரிஷபம் — மாடு
கந்தாரம் — ஆடு
மத்திமம் — அன்றில் பறவை
பஞ்சமம் — குயில்
தய்வதம் — குதிரை
நிசாதம் — யானை .
(நன்றி : அவள் விகடன் – 05-12-2008)
சங்கீதம் இரண்டு வகை
சங்கீதத்தில் ‘கல்பித சங்கீதம்’, ‘கல்பனா சங்கீதம் ‘ என்று இரண்டு வகை உண்டு. சொல்லிக் கொடுப்பதை அப்படியே பாடுவது ‘கல்பித சங்கீதம்’.
அந்தந்த நேரத்திற்கு ஏற்ப உள்ளத்தில் எழும் உணர்வுகளை வெளிப்படுத்துவது ‘கல்பனா சங்கீதம்’.
(நன்றி : குங்குமம் – 31-01-1982)
கடல் கடக்கும் கடம்
கடம் என்பது மண், நீரால் பிசையப்பட்டு, நெருப்பால் சுடப்பட்டு, கடமாகி, அதன் உள்ளே காற்று, வெற்றிடமான ஆகாயம் என்று பஞ்சபூதங்களும் அடங்கியதாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் கடல் கடந்து, விண்ணில் பறந்து, சூரியன் உதிக்கும் நாடுகளிலெல்லாம், நம் மண்ணின் பெருமையை, காற்றைவிட கடிதாகக் கொண்டு சேர்க்கிறது.
(நன்றி : விக்கு விநாயகராம், தினகரன் – 26.06.2010)
சில நேரங்களில் சில ராகங்கள்
காலை மணி 5-6 ………பூபாளம்.
6-7……….பிலஹரி
7-8……….தன்யாசி
8-9, 9-10……….ஆரபி, சாவேரி
10-11……….மத்யமாவதி
11-12……….மணிரங்கு
பகல் மணி 12-1…….ஸ்ரீ ராகம்
1-2…………மாண்டு.
2-3…………பைரவி, கரகரப்பிரியா.
3-4…………..கல்யாணி, யமுனா கல்யாணி.
மாலை மணி 4-5 ………காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்
(நன்றி : திருவெண்காடு T.தண்டபாணி தேசிகர் – 10-06-1995)
ஹிம்சையில்லாத ஹம்சத்வனி
"ஹம்சத்வனியை ஹரிஹரன் ஹாலாபனை செய்தான்" என்று ஓரிரு தடவை சொல்லுங்கள், மாத்திரை உள்ளே போய்விடும். ‘ஹ’ என்ற எழுத்தை பல தடவை உச்சரிக்கும்போது தொண்டையில் அதிக இடைவெளி ஏற்படுவதால் மாத்திரை உள்ளே போவது எளிதாகிறது!"
(நன்றி: க.சந்தானம் வலைப்பூ)
மீண்டும் சுடுவோம்!
“