சென்ரியூ – நகைப்பாக்கள் (3)

நிலவைப் படம் பிடிக்க
முடியாத வருத்தத்தில்
வற்றிய குளம்!

***

தெளிந்த நீரில்
முகம் பார்த்த பிறகும்…
தெளியாத மனசு

***

பாவலர்கள் எழுதி விடுவார்களோ?
பயந்து முட்புதரில் மறையும்
நிலவு

***

நிசப்தமாய் இரு
இசை கேட்கலாம்
மழை வரப்போகிறது

***

தரிசு நிலக் காட்டில்
தவறி விழுந்த காகிதத்தில்
அறுவடைக் காலக் கவிதைகள்

***

ஆயிரம் பேர் அழைத்தாலும்
ஆகாயத்தில்தான்
நிலவு.

About The Author

4 Comments

  1. Rishi

    மூளையோரம் உபயோகமில்லாத சில செல்களை தூண்டி விட்டமாதிரி இருக்கு உங்க அத்தனை கவிதைகளும்!!
    ரொம்ப நல்லாருக்கு பிரதர்.. (சிஸ்டர்??)
    உங்க பேரு தெரிஞ்சிக்கலாமா?

  2. Rishi

    மூளையோரம் உபயோகமில்லாத சில செல்களை தூண்டி விட்டமாதிரி இருக்கு உங்க அத்தனை கவிதைகளும்!!
    ரொம்ப நல்லாருக்கு பிரதர்.. (சிஸ்டர்??)
    உங்க பேரு தெரிஞ்சிக்கலாமா?

Comments are closed.