பூவா தலையா?
பூ கேட்கிறாள்
விதவை
***
முதியோர்களின்
முழு நேரப் பேச்சிலும்
இளமைக் காலம்
***
கல்லும் இருந்தது
நாயும் இருந்தது
கை உடைந்த நேரத்தில்
***
அன்னையும் பிதாவும்..
படித்துக் கொண்டிருக்கிறது
ஆஅனாதைக் குழந்தை
***
அதிவேகமாய் ஓடினான்
ஓட்டப் பந்தய வீரன்
அடுத்த வீட்டுப் பெண்ணுடன்!
***
மாற்று அறுவை சிகிச்சை
செய்து முடித்தார் மருத்துவர்
நோயாளியை மாற்றி!
***
“
good and thoughtprovoking – pls introduce this poet to me
tks
from s shankaranarayanan writer
நான் உங்கள் கவிதையை படித்தேன் சுமார்
விதீயாசமான அனுகுமுரை