17.11.2012, சனிக்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் சென்னை சூப்பர் டான்ஸர்ஸ் சீசன்-4, திரளான மக்கள் கூட்டத்தின் உற்சாக ஆர்ப்பரிப்புடன் நடைபெற்றது. Steps Foundation மற்றும் Plus Dream makers இணைந்து நடத்திய கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கிடையிலான இந்நடனப்போட்டிகளில் Infosys, CTS, VGN Infra உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் ஊழியர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
பங்கேற்ற அனைத்து அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைக்காமல் திறமைகளை வெளிப்படுத்தின. சிறந்த மூன்று அணிகள் தேர்வு பெற்று முதல் மூன்று பரிசுகளைப் பெற்றன. அணிகளின் கடும் உழைப்பைக் கண்டு நடுவர்களே திணறித்தான் போயினர். இறுதியில் இந்த சீசனின் சிறந்த நடன அணியாக Cognizant Technology Solutions பட்டத்தை வென்றது.
கார்ப்பரேட்டுகளின் அசரடிக்கும் இந்தப் போட்டிகளின் முடிவில் யுவராஜ் நடனக் குழு, ஓஜாஸ் நடனக் குழு மற்றும் D-Factor குழுவின் நடனங்களும் இடம் பெற்றன. திரைப்பட நடிகர்களும், நடன இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும் மற்றும் பல நடனப் பயிற்சி நிறுவனர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கு பெற்றனர்.
பொழுதுபோக்கிற்கான நடனம் என்ற அளவில் நில்லாது சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விழா முடிவில் வென்ற அணிகளுக்கு கோப்பைகளும், பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. Steps Foundation-ன் நிறுவனர் அகிலன் பரிசுகளை வழங்கினார். Steps Foundation மூலம் விற்கப்பட்ட அனுமதிச் சீட்டுகளின் தொகை Steps-ன் கல்வித் தொண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளிக்குழந்தைகளின் திறமைகளுக்கு உயரிய மதிப்பளிக்கும் வகையில் அடுத்த ஆண்டிலிருந்து Steps Awards வழங்கப்படும் என்றும் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் சிறந்த வகையில் அறிவுத்திறத்தை வெளிப்படும் பள்ளி மாணவர்களுக்கு பல படிநிலை சோதனைக்குப் பின் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட அகிலன், வருங்காலத்தில் அனைத்து சிறார்களும் முழுமையான கல்வியறிவு பெற்றவர்களாக உருவாகி வருவதை Steps Foundation உறுதி செய்யும் என்று வலிமையாக உணர்த்தினார்.
கார்ப்பொரேட் பன்னாட்டு நிறுவனங்களின் சமூகக் கடமையை உறுதி செய்யும் வகையில் பொழுதுபோக்கின் வாயிலாக மக்களிடம் சென்றடைவதற்கு Plus Dream Makers உறுதுணையாக விளங்குகிறது என அதன் நிறுவனர் ஜார்ஜ் விஜய் நெல்சன் தெரிவித்தார்.