சென்னா மசாலா

தேவையான பொருட்கள்:

வெள்ளைக் கொண்டைக்கடலை – ¼ கிலோ
வெங்காயம் – 4
தக்காளிப்பழம் – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10 பல்
மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
புதினா, சோடா மாவு – சிறிதளவு
உப்பு, கொத்துமல்லி – தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக் கடலையில் சோடாமாவைச் சேர்த்து 8 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு, பின்னர் வேக வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் வேக வைத்த கொண்டைக்கடலையையும் 2 தேக்கரண்டி சேர்த்து மைய (நைசாக) அரைக்க வேண்டும்.

தக்காளியைத் தனியாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி புதினா, அரைத்த மசாலா இரண்டையும் போட்டு வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கி, வேக வைத்த கொண்டைக் கடலையையும் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடியைப் பொருத்துங்கள். 2 விசில் வந்ததும் இறக்கி விடலாம்.

ஆவி போனதும் திறந்து கொத்துமல்லி தூவி, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை நெய்யில் வறுத்துத் தூவிப் பரிமாறலாம்.

சுவையான சென்னா மசாலா தயார்! இது சோளா பூரி, சப்பாத்தி, பரோட்டாவிற்குப் பொருத்தமாக இருக்கும்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author