சுரைக்காய் – மொச்சைக்காய் கூட்டு

தேவையானவை:

பொடியாக நறுக்கிய சுரைக்காய் – ஒரு கோப்பை
பச்சை மொச்சைக்காய் – அரை கோப்பை
துவரம்பருப்பு – அரை கோப்பை
பாசிப்பருப்பு – கால் கோப்பை
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
தனியா – ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 5
புளி – எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி,
தேங்காய்த் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி,
கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

முதலில், துவரம் பருப்பையும் பாசிப் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து, குக்கரில் சரியான பதத்தில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.

பச்சை மொச்சைக்காயைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

புளியை நன்றாகக் கரைத்து, அதில் பூசணிக்காய்த் துண்டுகளைப் போட்டு வேக வையுங்கள். வெந்த பிறகு மொச்சைக் காயையும் உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவேண்டும்.

தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் எல்லாவற்றையும் வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து வெந்த காய்க் கலவையில் சேருங்கள்.

மஞ்சள் தூளையும், வேக வைக்கப்பட்ட துவரம் பருப்பு பாசிப் பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பிறகு, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்துக் கொட்டி இறக்க வேண்டியதுதான்.

சுவையான சுரைக்காய் – மொச்சைக்காய் கூட்டு ரெடி! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author