தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி — 1 கப் (2 மணி நேரம் ஊற வைக்கவும்)
சுக்கு — ஒரு பெரிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
ஏலக்காய் — 1 எண்ணம்
எண்ணெய் — 100 கிராம்
கருப்பட்டி வெல்லம் — 100 கிராம் (தட்டிக் கொள்ளவும்)
செய்முறை:
சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் சேர்த்து நைசாக ஆட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணைய் ஊற்றி ஆட்டிய மாவைக் கொட்டி கைவிடாமல் நன்கு கிளறவும். வெந்து கொண்டிருக்கும் போது வெல்லத்தை சேர்த்துக் கிளறி, நன்கு உருண்டையாக திரண்டு வரும் சமயம் எடுத்து விட்டுப் பரிமாறவும்.
அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். பிரசவம் ஆன சமயத்தில் இதைத் தாய்க்கு குடுப்பார்கள்.
“
மிகவும் உபயோகமான குறிப்பு
ரொம்ப நல்லது