ஹாய், ஹலோ, வணக்கம்…
என் பேர் ஸ்வர்ணா, நிலாச்சாரலோட புது வெஜா – அதாவது வெப் ஜாக்கி. ரேடியோ, டிவில எல்லாம் ஜாக்கி இருக்கும்போது ஏன் வெப்ல இருக்கக் கூடாதுன்னு நம்ம எடிட்டர் வித்யாசமா யோசிச்சதுனால எனக்குக் கிடைச்சது சான்ஸ்!
ஜாலியா உங்களோட அரட்டை அடிக்கறதுக்குக் கசக்குமா என்ன?
கலக்கலா ஒரு காமெடியோட ஆரம்பிக்கலாம். டாக்கிங் ஃபோன் பூத்துன்னு ஒரு லின்க் அனுப்பிச்சிருந்தாரு நம்ம தோழர் ஒருத்தர். நான் சிரிச்ச சிரிப்புல பக்கத்து வீட்டுக்காரங்க என்னவோ ஏதோன்னு பயந்து ஓடி வந்துட்டாங்க…
http://www.youtube.com/watch?v=xCQjCeA00sw&feature=related
பாதி பாத்துட்டிருந்தப்போ கரண்ட் கட். எரிச்சலான எரிச்சல். ஆனா கிராமத்து மக்களை நினைச்சு மனசைத் தேத்திக்கிட்டேன். அதுல பாருங்க, ராஜு சமீபத்தில நச்சுன்னு ஒரு கேள்வி கேட்டார்னு நிலா சொல்லிட்டிருந்தாங்க – நகரங்கள்லதான் அதிகமா மின்சாரம் பயன்படுத்தறோம் – ஏஸி, ஃப்ரிட்ஜ், டிவிடி – இப்படி கொஞ்சம் ஆடம்பரங்களுக்காகக் கூட பயன்படுத்தறோம். ஆனா கிராமங்கள்ல விவசாயிங்க பயிருக்கு நேரத்துக்கு தண்ணி பாய்ச்சக் கூட முடியாம, அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட மின்சாரம் இல்லாம கஷ்டப்படறாங்க. (கிராமங்கள்ல மின்வெட்டு அதிகம்னு உங்களுக்குத் தெரியுமோ?) ‘ஏன் அரசாங்கமோ அல்லது சேவை நிறுவனங்களோ முயற்சி எடுத்து நகரங்கள்ல உள்ள ஆடம்பர பயன்பாடுகளைக் குறைக்கச் சொல்லி பிரபலங்கள் மூலமா விண்ணப்பம் செய்யக் கூடாது? ரஜினி சொன்னா தமிழ்நாட்டில பாதிப்பேர் ஃபேனே போடாம தூங்கமாட்டாங்களான்’னு கேட்டாராம்… யோசிக்க வைக்குதில்லை? ஏதோ நம்ம பங்குக்கு (அதாவது பிரபலங்களின் வரிசையில) நான் இங்கே ஆரம்பிச்சு வைச்சிட்டேன். இனி மார்ச் வரைக்கும் ஏஸி போடறதில்லைன்னு சபதம்! இந்தப் பிரபலத்தைப் பின்பற்றி நீங்களும் ஏதாவது சபதம் எடுங்க. எடுத்துட்டு எங்களுக்கும் எழுதுங்கப்பா… நிலாச்சாரல்ல பிரசுரிச்சு மற்றவங்களையும் இன்ஸ்பையர் பண்ணுவோம்…
இப்படி மக்களெல்லாம் பவர் கட்டில குமைஞ்சிட்டிருக்க, என் தோழிக்கோ வேற ஒரு பிரச்சினை. அசோகவனத்து சீதை மாதிரி உக்காந்திருந்தா! காரணம் கேட்டா, ரொம்ப ஆசையா வாங்கின சுடிதாரை டெய்லர் அநியாயத்துக்கு லோ நெக் வச்சு தச்சிட்டாராம். போடவே முடியாதுன்னு புலம்பல். பாவமா இருந்திச்சு. ஜி3க்கு ஒரு ஃபோன் போட்டேன். ஜி3 இருக்காளே, அவ ஒரு ஐடியா மன்னி. டெய்லர்கிட்டே சொல்லி ரெண்டு ஷோல்டரையும் பிடிக்கச் சொன்னா சரியாயிடும்னா. தோழிகிட்டே சொன்னேன். அவளுக்கொண்ணும் நம்பிக்கை வரலை.
“ஆல்டர் பண்ண முடியலைன்னா சல்வாருக்கு மேட்சான கலர்ல மெலிசான ஒரு டிஷர்ட்டைப் போட்டு மேலே டாப்பைப் போடு”ன்னு டிரெண்டியா ஒரு ஐடியா கொடுத்திருக்கேன். ஃபாரின் ஸ்டைல் மக்களே!
உங்களுக்கு உருப்படியா ஐடியா வேணும்னா ஜி3க்கும் ட்ரெண்டியா வேணும்னா அடியேனுக்கும் எழுதுங்க… (நிஜம்மா ஜி3 தனியா ஒரு ஊரையே மேய்ச்சிருவா… எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கா! ஆமா, அதென்ன பேரு ஜி3ன்னு யோசிக்கிறீங்களா? அவ நிஜப் பேரு என்னவா இருக்கும்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!)
பீட்ஸா, பர்கர்னு ஸ்டைலா தின்னு தின்னு ஜீன்ஸ் பத்த மாட்டேங்குது. முழிச்சிக்கற நேரம் வந்தாச்சின்னு நேத்தைல இருந்து ஜாகிங் ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குக் காரணம் நம்ம ரிஷிதான். ஜாகிங் போனா என்ன நன்மைன்னு புட்டுப் புட்டு வச்சிருக்கானே! நீங்களும் படிச்சுப் பாருங்களேன், யார் கண்டது நம்ம எடிட்டர் அம்மா போல நீங்களும் ஓட ஆரம்பிச்சு ஊரையே அதிர வைப்பீங்க! (சாமி, பாஸம்மா கிட்டே போட்டு கீட்டு கொடுத்துடாதீங்கோவ்! )
https://www.nilacharal.com/tamil/medicine/exercise_322.asp
ஆனா பாருங்க, எக்சர்சைஸ் ஆரம்பிச்சப்பறம் அதிகமா பசிக்க வேற செய்யுது (அட, ஒரு நாளு ஒடுனதுக்கே இத்தனை அலம்பலான்னு நீங்க கேக்கறது காதுல விழுகுதுங்கோ). நாக்கு பரபரன்னு சிப்ஸையும், சாக்லேட்டையும் தேடுது. திரும்ப அதே போல ஜங்க் ஃபுட் சாப்பிட்டா எப்பதான் உடம்பு குறையறது? ஆனா அதுக்காக வெறும் காய்கறியை நம்மளால சாப்பிட முடியாதுப்பா… நல்ல சுவையாவும் இருக்கணும்… செஞ்சு சாப்பிட ஈஸியாவும் இருக்கணும்… அந்த மாதிரி ஸ்நாக்ஸ் தேடினேன். இருக்கவே இருக்கு நிலாச்சாரல் கைமணம் செக்ஷன் கடல் போல. வசம்மா மாட்டிச்சு வசந்தியோட தக்காளி அவல்:
https://www.nilacharal.com/ocms/log/05120803.asp
தோழியை செய்யச் சொல்லி நல்லா சப்புக் கொட்டி சாப்பிட்டேன்.
கூடவே பிரேமாவோட துளசி டீ. காம்பினேஷன் சூப்பர்:
https://www.nilacharal.com/ocms/log/01210812.asp
நீங்களும் செஞ்சு பார்த்து எப்படி இருந்திச்சின்னு ஒரு மெயில் தட்டிவிடுங்க. இல்லைன்னா ரிஷியை விட்டு கடிக்க விட்ருவேன். அவங்கிட்ட போட்டுக் கொடுத்தா கடி ஜோக்ஸ் மூலமா உங்களைப் பழி வாங்கிடுவான்! அலர்றீங்களா? அந்த பயம் மனசில இருக்கட்டும் J
அப்புறம், நம்ம வாசகர் மதி நிறைச் செல்வன் அனுப்பிச்ச மெயில் இங்கே:
‘எனக்கு கண்ணாடியின் பின்புறம் வரையும் ஓவியம் ("REVERSE GLASS PAINTING") கற்க ஆவல். சென்னையில் உள்ள பயிலரங்க முகவரியை யாரேனும் தெரிவித்தால், நன்றியை மறக்கமாட்டேன்.’
மதி இதோட நாலைஞ்சு மெயில் அனுப்பிச்சிட்டார். விளம்பரங்கள் எல்லாம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கப்படும்னு வருதாம். ஏன் ஆண்கள்லாம் கத்துக்கப்படாதான்னு ரொம்ப வருத்தப்படறார். (ஆண் உரிமை இயக்கம் ஆரம்பிங்க, மதி. முதல் பெண் உறுப்பினரா நான் சேர்ந்து உங்களை ஆதரிக்கிறேன்!)
நிலாச்சாரல் மூலமா தாயா புள்ளையா எல்லாரும் பழகிட்டோம்(!!!) . ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கலாமே! தகவலிருந்தா எழுதுங்க… மதிக்குத் தெரிவிச்சிடுவோம்!
சரிங்க, ஆச்சி நடிச்ச ஆட்சி மாற்றம் டிவிடி பாக்கப் போறேன்… நிலாஷாப்பில வாங்கினது:
http://www.nilashop.com/product_info.php?products_id=890
எப்பவாச்சும் நேரம் கிடைச்சா கதை சொல்றேன் J
அடுத்த வாரம் புது வெஜா வருவாங்கன்னு நினைக்கிறேன்…
நீங்கல்லாம் ஸ்வர்ணா வேணும்னு ஏகோபித்து ஒரு விண்ணப்பம் போட்டா மறுபடியும் நமக்கு சீக்கிரம் சான்ஸ் கிடைக்கும்… அதுவரைக்கும்… சிலு சிலுன்னு வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுங்கோ!!!
சியர்ஸ்!
“
ஸ்வர்ணா அக்கா சாமான் நிக்காலோ.
hai naan inta pagutikku migavum putiyaval .nilaacharal miga nanru. enakku tamiil type seiya varavillai ungggal utavi teevai
Good effort. Keep going..
மிகவும் நன்றாக உள்ளது. தொடரவும்
என்னா மாலிக் தம்பி, அரட்டையை சில்லுன்னு பிக்கப் பண்ணீட்டீங்க போலிருக்கு… (ஆமா, அதென்னங்கோ பச்சைப் பிள்ளையைப் போயி அக்கான்னெல்லாம் கூப்புடறீங்கோ? புது ட்ரெண்டோ?)
லக்ஷ்மிக்கா, (மாலிக் ஸ்டைல்)
நல்ல வார்த்தை சொன்னதுக்கு நன்றிங்கோ. (இதையெல்லாம் எடிட்டரம்மா பார்வைக்குக் கொண்டு போறதைப் பத்தித்தான் ஒரே யோசனை)
அடுத்த தடவை ரொம்ப ரொம்ப நல்லா டிரை பண்றேன்… நீங்களும் உங்க அனுபவத்தை எல்லாம் எங்களோட பகிர்ந்துக்க வாங்களேன்
தங்க்ஸ்ங்க, திருஞானம்…
அப்டியே நாலு பேர்கிட்ட சொன்னீங்கன்னா, நமக்கு இன்னொரு சான்ஸ் சீக்கிரமா கிடைக்கும்…
இது அருமையாக உல்லது
நன்றிங்க, அமிர்தராஜ்
எப்டியோ நீங்கல்லாம் சேர்ந்து நமக்கு இன்னொரு சான்ஸ் வாங்கித் தராம விடமாட்டீங்க போலிருக்கே:-)
வாஸன்,
தமிழ் டைப்பிங் இப்போ சின்னப் பசங்க வேலையா ஆயேச்சே! முகப்பிலே எழுதுவீர்னு நீலமும் ஆரஞ்சும் கலந்து ஒரு பேனர் இருக்கில்லே, அதில க்ளிக் பணுங்க. உதவிப்பக்கம் அங்கே இருக்கு
என் ஜோக்ஸை கடிச்சுப் புட்டாங்க.. 🙂
யாராவது உதவிக்கு வந்து அது நல்லாருக்குனு சர்டிபிகேட் கொடுங்க பாஸ்.. ப்ளீஸ்..
எப்படி? தாங்க முடியல