எல்லோருக்கும் ஜோவின் அன்பு வணக்கங்கள்!
நான் நல்லாருக்கேன்.. நீங்க நல்லாருக்கீங்களா?
கொஞ்ச வாரங்களுக்கப்புறம் உங்களை சந்திக்கிறேன். புது வெ.ஜாக்கள்லாம் கலக்கிட்டு இருக்கும்போது கிடைச்ச ஓய்வுல, புதுசா சொல்ல சில தகவல்களை தேடி எடுக்க முடிஞ்சது. அதுல முக்கியமா உங்ககிட்ட சொல்லணும்னு காத்திட்டிருந்தது இந்த கம்பியில்லா சுட்டெலி (cordless mouse) பத்தி தான். ஏற்கனவே கம்பியில்லா தட்டச்சுப் பலகை(cordless keyboard) வந்தாலும், சுட்டெலி(mouse)யில்லாம கணிப்பொறியில் வேலை பார்க்கிறது கை உடஞ்ச மாதிரி இருக்கும். கட்டில்ல படுத்துகிட்டே கணிப்பொறியில் வேலையை செய்ய முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்னு நான் புலம்பினது லாஜிடெக் நிர்வாகத்தினருக்குக் கேட்டுடுச்சு போலருக்கு. புதுசா இந்த கம்பியில்லா சுட்டெலியை உருவாக்கிருக்காங்க.
http://www.logitech.com/index.cfm/mice_pointers/mice/devices/3443&cl=US,EN.
கலக்கலா இருக்குல்ல.. போற போக்கில், நினைச்சாலே போதும், கணிப்பொறி தானாவே மென்பொருள் உருவாக்கிடும் போலருக்கு. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்….
உங்களுக்கும் இந்த மாதிரி புதுசா ஏதாவது தெரிய வந்தா எங்ககூட பகிர்ந்துக்கோங்க. உங்களுக்குக் கணிப்பொறி சம்பந்தமா ஏதாவது சந்தேகம் இருந்தா, எனக்கொரு மடல் அனுப்புங்க… எங்கருந்தாலும் சுட்டாவது பதில் அனுப்பறேன். (A good developer knows where to cut from and where to paste to…) ஹி.. ஹி… நாமல்லாம் ‘சுடு’றதுல கில்லாடிங்க…
இப்படில்லாம் தகவல் திரட்டுறதுக்காக (அப்படி சொல்லிட்டு…) எப்பப் பாரு கணிப்பொறி முன்னாடியே உட்கார்ந்திருக்கோமா… கண்ணு கெட்டுடப்போகுதுன்னு ஒரே திட்டு. திட்டுன்னாலும், பெருசுங்க சொல்றத அலட்சியப்படுத்திடக் கூடாது. ஏன்னா, கணிப்பொறி தொடர்ந்து போடுறவங்களுக்கு, ஈரப்பசையில்லாம கண் உலர்வடைய வாய்ப்பிருக்காம். அப்படி உங்க கண் வறண்டு போயிருக்கான்னு கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை. இதுவும் ஒரு மருத்துவமனைலருந்து சுட்ட தகவல் தாங்க.
கீழ இருக்கற படத்துலயே எல்லா வழிமுறையும் இருக்கு. ஆனா இந்தப் படத்தைக் கொஞ்சம் பெரிய அளவில் நகல் எடுத்து ஒரு அஞ்சடி தூரத்துல உட்கார்ந்து செய்து பார்த்தீங்கன்னா நல்லாருக்கும். செய்து பார்த்துட்டு உபயோகமா இருந்துச்சான்னு எனக்கொரு மடல் தட்டி விடுங்க. உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அனுப்பி வைங்க.
ஜோ ஒரு எறும்புன்னு (கரும்புன்னு யாராவது சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்) சொல்லாம சொல்றதுக்காக ஒரு சுட்டிப் படத்தை தயார் செஞ்சு, எப்ப என்னோட அரட்டை வந்தாலும் இந்தப் படத்தை முதல் பக்கத்துல போடுங்கன்னு கார்த்திக்ட்ட (அதாங்க, நம்ம ரிஷி) குடுத்தா, ‘ஜோ, எதுக்கு கொசு படம் போட்டிருக்கீங்க, இதுக்கென்ன அர்த்தம்’னு கேட்டாரே பாக்கணும்.. எனக்கு ரத்தக் கண்ணீரே வந்துடுச்சு..
நீங்களே சொல்லுங்க, இதைப் பார்த்தா கொசு மாதிரியா இருக்கு? (உண்மையான விமர்சனம் தேவை..)
அவருக்கு அப்புறமா விளக்கம் எழுதி அனுப்பினேன். அவர் அப்போன்னா நான் ‘தேனீ’ படம் தயார் பண்றேன்னு கிளம்பிட்டார். கூடிய சீக்கிரம் கொட்டுவார்னு (தகவல்களை) எதிர்பார்க்கலாம்.
மின்னஞ்சல்கள் மூலமா நிறைய நல்ல சங்கதிகள்லாம் வருது.. ஆனாலும் சில பொய்யான தகவல்கள் மருத்துவப் போர்வை போர்த்தி வர்றதும், அதை நம்பி நிறைய பேர் ஏமாறுவதும் கவலையாயிருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி, மாரடைப்பு வந்தா தனக்குத் தானே முதலுதவி செய்றது எப்படின்னு ஒரு மடல் வந்தது. அதனோட பட விளக்கங்கள், எழுத்து நடை எல்லாம் பார்த்து உண்மைன்னு நம்பி நிறைய பேருக்கு அனுப்பினேன். வீட்டில் உள்ளவங்களுக்கு செயல் விளக்கம் காட்டினேன். உங்ககிட்ட சொல்றதுக்காக மொழிபெயர்த்தும் வச்சிருந்தேன். திடீர்னு ஒரு சந்தேகம். எப்படி வந்ததுன்னு ஞாபகமில்லை.. ஒருவேளை பொய்யாயிருக்குமோன்னு தோணுச்சு. எதுக்கும் கூகுள்ல தேடிப் பார்த்துடலாம்னு முடிவு பண்ணிப் பார்த்தப்போ அது தவறான தகவல்னு தெரிய வந்தது. மருத்துவத் தளங்கள்ல விரிவான விளக்கங்களே குடுத்திருந்தாங்க. அப்புறம் எல்லாருக்கும் அந்தத் தளங்களோட முகவரி அனுப்பி வச்சேன். இப்ப கூட அது மாதிரி ஒரு மடல் வந்தது.. “NEEDLE CAN SAVE THE LIFE OF A STROKE PATIENT”. இதுவும் தவறான தகவல் தான்.. அதை இந்தத் தளங்கள்ல தெரிஞ்சுக்கலாம்.
http://www.snopes.com/medical/disease/stroke.asp
http://www.theness.com/neurologicablog/?p=20
http://thehealthfranchise.com/a-needle-can-save-a-stoke-patient-true-or-false/
http://medicine.com.my/wp/?p=2967
நீங்களும் மருத்துவம் சம்பந்தமா ஏதாவது மடல் வந்தா, மத்தவங்களுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி, அதோட நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கோங்க.. சரியா?
ஆனால் நகைச்சுவையான மின்னஞ்சல்களும் வருங்க. அந்த மாதிரி வந்த ஒரு நகைச்சுவை மடலை என் நண்பனுக்கு அனுப்பினேன். அவன் பதிலுக்கு LOL னு அனுப்பிருந்தான். அவன் இப்படி வள்ளுன்னு விழற அளவுக்கு நான் ஏதும் பண்ணலையேன்னு யோசிச்சு யோசிச்சு மண்டையே குழம்பிப் போச்சு. என்னடா எதுக்குத் திட்டுறன்னு பதில் போட்டேன். நான் எப்படா திட்டுனேன்னு அவன் எனக்கு பதில் அனுப்புனான். அப்புறம் ஏண்டா ‘லொள்’னு பதில் அனுப்பினேன்னு கேட்டா அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான். நீ 5 வருஷமா மென்பொருள் துறையில் இருக்கேன்னு வெளில சொல்லிடாத, ஒரு உரையாடலுக்கான குறுஞ்சொல் கூட தெரியலைன்னு சிரிக்கப் போறாங்கன்னான். LOL னா, ‘Laughing Out Loud”னு அர்த்தம்டான்னான். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் FYI, FYA, GM, GA, GN, BFN தான். இந்த ‘லொள்’லாம் யாருக்குத் தெரியும்? இருந்தாலும் ஊர் சிர்க்க வாழக்கூடாதுன்னு தேடிக் கண்டுபிடிச்சேன் இந்தத் தளத்தை. உங்களுக்கும் உபயோகமாயிருக்கலாம்:
http://en.wiktionary.org/wiki/Appendix:Internet_slang
அப்புறம் என் தம்பி மேற்படிப்பு படிக்க விரும்புற பசங்ககிட்ட சொல்ல சொன்னான்: MBA படிக்க விரும்பறவங்க, கல்லூரிகள் பத்தியும், அவற்றோட குறை, நிறை பத்தியும் தெளிவா தெரிஞ்சுக்க விரும்பினா இந்தத் தளத்துக்குப் போகலாமாம்:
(இணையதள பேரை(பைத்தியக்காரப் பையன்)ப் பார்த்துத் தப்பா நினைச்சுடாதீங்க. ரொம்ப நம்பகமான தளமாம்.)
போன தடவை அரட்டைக்குப் பின்னூட்டம் அனுப்பின வெங்கடேஷ், Dr. சுப்பிரமணியன் சார், ப்ரகாஷ் எல்லோருக்கும் நன்றி.. என்னால உடனடியாக உங்களுக்குப் பதில் எழுத முடியலை. மன்னிச்சுக்கோங்க. இனிமே உடனுக்குடன் பதில் அனுப்புவேன். தொடர்ந்து உங்கள் ஆதரவு என்னைக்கும் இருக்கணும். இப்ப கிளம்பறேன். கிளம்பறதுக்கு முன்னாடி, நீங்க பார்த்து ரசிக்க:
http://www.youtube.com/watch?v=RPERVDVHAr4&feature=related
அன்புடன் விடைபெறுவது,
உங்கள் ஜோ
“
ஜோ
எத்தனை பேர் அதை எறும்புதான்னு சொல்லி ஓட்டுப் போட்டாலும், அது கொசுதான்னு அடிச்சு சொல்வேன், ஆதாரத்தோட!!
ஓ! ஆங்கில லொல்லுக்கு இதுதான் அர்த்தமா? அது சரி!!
எனக்கும் ரொம்ப நாளா தெரியாது. அது என்னன்னு தெரிஞ்சிக்கவும் ஆர்வம் காட்டிக்கல. ஏன்னா இப்படி ஷார்ட்டா எழுதறது எனக்குப் புடிக்காது. எஸ்எம்ஸையே விரிவா டைப் பண்ணிதான் அனுப்புவேன்!!!
புது விஷயத்தை அறியப்படுத்தியமைக்கு நன்றி!
அந்த பிலாபலஸ் நடனம் அருமையிலும் அருமை.ஜோவுக்கு ஒரு ஜே.
ரிஷி,
என்ன ஆதாரம் வச்சிருக்கீங்க? நான் கூட அது எறும்பு தான்னு சொல்றதுக்கு ஆதாரம் வச்சிருக்கேனே!
ஜே போட்ட மாலீக்குக்கு ஒரு நன்றி! எங்க போயிட்டீங்க இவ்ளோ நாளா? உங்களை ரொம்ப நாளா என்னோட பின்னூட்டப் பகுதியில் பார்க்க முடியலையே…
ரிஷி,
சுருக்கி எழுதறதுக்காக மட்டும் இந்த லிங்க் பயன்படாது. சுருக்கி எழுதியிருந்தா அது என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்கும் உபயோகமா இருக்கும்.
நானும் அடிச்சு சொல்லிட்டேன் அது கொசுதான். நான் எப்பவுமே ரிஷி கட்சிதான். இருந்தாலும் எங்கு திறமை இருந்தாலும் அவர்களை வாழ்த்தி வரவேற்பது எங்க தலை ரிஷியோட ஸ்பெசாலிட்டியாக்கும்.
ரிஷி .. நல்லா பாருங்க அது எரும்புதான் ..
ஜோ நான் உங்கலுக்கு சப்போர்ட் செய்யரென். DONT WORRY ok…
Anyways gud work guys..
புலவர்களே,சாந்தமாக உரையாடுங்கள்.அடிச்சு சொல்வதும் சப்போர்ட் செய்வதும்
வாதத்துக்கு நல்லதல்ல.கொசு தான் என்பதற்கு நீங்களும்,எறும்பு தான் என்பத ற்கு அவரும் ஆதாரங்களைக்கொண்டு வரட்டும்-நம் நக்கீரரே நல்ல தீர்ப்பு
வழங்குவார்!
ஜோ,
உங்க கொசுவோட கால்கள் ரொம்ப மெல்லிசா இருக்கு. அதோட அதுக்கு முன்னால் மீசை மாதிரி நீட்டிக்கிட்டு இருக்கற குச்சி கொசுவோடது மாதிரியே இருக்கு. இதோட உடலமைப்பும் ரொம்ப ஒல்லியா இருக்கு. ஆக, அது கொசுதான் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறேன்.
நன்றி லதா,
ரிஷி முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக உங்களை நியமிக்கிறேன். 🙂
You too Bharathi?! oh..!
வருக மாலிக்கீரரே! யோசனை மஞ்சுவாண்டுதேன்! :-))
தங்கள் தீர்ப்பு எதுவானாலும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
நக்கீரர் பரம்பரையைச் சார்ந்த டாக்டர் சுப்பிரமணியனைத்தான் ரொம்ப நாளா காணோம்.
ப்ரேம்ஸ்.. என்ன தான் நீங்க ரிஷிக்கு சப்போர்ட் பண்ணாலும், ஏதோ எனக்கும் கொஞ்சம் திறமை இருக்குன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி… நீங்க எதிர்க்கட்சி (ரிஷி, கோவிச்சுக்காதீங்க, சும்மா விளையாட்டுக்கு) கொ.ப.செ ஆனதுக்கு என்னோட வாழ்த்துக்கள்..
நன்றி பாரதி. நம்ம கட்சி தான் ஜெயிக்கும். ஏன்னா என்கிட்ட ஒரிஜினல் ஃபோட்டோவே இருக்கே..
மாலீக், சரியா சொன்னீங்க.. ஆதாரத்தை என்னோட அடுத்த கட்டுரையில் வெளியிடுறேன். ஆமாம், நக்கீரர் யாரு?
ஒல்லியாயிருக்கிறதால, எறும்பு கொசுவாயிடாது ரிஷி.. உங்க தரப்பு வாதத்தை முன்வச்சுட்டீங்க. என்னோட ஆதாரத்தை வெளியிட ஒரு 5 வாரம் வாய்தா வாங்கிருக்கேன். மாலீக் (நக்கீரர்?) நல்ல தீர்ப்பு வழங்குவார்..
ரிஷி! நன்றி. அப்ப உங்க முன்னேற்ற கழகத்தின் அடுத்த தலைவி நானா?!?!?!
லதா, கழகத்தில் உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்து பதவி உயர்வு வழங்கப்படும்!!
கணிப்பொறி ஐயப்பாட்டில் தெளிவுபெற எந்த முகவரிக்கு தொடர்புகொள்ள வேண்டும்?
Mr. பாலகிருஷ்ணன், உங்கள் சந்தேகங்களை இந்தப் பின்னூட்டப் படிவம் வாயிலாகவே தெரியப்படுத்தலாம். Attn: Jo” என்று மட்டும் குறிப்பிடுங்கள்.”
Let me give you my opinion. It is an eRumbu” genetically modified with genes from a “kosu”. So I hereby name it “koRumbu”. If you want to call it “eRusu” it is OK too. Problem solved!”
எறும்பு கொறும்பாயிடுச்சா!! குறும்புதான் உங்களுக்கு!!
(நா..ட்..டா…மை தீர்ப்பை மாத்திச் சொல்லுங்க..)
சைலன்ஸ், சொர்ணாக்கா வந்து தீர்ப்பு சொல்ற வரைக்கும் எல்லோருடைய அரட்டைக்கும் ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது.