சில்லுனு ஒரு அரட்டை

ஸ்வர்ணா இஸ் பேக் டு ராக்…

நலம்தானே நண்பர்களே!

நீங்கல்லாம் நல்லபடியா எழுதிப்போட்டு இன்னொரு சான்ஸ் வாங்கித் தந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்…
நாலுவாரம் என்னை மிஸ் பண்ணினீங்களா? நான் உங்களையெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ப மிஸ் பண்ணினேன்… நிசமாத்தாங்க… உங்க மேல சத்தியமா!

நமக்குப் பின்னால வந்த நம்ம சிஷ்ய கோடிகள் நம்ம பேரைக் காப்பாத்தினாங்களா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும். ரகசியமா எனக்கு மட்டும் கேக்கும்படியா ‘எழுதிப்’ போடுங்க…

நமக்கு சொர்ணாக்கான்னு பேரை வைச்ச ‘?!’ வாழ்க… இப்ப நம்ம டீம்ல இமேஜே மாறிப்போச்சு… நம்ம வந்தா அவனவன் எழுந்து நின்னு சல்யூட் அடிக்கறான்… இருக்கும்போது எஞ்சாய் பண்ணிப்போம்… என்ன சொல்றீங்க? (அதுசரி, சொர்ணாக்கா பத்தி உங்களுக்குத் தெரியும்தானே?)

சமீபத்தில ஜெயம் கொண்டான் படம் பார்த்தேங்க… ரொம்ப நாளைக்கப்பறம் சென்சிபிளான ஒரு படம் பார்த்த திருப்தி இருந்தது. சும்மா ஹீரோன்னா பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்கணும் அல்லது தியாகியா இருக்கணும்னு இல்லாம கொஞ்சம் யதார்த்தமா இருந்தது. புதுமுகம் லேகா வாஷிங்டன் நல்லா பண்ணிருந்தாங்க. வசனம் பளிச்சின்னு இருந்தது… வினய் பரவாயில்லை. நீங்க படம் பார்த்தீங்களா? பிடிச்சிருந்ததா?

சரோஜா பிச்சிக்கிட்டு ஓடுதுன்னாங்க… பத்திரிகைல எல்லாம் நல்லா இருக்குன்னாங்க. நம்பிப் பார்த்தா ரொம்ப போர் அடிச்சிடுச்சுங்க… வசனம்லாம் ரொம்ப ரொம்ப அமெச்சூர்த்தனமா இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல நடிகர்களை எல்லாம் வாய்ல வந்ததைப் பேசுங்கன்னு சொல்லிருப்பாங்க போலிருக்கு. இதைப் படிச்சிட்டு எதுக்கு பெரிய இடத்துப் பசங்களை வம்புக்கிழுக்கறேன்னு அம்மா திட்றாங்க… கங்கை அமரன் சாரும் எஸ்பிபி சாரும் பசங்களை நல்லபடியாதான் வளர்த்திருக்காங்காங்கன்னு பெரிய மனுஷத்தனமா சர்டிஃபிகேட் தந்தேன்… அம்மா முறைச்ச முறைப்பில ‘நான் இப்படி ஒரு அதிகப்பிரச்ங்கியை இல்லே பெத்து வச்சிருக்கேனேன்னு’ சொல்லாம சொல்லிட்டாங்க! என்ன பண்றது… சிலருக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் என்னை மாதிரி ஒரு ஸ்டாருக்கு (!!!!) அம்மாவா பிறக்கறது!

ஸ்டார்னு சொன்னதும் நினைவுக்கு வருது… இந்தப் படத்தில இருக்கற ஸ்டார் யார்னு தெரியுதா பாருங்க (நிலாச்சாரலுக்காக எக்ஸ்க்ளூசிவா இந்த ஃபோட்டோஸ் சேகரிச்சிருக்கேன். பாஸம்மாகிட்டேர்ந்து ஏதாவது பாராட்டு வருதா பார்ப்போம்).

   

என்னது, க்ளூஸ் வேணுமா? அடப் போங்க… டிவி பார்த்து ரொம்பத்தான் கெட்டுப் போய் இருக்கீங்க… சரி, ஏதோ கேக்கறீங்க… நமக்கு வேற ரொம்ப இளகின மனசு… இதோ க்ளூஸ்:

இணையத்தில இவர் ஸ்டார் கவிஞர்… ரொம்ப ‘அன்பானவர்’…

ஊகிக்க முடியலைன்னா கடைசில திரும்ப என்னைக் கேளுங்க….

இந்த வாரம் இரண்டு பெரிய வெற்றிகள் கறுப்பினத்தவர்க்கு – உலகின் மிக உயர்ந்த பதவி (இப்போதைக்கு?!!) பாரக் ஹுசைன் ஒபாமாவுக்கு, உலகின் மிக வேகமானவர் பட்டம் லூயிஸ் ஹாமில்டனுக்கு. வெள்ளை மாளிகைக்குப் போகும் முதல் கறுப்பராக ஒபாமா சரித்திரம் படைச்சிருக்கார். பெரிய விஷயம், இல்லையாங்க? பாருங்க, சாதனை படைப்பாருன்னு முன்னமே தெரிஞ்சு ப்ரொஃபைல் ரெடி பண்ணிட்டோம்:

https://www.nilacharal.com/enter/celeb/obama.asp

கறுப்பர்களுக்கு நடந்த கொடுமைகளை ‘ரூட்ஸ்’ (Roots)ங்கற நாவல்ல படிச்சு ஆடிப் போயிட்டேங்க. ஆப்பிரிக்காவிலருந்து அடிமையாக பிடிபட்டு வரும் குன்டா கின்டேங்கற கேரக்டரைப் பற்றியும் அவரது சந்ததிகள் பற்றியுமான கதை. அதை ‘ஃபேக்ஷன்’ (faction)னு சொல்லிருக்கார் அதனோட ஆசிரியர் அலெக்ஸ் ஹேலி – அதாவது உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட கதையாம். அப்படியே உலுக்கிப் போட்ருது. வாய்ப்பு கிடைச்சா படிங்க.

பிரேசில்ல நடந்த F1 ரேஸ் பார்த்தீங்களா? கடைசி லேப் கலக்கலோ கலக்கல். இந்த மாதிரி திரில்லிங் ரேஸ் வரலாற்றிலேயே இல்லைங்கறாங்க. எப்படியோ ஒரு வழியா உலக சேம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிட்டார் லூயிஸ்:

https://www.nilacharal.com/enter/celeb/lewisHamilton.asp

அவரோட போட்டி போட்ட மாஸா அழுதது பாவமா இருந்தது… குழந்தை முகமும் குண்டு கண்களுமா ஸ்வீட் லுக்கிங் மாஸா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

அதுசரி, ப்ரொஃபைல்ஸ் இன்னும் அப்டேட் ஆகாம இருக்குன்னு நீங்க குறைப்பட்டுக்கறது தெரியுது. தன்னார்வத் தொண்டர்கள்களின் நேரப் பற்றாக்குறைதான் காரணம், நண்பர்களே! பொறுத்தருள்க.

நிலாக் குழு ஒரு குடும்பம் போலத்தான் இயங்குவோம். எங்களோட பணிக் கலாசாரம் பற்றி நிலா தன்னோட ஜெயா டிவி நேர்முகத்தில சொல்லி இருக்காங்க. பாருங்க:

https://www.nilacharal.com/tamil/specials/nila_interview_312.asp

நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாகலாமே, மக்களே!

https://www.nilacharal.com/volunteer.asp

நிலாக் குழுவில இருக்கற ஜம்புநாதன் சார் உங்களுக்கெல்லாம் தெரியும்தானே? அவர் மூலமாதான் அவரோட பிரதர்ஸ் பத்மநாபன், வெங்கட்ரமணி எல்லாம் கூட நிலாச்சாரல்ல எழுத ஆரம்பிச்சாங்களாம்… சமீபத்தில அவங்களை அவங்க வீட்ல சந்திச்சேன். (நிலாக்குடும்பம்னா சும்மாவா?) அண்ணன் தம்பி அஞ்சு பேராம். மூணு பேர் ஒரே அபர்ட்மெண்ட் கம்ப்ளக்ஸ்ல இருக்காங்க. மற்ற ரெண்டு பேர் பக்கத்தில இருக்காங்க போலிருக்கு. ஆனா அந்த அஞ்சு குடும்பமும் ஒற்றுமையா இருக்கற அழகைப் பாக்கணுமே! பிரமிச்சுப் போயிட்டேன்… அவங்களுக்குப் பாராட்டு சொல்றதைவிட அவங்க சகதர்மிணிகளுக்குத்தான் சொல்லணும்கறாங்க எங்கம்மா… எப்படியோ வாழ்க வளமுடன்னு எங்கம்மா சார்பா நான் சொல்லிக்கறேன்… அவங்க வீட்லருந்து சுட்டுட்டு வந்த இந்த ஃபோட்டோக்களைப் பார்த்தா உங்களுக்கெல்லாம் கூட மலரும் நினைவுகள் வரணுமே! சுருக்குன்னு உக்காந்து அதை எழுதி எங்களுக்கு அனுப்பிச்சிருங்க…

ஹாங்…. மேலே பார்த்த ஸ்டார் யாருன்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கா? ‘அன்புடன்’ குழுமம் நடத்தும் கவிஞர் புகாரிதான் அவர். மன்சனுக்கு என்னா ஸ்டைலு பாத்தீங்களா, மக்களே!

   

கவிஞர் ஒரு சகலகலா வல்லவர். அவரைப் பற்றி மேலே அறிய அவரது நேர்முகம் காணவும்:

https://www.nilacharal.com/tamil/interview/tamil_interview_235_1.asp

‘நம்ம தமிழ் சமூகத்தில கவிஞராகணும்ங்கற மோகம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. ஒரு வாக்கியத்தை மடிச்சு மடிச்சு எழுதிட்டா கவிதைன்னு நினைக்கறாங்க’ன்னு எங்கேயோ வலைப்பூவில படிச்ச நினைவிருக்கு. (சும்மா கவிஞர் புகாரியை இதுல இழுத்து சிண்டு முடியற வேலை எல்லாம் வேண்டாம், ஓகே?) நிலாச்சாரல் எத்தனையோ புது எழுத்தாளர்களை ஊக்குவிச்சிருக்குன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா? (அடியேனும் அப்படி வந்தவள்தான்). ஆனா தரத்தைத் தக்க வச்சுக்கறதுக்காக சில படைப்புகளை ஆசிரியர் குழு நிராகரிக்க வேண்டி இருக்கு. (நானும் நிறைய அடி, உதை எல்லாம் வாங்கி இருக்கேனுங்கோவ்!). ஆனா ஒவ்வொரு படைப்பையும் ஏன் நிராகரிச்சோம்னு காரணம் எழுத நம்ம தன்னார்வக் குழுவுக்கு வசதிப்படாதே… எல்லோரும் முழு நேரம் வேலை பார்த்துக்கிட்டே நிலாச்சாரலையும் கவனிக்கறவங்க. ராம்பிரசாத் போல சில வாசகர்கள் கொஞ்சமும் அசராம காரணம் கேட்டு மெயில் அனுப்பிச்சிக்கிட்டே இருக்காங்களாம்… நீயே பொதுவா ஒரு பதில் சொல்லிடுன்னாங்க… கிடைச்ச வாய்ப்பை விடுவோமா?

ராபி (ராம்பிரசாத்தோட சுருக்கம். நம்மதான் இப்போ நண்பர்களாயிட்டோமில்லே), காதைக் கொடுங்க. ரகசியமாத்தான் சொல்லோணும். நக்கீரர் போல குறை சொல்லியே பேர் வாங்குகிற சிலர் எங்க குழுவிலும் இருக்காங்க. சொற்சுவை, பொருட்சுவை அப்படி இப்படின்னெல்லாம் ஏதேதோ அளவை வச்சிருக்காங்க. அவங்களுக்கு உங்க கவிதை பிடிக்கலைன்னா என்ன? உலகத்தில வேற களமா இல்லை? தொடர்ந்து முயற்சி செய்யுங்க. நான் உங்க கவிதைகளைப் படிச்சதில்லை. இருந்தாலும் ஒரு சின்ன ஐடியா – உங்க கருத்துக்களையெல்லாம் கட்டுரையா எழுதிப் பாருங்களேன்! ஒருவேளை க்ளிக் ஆகுமில்லையா? ‘இல்லை, நான் கவிஞராகத்தானிருப்பேன். அதுவும் நிலாச்சாரல்லதான் என் கவிதைகள் வெளியாகணும்’னு அடம்பிடிச்சீங்கன்னா, ஒரு ஷார்ட் கட் (பரம ரகசியம்) – பேசாம ஒரு கவிதைக்கு நீங்க அளிக்கற பதிலா ஃபீட் பேக் ஃபார்ம்ல உங்க கவிதைகளைப் போட்டு விட்ருங்க. தன்னால பிரசுரமாயிடும் :-). ஆனா மகேந்திரனைப் போலத் திரும்பத் திரும்ப நிராகரிக்கப்பட்ட கவிதைகளை பிரசுரத்துக்கு அனுப்பிச்சீங்கன்னா, ஒரேடியா உங்க படைப்புகளையே ஒதுக்கி வச்சாலும் வச்சிருவாங்க! ஆல் தி பெஸ்ட்…

போன தடவை நாம கொடுத்த இன்ஸ்பிரேஷன்ல (ஹி… ஹி… ) கவிதா பொறுப்பா மின்சாரத்தை சேமிக்கறது எப்படின்னு ஒரு தொடர் எழுதறாங்க… படிக்கிறீங்களா?

https://www.nilacharal.com/ocms/log/10270813.asp

படிச்சுப் பின்பற்றி பூமியைக் காப்பாத்துங்க, தோழர்களே! இன்னும் நிறையவே இருக்கு பேசறதுக்கு…. நீங்க எம்புட்டு ஆர்வம் காமிக்கீகளோ அம்புட்டு அதிகமா அள்ளித் தருமில்ல, நிலாச்சாரல்!

அதனால, உங்க ஆர்வத்தை எல்லாம் எழுதிப் போட்டு நம்ம நட்பை இன்னும் நெருக்கமாக்க வழி செய்யுங்க…

அடுத்த தடவை சந்திக்கற வரைக்கும், உங்களை நல்லாப் பாத்துக்கோங்கப்பா….

சியர்ஸ்….

About The Author

6 Comments

  1. maruthu

    னான் டமில் நெந்ச் என்னும் காலை பதிரிகைஇல் பனிபுரிகிரென். நனும் இந்த குலுவில் ஒரு அஙும் தன். இது வரை எனகு இதில் வரும் அனைது விசயன்கலையும் படிபதர்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. இப்போது தான் முதல்முரையாக சொர்னாகாவின் அரட்டையை படிதன். என் போன்ட்ர மனிதர்கலூக்கு இப்படி ஜாலியாக அரட்டை அடீக்க ஆசை. ஆனால் பனிபுரியும் துரை அப்படி இல்லை. ஆனால் இன்ட்ரு உங்கல் மூலம் ஒரு 10 நிமிடமாவது அரட்டை அடீப்பதில் மிக்க சந்தோசம். நன்ட்ரி.

  2. kajendran r

    எனக்கு ஆங்கில இலக்கியங்கள் தமிலில் வேன்டும் (வீடியோ / ஆடியோ / டெக்ஸ்ட்) வடிவில். தயவுசைய்து உதவுகள். நன்றி.

  3. lakshmi

    The flow in your chat is wonderful. Last week G3 put forth the value of friendship and now you have given the value of relationship in a well-knit family. All that is good is good as far as there are good people to appreciate.

  4. swarna

    ஆகா, மருது…. ஒரு பத்திரிகையாளர் வந்து பாராட்டினதில ரொம்ப சந்தோஷம். சில்லுன்னு ஒரு அரட்டை எழுத வர்றீங்களா?

  5. swarna

    கஜேந்திரன்,
    எழுத்தாளர் ஜெயபாரதன் சில ஆங்கிலேய இலக்கியங்களை மொழிபெயர்த்து இணையத்தில பதிச்சிருக்கார். நீங்க கூகுள்ல அவர் பெயரை வைச்சுத் தேடினீங்கன்னா கிடைக்கும். வேற ஏதாவது விபரம் தெரிஞ்சா சொல்றேன். தவறாம சொர்ணாக்கா அரட்டையை எதுக்கும் படிங்க…. சொல்ல முடியாது, நீங்க கொடுத்த இன்ஸிபிரேஷன்ல அடுத்த அரட்டை முழுசும் ஆங்கில இலக்கியமா இருந்தாலும் இருக்கும் (மக்களே… பயந்து கியந்து வராம இருந்திராதீங்கோ)

  6. swarna

    நன்றி, லக்ஷ்மி… தவறாம வந்து ஊக்கம் தர்றீங்க… உங்களைப் போல மக்கள் இருக்கறதாலதான் எங்களைப் போல வாயாடிகளோட பொழப்பு நடக்குது. அது சரி, நீங்க எப்போ எழுத ஆரம்பிக்கிறீங்க?

Comments are closed.