சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோரும் நலமா இருக்கீங்களா?

நம்ம வீட்டுலதான் கதை சொல்றேன் பேர்வழின்னு நம்ம பேரை ரிப்பேர் செய்துட்டாங்க. ஏதோ ஃபிரெண்ட்ஸ் கிட்டேயாவது நம்ம சோகக் கதையை சொல்லி மனசை ஆத்திக்கலாம் என்கிற எண்ணத்தில் உங்ககிட்டே வந்து சொன்னேன். ஆனா நீங்க உங்களுடைய பின்னூட்டத்தின் மூலம் இப்படி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. ஆமா என்ன கேட்டிருந்தீங்க? யாரு அந்த சமத்தா? வேற யாரு நானேதான்! இதுகூடவா உங்களுக்குத் தெரியலை? ரொம்பக்கஷ்டம். இது கூட பரவாயில்லைன்னு பொறுத்துக்குவேன். அதுக்கு அடுத்து நீங்க சொன்னது இருக்கே… அழுகை அழுகையா வருது. என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பாக உண்மை உலகத்துக்கு தெரியப் போகுது. ஹூம்…
‘ஒரு கழுதையின் வயசு எத்தனை?’ இந்த கேள்விக்கு பதில் தெரியாம பாவம் நம்ம ஃபிரெண்டு மாலீக்குக்கு தூக்கமே வரலை. சுப்ரமணியன் ஸார், ‘குத்து மதிப்பாக ஒரு கழுதையின் சராசரி வயது இருபத்து எட்டு’ அப்படீங்கிறது கொஞ்சம் ஜாஸ்தியோ? அப்படியும் மாலீக்கின் சந்தேகம் தீரலை. என்னவோ போங்க… என்ன வெச்சுதான் எல்லா ஆராய்ச்சியும் நடக்கணுமா? இருந்தாலும் முனைவர் ஸார் சொன்ன ஒரு விஷயத்துலே எனக்கு உடன்பாடு இல்லை. ஒவ்வொருத்தருக்கும் இந் த வயசுல இன்ன ஆசைகள் மட்டும்தான் இருக்கலாம்னு ஏதாவது விதிகள் இருக்கா என்ன? யாருக்கும் பாதகமில்லாத ஆசைகளில் தவறு இல்லையே! (எல்லாம் சரி. ஒரு குத்துக்கு மதிப்பில்லாத கழுதையின் வயது என்னவா இருக்கும் ஸார்? தெரிஞ்சா சொல்லுங்க ஸார் ப்ளீஸ்…)

Jokes apart… முனைவர் ஸார் உங்ககிட்டே ரொம்ப நாளா ஒரு விஷயம் கேக்கணும்னு இருந்தேன். நிலாச்சாரலில் வரும் படைப்புகளுக்கு நீங்க அனுப்பும் பின்னூட்டங்களை நான் படிச்சிருக்கேன். பல துறைகளிலும் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும் விவரங்களைப் பார்க்கும்போது நீங்க ஏன் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை படைப்புகளின் மூலமா எங்களோட பகிர்ந்துக்கக்கூடாது? அவசியம் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

*********

 Bangle Pen Stand
எனக்கு ரொம்பப் பிடித்த இன்னொரு விஷயம் வளையல்கள். வண்ணமயமான பல வளையல்கள் எங்கிட்டே இருக்கு. (‘இந்த பொம்பளைங்களே இப்படிதான்ப்பா’ அப்படீன்னு யாராவது முணுமுணுக்கறீங்களா என்ன?) ஒரு முறை நீல வண்ண வளையல்களை வாங்கினேன். வளையல்களை போட்டுகிட்ட கொஞ்ச நேரத்திலேயே வளையல்கள் தன்னுடைய வேலையை காமிக்க ஆரம்பிச்சுடுத்து. எப்பவும் சரி பார்த்துதான் வாங்குவேன். ஆனா இந்த முறை வளையல்கள் வாங்கும் போது கொஞ்சம் ஏமாந்துட்டேன். கொஞ்சம் கொஞ்சமா நீல சாயம் என்னுடைய கைகளில் படிய ஆரம்பிச்சுது. அழகான கலரா இருக்கேன்னு இரண்டு செட் வளையல்கள் வாங்கிட்டேன். உபயோகப்படாதுன்னு தூக்கிப் போடவும் மனசில்லை. சரி.. வேற என்ன மாதிரி இதை உபயோகப்படுத்தலாம்னு யோசிச்சப்போதான் ஒரு ஐடியா எனக்கு தோணித்து. வளையல்களை எல்லாம் எடுத்தேன். எங்கிட்டே இருந்த Fevicolஐக் கொண்டு மடமடன்னு வளையல்களை அடுக்க ஆரம்பித்தேன். எப்பவுமே என்னுடைய ஸ்டாக்கில் இருக்கும் ஐஸ்கிரீம் குச்சிகள் மற்றும், சில சம்க்கிகளுடன் அழகான ஒரு Pen Standஐ செய்து முடித்தேன். ‘கைவினைப் பொருட்களை செய்யறேன்னு சொல்லி வீடு முழுக்க குப்பை போடறே’ன்னு சொல்லும் எங்க அம்மாவே பாராட்டினாங்க தெரியுமா? வஷிஷ்டர் வாயில் பிரம்மரிஷி பட்டம் கிடைச்ச மாதிரி இருந்தது.

**********

ரெண்டு வாரங்களுக்கு முன்பு காலங்கார்த்தால என்னுடைய அலைபேசியில் அழைப்பு வந்தது. யார் இந்த நேரத்துல கூப்பிடறாங்கன்னு யோசனை செய்துட்டே போனை எடுத்து நான் சொன்ன ஹலோவைக்கூட கண்டுக்காம என்னுடைய தோழி ராதா தன்னுடைய குற்றப் பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பிச்சுட்டா. சரி கடந்த இரண்டு மாதமா கேட்கறதுதானே. இந்த முறையும் அவ சொல்லி முடிக்கும் வரை எது சொன்னாலும் அவளைப் போய் சேராதுன்னு தெரிஞ்சதாலே நான் அமைதியா அவள் சொல்வதை கேட்டேன். அவளுடைய குற்றப்பத்திரிக்கை என்னன்னு சொல்றதுக்கு முன்னாடி ராதாவைப் பற்றி சில விஷயங்களை முதல்ல உங்களுக்கு தெரிவிச்சுடறேன். என்னுடைய தோழி நல்ல திறமையான, புத்திசாலியான பெண். அது மட்டுமில்லாம கடுமையான உழைப்பாளியும் கூட. எதிலேயும் அவ்வளவு சீக்கிரம் தோல்வியை ஒப்புக் கொள்ளும் ஆளும் இல்லை. பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி முதன்மை மாணவியாக இருந்ததாலே ஆசிரியர்களுடைய பாராட்டு அவளுக்கு எப்பவுமே இருந்தது.

இப்போ அவளுடைய குற்றப் பத்திரிக்கை விஷயத்துக்கு வருவோம். சமீபத்துல தன்னுடைய வேலை சம்பந்தமான ஒரு பயிற்சிக்காக, ஹைதராபாத்தில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் ஆறு மாத பயிற்சியில் சேர்ந்திருந்தாள். பயிற்சி ஆரம்பிச்சு சில நாட்கள் வரை எல்லாம் நல்லா போயிட்டு இருந்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு பிரச்சனை ஆரம்பமாச்சு. பயிற்சியாளர் பயிற்சியாளர்களுக்கிடையே பாரபட்சம் பார்க்கிறதாகவும், இவளையும் இவளுடைய அறிவுத்திறனையும் குறைச்சு மதிப்பிடறதாவும் வருத்தப்பட்டா. பயிற்சி இடங்களில் இதெல்லாம் சகஜம்னு அவளை சமாதானப்படுத்த நான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவுமே அவளுக்கு உதவியாக இல்லை. நாளுக்கு நாள் அவளுடைய குற்றப்பத்திரிக்கை நீளமாக ஆரம்பிச்சது. புதிய இடம், புதிய மனிதர்கள், பயிற்சியாளர்களிடையே ஏற்படும் போட்டியின் காரணமாகவும் அவள் மனதில் பயமும், அமைதியின்மையும் கொஞ்ச கொஞ்சமா இடம் பெற ஆரம்பிச்சது. பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு வருவதற்கான காரணங்களை அடுக்க ஆரம்பித்தாள். நான் மட்டுமில்லாமல் அவளுடைய மற்ற தோழிகள் சொன்ன எந்த சமாதானமும் அவளுக்குப் போதுமானதாயில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு உடல் நலக் குறைவு காரணமாக தன்னுடைய சொந்த ஊருக்கு வந்த ராதா திரும்பவும் பயிற்சிக்காக ஹைதராபாத் செல்லும் நாளை ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளிப்போட்டுகிட்டேயிருந்தாள். கடைசியில் பயிற்சி சரிவரவில்லை, தான் அதை இடையிலேயே விட்டுவிட்டதைச் சொல்வதற்காகவே அன்று அழைத்திருந்தாள்.

எனக்கு ஆரம்பத்திலேயே ஒரு விஷயம் புரிந்தது. எப்போதும் பாராட்டுக்களிடையே இருந்த ராதாவிற்கு புதிய பயிற்சி இடத்தில் போதிய பாராட்டு கிடைக்காதது மட்டுமில்லாமல், மற்றவர்கள் பாராட்டுப் பெறுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதில் ஆரம்பித்து எதுவுமே பிரச்சனையாக அவளுக்கு தோன்ற ஆரம்பிச்சது. கொஞ்ச நாளைக்கப்புறம் அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிக்க ஆரம்பித்தபோதுதான் அவளுக்கு அவளுடைய தவறுகள் புரிய ஆரம்பித்தது. இப்போ மறுபடியும் 2 நாட்களுக்கு முன்னாடி அலைபேசியில் அழைத்த ராதா, வேறு என்ன பயிற்சிகளில் சேரலாம்னு என்னிடம் ஆலோசனை கேட்டபோது, நான் அவகிட்டே சில கேள்விகள் கேட்டேன். நீ மேற்கொண்ட இரண்டு மாத பயிற்சியின் பலன் என்ன? அதனால் ஏதேனும் உபயோக உண்டா? புதிதாக சேர விரும்பும் பயிற்சிகளின் நோக்கம் என்ன? அப்படீனு கேட்டேன். பொதுவா பயம், குழப்பம் எல்லோருக்குமே ஏற்படறது இயல்பான ஒரு விஷயம். ஆனா அதை நாம் எதிர் கொள்ளும் விதம் ரொம்பவே முக்கியம். நம்மால் சரிவர முடிவெடுக்க முடியாதபோது நமக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஏன் எனக்கு மட்டும் இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படுகிறதென்று வேதனையடையவும் வேண்டாம், எப்படிப் போய் கேட்கிறதுன்னு வெக்கப்படவும் வேண்டாம். என்னுடைய கேள்விகளை எல்லாம் கேட்ட ராதா யோசிச்சு பதில் சொல்றதா சொல்லியிருக்கா. கூடிய விரைவில் ராதாவிடமிருந்து நல்ல பதில்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

***********

சரி.. கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். உலகத்துல எவ்வளவோ மொழிகள் இருந்தாலும் குழந்தைகள் பேசும் மொழிக்கு ஒரு தனி அழகு உண்டு என்கிற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. இந்த வீடியோவில் இருக்கும் குழந்தை அவங்க அப்பாகிட்ட ரொம்ப சீரியஸா வாக்குவாதம் செய்துட்டு இருக்கு. ஆனா என்ன சொல்லுதுன்னு நிஜமா புரியலை. ஆனா அவங்க அப்பா அந்த குழந்தை சொல்ல வருவதை புரிஞ்சுகிட்டு பதிலும் சொல்றாரு. சரி அப்புறம் அந்த குழந்தை சமாதானமாச்சா? நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

http://www.youtube.com/watch?v=YLGNcO1U5o0&feature=related

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

4 Comments

  1. Dr. S. Subramanian

    Yash:
    First an apology. My response to the question of the age of a donkey was just factual (not meant to be offensive—perhaps a tad humorous). Since it is a standard remark about age and unexpected desire for certain folks I just took the liberty of amplifying the remark. Take it easy. It is all in good humor.
    Thank you for expressing interest in my writings.
    In case you want to follow my thoughts I have a few blogspots where I write about carnatic music, religion, philosophy etc. Some of the URLs are:
    http://periscope-narada.blogspot.com/
    http://narada-therealmofreligion.blogspot.com/
    http://agasthiyar.blogspot.com/
    I have also written some 150 articles for chennaionline.com over several years on various subjects. You can go to chennaionline and type Sethuraman Subramanian in the search box. The search will get you a list of my articles published there.
    Hope the articles interest you.
    Wishing you the best!

  2. Dr. S. Subramanian

    Yash has mentioned somebody *repaired her name*. It is not bad at all. In India and perhaps elsewhere too some use the word repair* in a derogatory way. I have heard people say *kadikAram repair AyiDuththu* to refer to its malfunction. Actually repair (re+pair) means *restore to a good or sound condition after damage*. When you want to say something is damaged you have to say it is in a state of disrepair. So, Yash, take heart. If somebody repaired your name it is really good that your reputed name has been restored from the damaged condition.”

  3. Dr. S. Subramanian

    மற்றொரு குட்டி விஷயம். அந்த ரிஷியின் பெயர் வஷிஷ்டர் அல்ல. அவர் பெயர் வஸிஷ்டர் ஸம்ஸ்க்ரித அகராதிப் படி.
    பி.கு. அடிக்க வர வேண்டாம்.

  4. maleek

    இது (சில்லுனு ஒரு) அரட்டை ஏரியா…..அழலாமோ?

Comments are closed.