ஹாய்! ஹாய்!! ஹாய்!!!
என்னங்க, சொர்ணாக்கா (ஸ்வர்ணா அடிக்க வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்) சொன்ன ஜி3 யாருன்னு கண்டுபுடிச்சிங்களா? அட அது நான்தாங்க காயத்ரி. இந்த வார வெஜா நான்தான். (தப்பிக்கவே முடியாது)
போன வாரம் என்னோட ஃப்ரண்ட் திவ்யா வீட்டுக்கு போயிருந்தேன். பொண்ணு பயங்கர யோசனையில் இருந்தா. நீயெல்லாம் யோசிச்சா உலகம் தாங்குமான்னு சொல்லி விசாரணையைப் போட்டேன். ‘நாள் பூரா கம்ப்யூட்டர் பார்த்து பார்த்து கண்ணை சுத்தி கருவளையம். வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க’னு கவலையோடு சொன்னா. கட் செய்த உருளைகிழங்கை கண் மேல் வை, கொஞ்ச நாள்ல கருவளையம் மறைஞ்சுடும்னு சொன்னேன். திவ்யா கிச்சனை நோக்கிப் புலி போலப் பாய்ஞ்சா. உங்களுக்கு ஏதாவது டவுட் இருக்கா? எங்கிட்டே வாங்க. காயத்ரியை நம்பினோர் கைவிடப்படார்.
இந்த காலத்து குழந்தைங்க எல்லாம் ‘நாக்க மூக்க நாக்க மூக்க…’, ‘சுராங்கனி சுராங்கனி…’, ‘எங்கேயும் எப்போதும்…’, ‘மை நேம்மிஸ் பில்லா’ மாதிரி பாடல்கள் மட்டும்தான் பாடறதா நம்மில் பலர் நினைச்சிட்டு இருக்கோம். அதுதாங்க கிடையாது. அவங்களால சினிமா பாடல்கள் மட்டுமில்லை தேசிய கீதமும் அழகா பாட முடியும்னு நிருபிச்சுட்டாங்க. நீங்களும் பார்த்து கேட்டு ரசிக்கலாமே?
http://uk.youtube.com/watch?v=5phDlQIOfls&feature=related
உங்க வீட்டில குட்டீஸ் இருக்காங்களா? அவங்களோட குறும்புகளை என்னோட பகிர்ந்துக்கலாமே! (நான் ‘உங்க வீட்டுப் பெண்’!)
ஸன்டே சும்மா இருந்ததால் ஃப்ரெண்ட் சுப்ரியாவோட “ஆதிவாசிகளோட கைவினை பொருட்காட்சி”க்குப் போனேன். உங்களுடைய முன்னோர்களை சந்திக்கப் போறீங்களான்னு மத்த ஃப்ரெண்ட்ஸ் கலாய்ச்சாலும் நாங்க விடவேயில்லை. கூர்க்ல இருந்து வந்திருந்த லேடி பட்டு பூச்சி கூடால (cocoon) நிறைய பொம்மைகள் செய்திருந்தாங்க. பார்க்க அழகாயிருந்தது. இந்த மாதிரி சுவாரஸ்யமா நீங்க எங்கேயாவது போயிட்டு வந்தா எங்களுக்கு எழுதுங்களேன்!
சொல்ல மறந்துட்டேனே. மதிநிறைச் செல்வன் சார், கண்ணாடியில் ஓவியம் வரையும் பயிற்சி பெற உங்களுக்காக இணையதளத்தில் தேடி சேகரித்த விவரம் இதோ:
ஷோபா – 9940069664
மது – 22345036, 22345036
உஷா ஸ்ரீகுமார் – 99403 18207, 2243 0279, 94431 55349
ப்ராக்ருதி ஆர்ட் சென்டர் – 98840-70520
கனி ஆர்ட்ஸ் – 9381157831, 65688920
ஒரு தேங்க்ஸ் ஏதும் கிடையாதா?
டீவியில் எவ்வளவு விஷயங்கள் வந்தாலும் நான் ரசிச்சு பார்க்கிறது என்னவோ விளம்பரங்கள்தான். ஹெடிஎப்சி (HDFC), யூனியன் பாங்க் ஆப் இந்தியா (Union bank of India) விளம்பரங்களில் வரும் குழந்தைகள் பாடி லாங்குவேஜ்லயே நம்ம மனசை அள்ளிடறாங்க. குழந்தைகள் வரும் விளம்பரங்கள் மட்டுமில்லாம நட்பை வெளிப்படுத்தும் மாஸ்டர் க்ரெடிட் கார்ட் விளம்பரம் ரொம்ப சூப்பர். பல வருஷங்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்களின் மலரும் நினைவுகள் அப்படி இப்படின்னு வருது பாருங்க… கண்டிப்பா நம்ம நண்பர்கள் நினைவுக்கு வராங்க. என்னங்க நீங்க இன்னும் பார்க்கலியா? அடப் போங்க… அழுவாச்சி சீரியலை விட்டு விளம்பரங்களுக்கு மாறுங்க…
‘ஐதராபாத்தில் கிடைக்கும் அவல், மற்றும் ஸ்பெஷல் அவல் எல்லாம் ரொம்ப மெலிசா இருக்கு. அதனால் புளி நீரில் 30 நிமிடம் ஊறவைக்க முடியாது’ன்னு வாசகர் வியாசமூர்த்தி கேட்பது நியாயம்தான். அது மாதிரி நேரத்தில் அவலை புளி நீரில் ஊறவைக்காமல், அவல் மேல் புளி நீரை தெளித்துப் பிறட்டி எடுத்தால் ப்ராப்ளம் ஸால்வ்ட்.
ரிஷிகுமாரோட ஜோக்ஸ் எல்லாம் படிச்சு ஆர்வக் கோளாறுல நானும் கொஞ்சம் ஜோக்ஸ் எழுதினேன். ஒரு முறை இப்படிதான் “புத்திசாலி மனைவிகள்” தலைப்புல ஜோக்ஸ் எழுதினேன். நிறைய பேர் பாராட்டினாங்க.
https://www.nilacharal.com/ocms/log/07140812.asp
ஆனால் நம்ம நண்பர் மாலிக் “பொண்டாட்டிகளை தொலைக்க ஐடியா இருக்கா”ன்னு கேட்கிறார். இது டூமச் மட்டுமில்லை டூடூமச். ஆனாலும் மாலிக் மாதிரி கலகலன்னு நாலு பேரு இருக்கறதாலதான பார்ட்டி களை கட்டுது… தொடர்ந்து கலக்குங்க, வாசகர் திலகம் மாலிக் அவர்களே!
எங்க அம்மாவுக்கு புது புது விஷயங்கள் தெரிஞ்சுக்கறதுல ஆர்வம் அதிகம். ‘எவ்வளவுதான் நாடகம் பார்க்கிறது. ரொம்ப போர் அடிக்குது. எப்போ பார்த்தாலும் இந்த கம்பியூட்டர்லயே இருக்கியே. அப்படி என்ன இருக்கு இதுல? எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடு’ன்னு கேட்டாங்க. உனக்கில்லாததாம்மான்னு சொல்லி, எனக்குத் தெரிஞ்சதை சொல்லிக் கொடுத்தேன். மைக்ரோ சாப்ட் தமிழ், ஆங்கிலம் டைப்பிங்கில் ஆரம்பித்து போட்டோ ஷாப், இன்டெர்னட்ன்னு கலக்கறாங்க. இப்போ, கம்பியூட்டர்ல உனக்கு ஏதாவது டவுட் இருக்கான்னு என்னைக் கேட்கறாங்க. இம்ப்ரஸிவ் அம்மா!
நேத்து ஆபீஸில் லஞ்ச் முடிச்சு என்னோட கொலிக் ஆஷாவோட ஸின்ஸியரா அரட்டையடிச்சுட்டு இருந்தேன். அப்போ ஆஷா, யோகா பயிற்சிகள் பெரியவங்களுக்கு மட்டும்தானா. குழந்தைகளுக்கான ஆசனங்கள் ஏதாவது இருக்கா? உனக்கு விவரம் தெரிஞ்சா சொல்லுன்னாங்க. உடனே எனக்கு நிலாஷாப் தான் ஞாபகம் வந்தது. குழந்தைகளுக்கான யோகா மற்றும் பெண்களுக்கான யோகா டிவிடிகள் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கே.. ஆஷாகிட்ட நிலாஷாப் பத்தின விவரம் சொன்னேன். உடனே ஆன்லைன்ல டிவிடி வாங்கிட்டாங்க. உங்களுக்கும் விவரங்கள் தேவையா?
http://www.nilashop.com/product_info.php?products_id=599
வெப் ஜாக்கியானாலும் எக்ஸ்ட்ரா டைம் எடுக்கலைன்னா தூக்கம் வராதே உனக்குன்னு எங்க நிலா லுக் விடறது உங்களுக்கு தெரியுதோ இல்லையோ எனக்குத் தெரியுது, புரியுது. சரி வாசகர்களே! நாம்ப மறுபடியும் பார்த்தாலும் சரி, பார்க்கலைன்னாலும் சரி, பேசினாலும் சரி பேசலைனாலும் சரி,
“நல்லாயிருப்போம், நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்.”
“
நல்லாருக்கு.. நல்லாருக்கு.. உங்க தகவல்கள் அத்தனையும் நல்லாருக்கு.
Kalakara Gayathri….. very nice article…… am also going to trying potato for removing my dark circles…… all the best for ur work!!!!!
Thank you vidhya.
very nice da
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஜோதி…!
G3 உன் நடை டாப் டென்ல ஒன் கீப் ஆன்.
செல்லமா பாராட்டிய கோகிலாவிற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி….! 🙂
விளம்பரங்களில் வரும் நட்பை பாராட்டும் காயத்ரி அவர்களே, நீங்களே சிறந்த நண்பி!!
இவ்வளவு நண்பிகளை தந்ந நிலாச்சாரலுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்.
காட்டன் புடவை மொட மொடன்னு இருக்கறதுக்கு வீட்டிலிருந்தே செய்ய ஏதாவது டிப்ஸ் கிடைக்குமா?
அன்புள்ள காயத்ரி அவர்களுக்கு,
தங்களுடைய தகவலுக்கு மிக்க 50% நன்றி. அவர்களை நான் தொலைபேசி அல்லது கைப்பேசியில் தொடர்புகொண்டு, விபரம் அறிந்தபின்பு மீதி 50% நன்றியைத் தெரிவிக்கிறேன். ஏனெனில் அத்தனை விளம்பரம் தருவோரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத்தான் என்று சொல்லிவிடுகின்றனர், நான் ஒரு மூத்த குடிமகன் – வயது 72 எனது கலை ஆர்வத்துக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை! வேதனையுடன் இதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.