சில்லுனு ஒரு அரட்டை

எப்போதுமே அடுத்தவங்க விஷயத்தை அரட்டை அடிக்கணும்னா (சந்தோஷமா!) அல்வா சாப்பிடறாப்ல இருக்கும்ல. ஆனா இந்த முறை நாம டேப் ரெக்கார்டர் மாதிரி நம்மளோட வாழ்க்கைய ரீவைண்டு செய்து பார்த்தா என்னனு தோணிச்சு. அதனால எல்லாரும் திண்ணையில் (எங்கே இருக்கு!?) ஒரு பாயை விரிங்க. படுத்துக்கிட்டு அண்ணாந்து பார்த்து உங்க எண்ணத்தை ஓடவிடுங்க. உங்க கடந்த கால நினைவுகள் தானாவே வரும். (பாரதிராஜா படத்துல வர்ற வெள்ளை தேவதைங்க வந்துடப் போறாங்க.. பார்த்து பைய கடந்த காலத்த ஓடவிடுங்க!). ‘வரும்.. ஆனா வராது’ன்னு தகராறெல்லாம் பண்ணப்படாது.

சரி, கொஞ்சம் சீரியஸா பேசலாம்… (அரட்டைன்னா சீரியஸா இருக்கக் கூடாதுன்னு விதி எதுவும் இருக்கா என்ன?)

ஒருநாள் ஒரு தனியார் தொலைக்காட்சியில முதியோர் இல்லத்தில் நடந்த விழா ஒன்றை காண்பிச்சிட்டு இருந்தாங்க. அதில் பலபேர் அந்த வயசான காலத்தில தங்களால் முடிந்த வேலையை செய்திட்டு, தங்களுக்குள்ள தங்களோட அன்பைப் பரிமாறிக்கிட்டு இருந்தாங்க.

அப்ப ஒரு வயசான அம்மா சொல்றாங்க, "எனக்கு ஒரே பையன். என் மருமகளும், மகனும் வேலைக்கு போறாங்க. நான்தான் வீட்டு வேலை எல்லாத்தையும் செய்வேன். எனக்கு சாப்பாடு, என் மருமகள் ஒருவேளைதான் தருவா. வியாதி வந்திடும்ன்னு சாப்பாடு சரியா போடமாட்டா. அத்தனை கஷ்டத்தில எனக்கு ஒரே பிடிப்பு என் பேரன்தான். இத்தனை மனக்கஷ்டத்திலேயும் என் மருமகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வேன். ஆனா அவ என் பிள்ளைகிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லுவா. பல முறை என் பிள்ளை அடிச்சிருக்கான். நா மனசுல வேதனையைத் தாங்கிட்டாலும் உடம்பு தாங்கல. ஒருநாள் யார்கிட்டேயும் சொல்லாம முதியோர் இல்லத்துக்கு வந்துட்டேன்"

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த உடனே எனக்கு மனசுல ஒரு எண்ணம் வந்துச்சு. ஆபிஸ்ல எத்தனை கஷ்டமான வேலை இருந்தாலும் நாம வயித்துப்பொழப்புக்காக கத்துக்கிறோம். ஆனா நம்ம அப்பா, அம்மாகிட்ட அந்த அளவு பொறுமையைக் கடைபிடிக்கறதில்லை.

உலகம் உருண்டைனு யாரோ கண்டுபிடிச்சுச் சொன்னதை ஒத்துக்கிறோம். ஆனா பெரியவங்க அவங்களோட அனுபவத்தில சொல்ற அறிவுரையை உதாசீனப்படுத்தறோம். பாட்டி, தாத்தா, அப்பா, அம்மாவிற்கு திருமணநாள், பிறந்தநாள் வாழ்த்து சொல்லினால் அவங்களுக்குக் கிடைக்கிற மகிழ்ச்சி அலாதி. வயசான காலத்தில அவங்க கிராமத்திற்கு அவங்களைக் கூட்டிட்டு போகலாம்… அவங்க ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு அவங்க கேட்காமலே கூட்டிட்டு போகலாம்… சின்னச் சின்ன விஷயங்கள் வயசான காலத்தில பெரிய சந்தோஷங்களைத் தரும்.

உடல் பருமன், இதயத்தில் அடைப்பு மற்றும் சர்க்கரை நோய் பற்றி அதிகமா விழிப்புணர்வு பரவி வருது. என்னிக்குமே நாம சாப்பிடற சாப்பாட்ல கட்டுப்பாட்டோட இருந்தா எந்தவித நோயும் வராதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. பொதுவாவே நோய்களுக்கு மூலகாரணம் மன அழுத்தம்தான்.

என்னுடைய ஃப்ரண்டு பஹ்ரைனில் இருந்து விடுமுறைக்கு இந்தியா போனாங்க. அப்ப புதுசா வீடு ஒன்னு வாங்கினாங்களாம். அந்த வீட்டுக்கு வித்தியாசமா க்ரஹப்ரவேசம் செய்யனும்னு நினைச்சாங்களாம். விழா முடிஞ்சா பொதுவா எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு போய்டுவாங்க. ஆனா என் ஃப்ரண்டு அத்தனை பேரையும் ஆச்சரியத்துல திக்குமுக்காட செஞ்சுட்டாங்க. சொந்தக்காரங்க முக்கால்வாசிபேரு வெளி ஊரு, வெளி நாட்டில இருந்தாலும் அத்தனைபேர்கிட்டயும் ஒரு பதினஞ்சு நாள் லீவ் எடுத்துட்டு என்னோட புது வீட்டில எல்லோரும் தங்கணும்னு சொன்னாங்களாம். கணவரோட சொந்தக்காரங்க, தன்னோட அம்மா வீட்டு சொந்தக்காரங்க எல்லாரையும் கூப்பிட்டாங்களாம். அங்க காலைல காபி குடிக்கிறதுலேர்ந்து, டிபன், மதிய சாப்பாடு, சாயங்காலம் ஸ்நாக்ஸ் இரவு சாப்பாடு என அந்த நாள்ல எப்படி சாப்பிடுவாங்களோ அப்படி கொடுத்தாங்களாம். இத வீட்டில சமைக்காம, தன்னுடைய உழைப்பால தொழிலில முன்னேறிக்கிட்டிருக்கிற, ஏழ்மை நிலையில் உள்ள ஒரு அம்மாக்கு இந்த வேலையை கொடுத்தாங்களாம். அந்த அம்மாவும் சந்தோஷமா எல்லாருக்கும் ருசியா சமைச்சு தந்தாங்களாம்.

என் ஃப்ரண்டு சொன்னா, இந்த பதினஞ்சு நாளும், என் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒருத்தருக்கொருத்தர் தங்களுடைய மனசுல உள்ள பாரத்தை இறக்கி வச்சுட்டு சந்தோஷமா இருந்தாங்க. எல்லாரும் மனசுவிட்டு பேசியது மன அழுத்தத்தை குறைத்ததுன்னு சொன்னா. மாசத்துக்கு ஒரு முறையாவது இப்படி சொந்த பந்தங்களோட நேரம் செலவழிச்சா டாக்டர்கள் செய்கின்ற சிகிச்சைகளுக்கு மாற்றா வீட்டிலேயே அன்பு என்ற மருந்தினால் பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவருக்கும் ஆச்சரியப்புள்ளி வைக்கலாம். (மாமியாருக்கும் இந்த மருந்தைத் தடவலாம்!)

இப்படித்தான் ஒருத்தரு எல்லாரையும் அவங்க வீட்டுக்கு ஒரு வாரம் லீவ் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாராம். எல்லா சொந்தமும் வந்து தங்கினாங்களாம். இரண்டு நாள் கழிச்சு ‘என் பொண்ணுக்குக் கல்யாணம் செய்யப் போறேன். அதனால அத்தன பேரும் உங்க பேங்க் பேலன்ஸ் சொல்லுங்க’ன்னு சொன்னாராம். இதக் கேட்டவங்களுக்கு வராத ஹார்ட் அட்டாக் வந்திருச்சாம்!

சில சமயம் யாரும் இல்லாத நேரத்தில நமக்கு போரடிக்கும். அந்த நேரத்தில நமக்கு தெரிந்த கலைகளை முயற்சித்து பார்த்தால் தனிமை நமக்கு இனிமையாகிவிடும். நான் பல முறை செஞ்சு பார்த்திருக்கேன். பல நாட்கள் தனிமையில் இருக்கும்போது, சிக்குகோலம் போட முயற்சி செய்து உள்ளேன். மனது முயற்சிக்கும்போது லேசாகிவிடும். (ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கோலம் போடுவது இல்லை. இதில் ஆண்கள் வேறு முயற்சிக்கணுமா? சொல்லுவது காதில் விழுகிறது. இதையே அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து சொன்னால் செய்வோம்ல!).

முன்காலத்தில பெண்கள் பொழுது போக்கா தாயக்கட்டம், பல்லாங்குழி, கூழாங்கல் விளையாட்டு இப்படி மூளைக்கு வேலை கொடுத்து தன்னையும் ஆரோக்கியமா வைச்சுருப்பாங்க. ஆண்களுக்கு கிட்டிபுல், கோலிகுண்டு என பல விளையாட்டுகள் இருந்தன. இப்போ எல்லாமே தொ(ல்)லைக் காட்சிதான்!

என் நண்பர் ஒருவர் தன் குடும்பத்தின் பிரச்சினை காரணமாக ஒரு ஜோசியரைப் பார்த்தாராம். ஜோசியர், சில பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றாராம். அவர் சொல்லியபடி இவரும் செய்துள்ளார். இவர் அத்தனை பரிகாரம் செய்தாலும் ஒன்றுமே சரியாகவில்லை. மன உளைச்சல்தான் அதிகமாக இருந்தது என்றார்.

‘கடவுள் என்றைக்குமே எந்த வேண்டுதலையும் கேட்கவில்லை. நம் மனத்திருப்திக்காக அவற்றை செய்கின்றோம்.’ உங்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்றால் பரிகாரத்தைக்காட்டிலும், உங்களால் முடிந்த நல்லதை மற்றவர்களுக்கு செய்யுங்கள். கடவுள் கருணையானவர். கரடுமுரடானவர் அல்ல’ என்றேன். அன்பைப் பொழிந்தால் அமைதி தானாகவே வரும் என்பதுதான் எனது கொள்கை.

மீண்டும் விளையாட வரேன்.

About The Author

9 Comments

  1. jayashreeanbu

    உன்க வcஅடிஒன் லெஅவெ கெட் டொகெதெர் இச் கோட் இடெஅ, நெ நில்ல் fஒல்லொந் எவெர்ய் ட்ரிப் புட் ஒஉர் ரெலடிவெச் சொ புச்ய் நித் கிட்ச் எடுcஅடிஒன், அன்ய் நய் நில்ல் fஒல்லொந் தெ சமெ டொ டல்க் அல்ல் திங்ச் ஒஉட் ஒf தெ மின்ட். நிcஎ தொஉக்க்ட்ச் டொ கெட் மின்ட் ரெல௯அடிஒன். Bஉட் பெ cஅரெfஉல்ல் அல்ல் பெஒப்லெ ஷொஉல்ட் டகெ பொச்டிவெ தொஉக்க்ட்ச்.. fஇனெ கோட் லுcக் – ப்.ற்க்ட்ச் ஜைஅன்பு

  2. maleek

    திருநெல்வேலி மாதிரி இல்லாவிட்டாலும் பஹ்ரைன்
    அல்வா பரவாயில்லை..

  3. P.Balakrishnan

    எப்போதும் பெற்றோரை மதித்து நடந்தால் அன்பு நம்முடன் ஒட்டி உறவாடும். அமைதி புன்னகை பூத்து ஓடிவந்து கட்டித் தழுவிக் கொள்ளும்.

  4. mano

    பல நாள் தனிமயில இருந்தீங்களா?? அப்ப ப௯க்ரைனல வேலை ஜோலி ஒன்னும் இல்லாமத்தான் இருக்கீங்களா? நானும் பக்ரைன்ல தான் இருக்கேன்யா ஜுபேர்ல இருக்கேன். என்ன இருந்தாலும் அரட்டை சூப்பரப்பு…………..nadakkattum thodarattum….

  5. Narayanan

    பெற்றோரிடம் அன்பும் மரியானதயும் செலுத்தினால் வாழ்க்னகயில் இனினம இருக்கும் மற்றும் முதியோர் இல்லமும் குனறந்துயிருக்கும்.

  6. pali

    உஙக படைப்பு நல்லா இருக்குது. வாழ்த்துகீறோம். நோய்களுக்கு மூலகாரணம் மன அழுத்தம்தான். சரிதான்.

  7. SubhasriSriam,Bahrain

    அன்பை பொழிந்த அனைத்து நண்பர்களுக்கும்,நண்பிகளுக்கும் மிக்க நன்றி. திரு. மனோ அவர்களே வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும், சில சமயம் வெறுமையாக தோன்றும். அப்பொழுது நமக்கு பிடித்த கலைகளை முயற்சி செய்யும்போது மனது லேசாகிவிடும்.

Comments are closed.