வணக்கம் நண்பர்களே!
எப்படி இருக்கீங்க? நான் நல்லாருக்கேன் (நீங்க திரும்ப என்கிட்ட நலம் விசாரிச்சீங்கதானே!) கொஞ்ச நாளாச்சு உங்ககிட்ட பேசி…
ஏப்ரல் – மே, பள்ளிக்கூடத்துக்கெல்லாம் விடுப்பு. நமக்கு இப்படி ஒரு 2 மாசம் விடுப்பு கிடைக்காதான்னு இருக்கு. பேசாம, சின்னப் பிள்ளைங்களாவே இருந்திருக்கலாம். ஒரு கவலை இல்லை, வருஷத்துக்கு 2 மாசம் விடுமுறை வேற… நான் படிக்கிற காலத்தில் ஏப்ரல் – மே மாசங்கள்ல ஊரை நாடிப் போவோம். 10 நாள் ஒரே கொண்டாட்டமா இருக்கும். குலதெய்வம் கோயில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொந்தக்காரங்க வீட்டில் சாப்பாடு, விளையாட்டு, திரும்பி வரும்போது ஊர்க்காசுன்னு என்னென்னமோ… இப்பல்லாம் இதை நினைச்சே பார்க்க முடியலை.. 3 நாள் போய்ட்டு வர்றதுக்கு அலுவலகத்திலும், வீட்டிலும் ஆயிரம் ஏற்பாடு பண்ணி வைக்க வேண்டிருக்கு… இருந்தாலும் இந்தப் பழக்கத்தை விடாமத் தொடருணும்னு மனசுக்குத் தோணுதுங்க. வருஷம் ஒரு தடவையாவது ஊரைப் போய்ப் பார்க்கணும். வழக்கமான வாழ்க்கையிலருந்து ஒரு மாறுதல், எல்லாரையும் பார்த்துப் பேசற சந்தோஷம், நாம இன்னும் முழுக்க மேற்கத்திய கலாசாரத்துக்குப் போயிடலங்கற நிம்மதி இப்படி எத்தனை எத்தனையோ அர்த்தம் இருக்கற மாதிரி எனக்குத் தோணும். உங்களுக்கும் இப்படித் தோணும்தானே.. எழுதி அனுப்புங்களேன் உங்க ஊர், படிக்கிற காலத்தில பண்ணின சேட்டை இதெல்லாம் பத்தி…
ப்ஹ்ரைனில் இருக்கும் நண்பர்களே, இந்த மாசம் 15ம் தேதி உங்க ஊர் அல் ராஜா பள்ளிக்கூடக் கலையரங்கிற்கு போனீங்கன்னா, ஒரு பெரிய சாதனையாளரைப் பார்க்கலாம். அவர் வேற யாரும் இல்லீங்க. பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நீலு தான்.
இவர் நடிச்ச "மௌலியின் ‘ப்ளைட் 172’" நாடகம் ரொம்பப் பிரசித்தி. அது குறுந்தகடு வடிவில் இங்க கிடைக்குது: http://www.nilashop.com/product_info.php?products_id=70
அவரோட சாதனைகளைப் பாராட்டி, பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம், "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கறதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கு. கூடவே, நீலு அவர்கள் வழங்கும் நகைச்சுவை விருந்து/ கலந்துரையாடல்/ மற்றும் இன்னிசை நிகழ்ச்சியெல்லாம் இருக்கு.
இடம்: அல்-ரஜா பள்ளிக்கூடம், மனாமா, பஹ்ரைன். நேரம் : மாலை : 6.30 மணி. அனுமதி இலவசம்.
மேலும் தெரிஞ்சுக்க, இங்க சொடுக்குங்க: http://bharathiassociation.blogspot.com
பஹ்ரைன் அன்பர்கள் தவறாம இந்த விழாவைப் போய்ப் பாருங்க. எப்படியிருந்துச்சுன்னு எனக்கு ஒரு வரி எழுதிப் போடுங்க.
வோ(ட்)டபோன் விளம்பரம் பார்க்கறீங்களா? அந்த முட்டைத் தலை கதாபாத்திரம் அருமையா இருக்குல்ல? கிரிக்கெட் பார்க்கிறேனோ இல்லையோ, இந்த விளம்பரங்களைப் பார்த்து சிரிக்காத நாளே இல்லை. சும்மா நச்சுன்னு மனசுல ஒட்டிக்கிற மாதிரி புத்திசாலித்தனமான விளம்பரம். பெரிய பெரிய நடிகர்கள் இல்லாமலே ஒரு பொருளை வெற்றியடையச் செய்ய முடியும்னு காட்டிருக்காங்க. என்ன ஒரு புதுமையான சிந்தனைன்னு நினைச்சு நினைச்சு ஆச்சரியப்பட வைக்கிற இந்த விளம்பரத் தயாரிப்பாளர்களுக்கு என் சார்பா எல்லாரும் ஒரு ஓ போடுவோமா?
இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் வெறும் கணிப்பொறியில் உருவான பொம்மைகள் இல்லை. எல்லாருமே மனிதர்கள் தான். இந்தக் கதாபாத்திரத்துக்கு ‘சூசூ’(zoozoo)ன்னு பேரு. சூசூவா நடிச்ச அத்தனை பேரும் ஒரு பொம்மைக்கு உயிர் கொடுத்திருக்காங்கன்னு தான் சொல்லணும். இந்த விளம்பரம் உருவாக்கின விதம், செய்தவங்க எல்லா தகவலும் இங்க தெரிஞ்சுக்கலாம்.
http://www.in.com/videos/watchvideo-making-of-the-vodafone-zoozoo-ads-3283681.html
இந்த விளம்பரங்களை எல்லாம் பதிவிறக்கிப் பார்க்கணும்னா, இங்க போகலாம்.
http://www.vodafone.in/existingusers/pages/vodafonetvc.aspx
படமாவே பார்க்கணும்னா இங்க போகலாம்: http://www.youtube.com/user/vodafoneipl
இதில் எனக்கு ரொம்பப் பிடிச்சது: http://www.youtube.com/watch?v=moSBmKUm0pk&feature=channel_page
உங்களுக்கு எந்த விளம்பரம் பிடிச்சிருக்குன்னு எனக்குக் கண்டிப்பா எழுதணும்.
இந்த விளம்பரங்களைப் பத்திப் பேசிட்டிருக்கும் போது ஒருத்தங்க சொன்னாங்க இப்படி, “எங்க அண்ணா அமெரிக்கால இருக்கார். அங்கெல்லாம் விளம்பரங்கள் ஒரே மாதிரி அழுமூஞ்சித்தனமா இருக்குமாம். இந்தியா வந்திருந்தப்போ, விளம்பரங்கள்லாம் வித்தியாசமா இருக்குன்னு பிள்ளைங்களுக்கு ஒரே குஷி. சரவணா ஸ்டோர் விளம்பரமெல்லாம் பதிவு பண்ணிட்டுப் போனார்”. அமெரிக்க விளம்பரங்கள்லாம் உயிரோட்டமே இல்லாமத்தான் இருக்குமா? தெரிஞ்சவங்க எழுதி அனுப்புங்களேன்.
புத்தகம் படிக்கிறது ஒரு நல்ல பழக்கம். ஆயிரம் ஆசான் சொல்ல இயலாததை ஒரு நூல் சொல்லித் தரும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. நல்ல நூல்களை தேர்ந்தெடுத்துப் படிக்கணும். (உதாரணத்துக்கு என்னோட அரட்டைகள் – ஐய்யய்யோ அடிக்க வராதீங்க..) நம்ம ஜம்பு சார் எழுதின சிந்தனைப் பூக்கள்ங்கற நூல் இந்த வகையைச் சேர்ந்ததுதான். குட்டிக் குட்டிக் கதைகள், சம்பவங்கள் மூலமா எவ்வளவோ விஷயங்கள் சொல்லிருப்பாரு. வாங்கிப் படிச்சுப் பாருங்க:
http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=447
அது மாதிரிதான் இந்த நூலும். இந்த நூல் பெரிய தலைவர்களைப் பத்தி பிள்ளைங்க தெரிஞ்சுக்கவும், கட்டுரை, பேச்சுப் போட்டிகள்ல பங்கேற்கிறதுக்கும் உதவியா இருக்கும்: http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=435
விடுப்பில் வீட்டில இருக்கற பிள்ளைங்களை ஏதாவது புதுமையா செய்யவோ, கத்துக்கவோ சொல்லுங்க. ஓவியம், கைவினைப் பொருட்கள் இதிலெல்லாம் ஆர்வம் இருக்கிற பசங்களுக்கு இந்தப் பகுதியைக் காட்டுங்க: https://www.nilacharal.com/anjarai/kaivelai/index.html
இது மாதிரியான திறமைகள் உங்க கிட்ட இருந்தா, நிலாச்சாரலுக்குத் தெரியப்படுத்துங்க.
சேவை மனப்பான்மை உள்ளவங்க இங்க ஒரு பார்வை பாருங்க: https://www.nilacharal.com/info/nilananbhan/index.html
என்னதிது, ஒரே முகவரியா குடுத்துத் தள்ளிட்டேன்னு பார்க்கறீங்களா? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உங்ககிட்ட சொல்லிடணும்னு ஒரு ஆர்வக்கோளாறுதான். சரி உங்ககிட்ட இருந்து விடைபெறுவதற்கு முன்னாடி ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.
ஓட்டுப் போட மறக்காதீங்க. உங்க கடமையை சரியாச் செய்யுங்க.
அன்புடன் விடைபெறுவது,
உங்கள் ஜோ
“
கோட்
As for commercials, they are the same all over except in some countries they are worse than others. In the US most of the commercials are about fast food, beer, cars, cell phones, computers, retail goods, pharmaceuticals like viagra, levitra, cialis and drugs for bladder problems, and so many mundane things. Most of them are lifeless. But there are certain companies whose commercials are meaningful, gentle, and decent. For example IBM, GE, and Boeing feature commercials which portray human nature in gentle tones. On the other hand I have seen several commercials on the Indian television which are just run-of-the-mill versions with some stupid jingles. What you point out are some exceptions.
ஸெம மேட்டரெல்லம் அனுப்பி அசத்துரென்க போஙக…..
நன்றி வெங்கடேஷ்..
தெளிவாவும் விரிவாவும் பதிலனுப்பினதுக்கு நன்றி Dr. சார்..