சில்லுனு ஒரு அரட்டை

வந்தனம் வந்தனம்னு வாசகர்களுக்கு வணக்கம் சொல்றது கொங்கு நாட்டு சிங்கி. எல்லோரும் எப்படியிருக்கீங்க? நாங்க நல்லாருக்கோம். வெயில் கொளுத்துதா? இங்கே இப்போதான் ஆரம்பிக்குது.

வெயில் படுத்தறதை விடக் கொடுமையான விஷயமா இங்கேயிருக்கும் மக்கள் நினைக்கறது உறவினர்களை விட்டுட்டு இருப்பதைத்தான்! என்னதான் நாங்க ஃபிளைட், ஃபிளாட், பணம்னு இருந்தாலும் ஒரு வருஷம் வேலை உறுதி. அதில் ஆறு மாசத்துக்குத்தான் விசா இருக்கும். அடிச்சுப் பிடிச்சு விசா வாங்கினா ஆறு மாசத்துக்குத்தான் வேலை இருக்கும். இதில் வீட்டோட லீஸ், குழந்தைகளோட படிப்புனு ஒன்றையும் உறுதியாய் சொல்ல முடியாத நிலை.

நிலாவோட கருவறைக் கடன் கதை கூட இந்த நிலைமையை அடிப்படையாக் கொண்டதுதான்… படிச்சிட்டு வாங்க:
https://www.nilacharal.com/stage/kathai/kat154.html

விதை ஒன்று விதைக்க சுரை ஒன்று முளைக்குமா.. என்பது அந்நாளைய வழக்குச் சொல். ஏன் முளைக்காது? இதோ இந்தக் கதையைக் கேளுங்கள்.

தபால் அலுவலகம் ஒன்று. அதில் சரியாக விலாசம் எழுதப்படாத கடிதங்களை நன்றாக சோதித்து சேர வேண்டியவருக்குச் சேர்க்க வேண்டிய பணியில் ஒரு ஊழியர்.

ஒரு நாள் கடிதம் ஒன்று வந்தது ‘எனையாளும் இறைவனுக்கு’ என விலாசம் எழுதி. கடிதத்தைப் பிரித்துப் படித்தார் அவர். அதில் எழுதி இருந்தது பின்வருமாறு :

‘என்னை ஆளும் இறைவனே! நான் 83 வயதினைத் தாண்டிய விதவை. எனக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறேன். நேற்று என் பணப் பையை யாரோ ஒருவன் திருடிக் கொண்டு போய் விட்டான். அதில் இருந்த ரூபாய் நூறில்தான் அடுத்த மாத ஓய்வூதியம் வரும் வரை காலம் தள்ள வேண்டும் நான். இதன் நடுவில் இன்னும் பத்து நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. அதற்கு எனது பால்ய ஸ்னேகிதிகள் இருவரை சாப்பிடக் கூப்பிட்டு இருக்கிறேன். அவர்களுக்கு என்ன விருந்தளிப்பேன் என்று தெரியவில்லையே ஈசா! நீதான் எனக்குத் துணை புரிய வேண்டும்.

இப்படிக்கு உன்னை நம்பி இருக்கும்
வள்ளியம்மை.

தபால் நிலைய ஊழியரின் கண்கள் பனித்தன. கடிதத்தை சக ஊழியர்களிடம் காட்டினார். அனைவரும் கிழவிக்கு உதவி செய்யத் தீர்மானித்து தங்கள் கைகளில் இருந்த பணத்தை எல்லாம் சேர்த்தனர். ரூபாய் தொண்ணூற்று ஆறு தேறியது. அதை மணி ஆர்டரில் கிழவிக்கு அனுப்பினர் கூப்பனில் இந்த வாசகத்தோடு: ‘உன் கடிதம் கிடைத்தது. நீ கேட்டிருந்த உதவி இதோ. இப்படிக்கு, உன் கடவுள்.’

இரண்டு நாட்கள் கழித்துத் தபால் அலுவலகத்துக்கு கடவுள் பெயருக்கு மீண்டும் ஒரு கடிதம் வந்தது.

அன்புக் கடவுளே! காலத்தில் நீ செய்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன். ஆனால் ஒன்று. நீ அனுப்பிய பணத்தில் நான்கு ரூபாய் குறைவாக இருந்தது. கட்டாயம் அது அந்தத் தபால் நிலையத்தில் பணி புரியும் பத்துத் திருடர்களில் ஒருவன் செய்த வேலையாகத்தான் இருக்கும்.

உன்,
வள்ளியம்மை

எப்படி இருக்கு பாருங்க.. பரிதாபப்பட்டவர்களோட நிலை! இது மின்னஞ்சலில் வந்த கதை. இதே போல நான் எழுதின கதையை படிச்சிட்டு வாங்க, சிரிக்கப் போகலாம்.

https://www.nilacharal.com/ocms/log/09280910.asp

மின்னஞ்சல் கதைகளை நான் தமிழாக்கம் பண்ணிக் கூடவே சந்திலே பொந்திலே நம்ம கற்பனை ஆட்டோவை ஓட்டறதுக்குள்ள நம்ம தேவிராஜன் சிரிக்க மட்டும்னு எழுதி கலக்கறாங்க. இருந்தாலும் தேவி ரி.க.கு. உறுப்பினர் என்பதால் அவரோட கலக்கல் எங்களோட கலக்கல்.

அவரோட படைப்பையும் படிச்சு சிரிச்சிட்டு வந்துடலாமே…

https://www.nilacharal.com/ocms/log/01251020.asp

நிலாச்சாரல்ல குறிப்பா ரிஷபனோட கதை, கவிதை இரண்டும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடல்ல இருக்கற முத்துல எந்த முத்து ரொம்பப் பிடிச்சிருக்குனு சொல்ல முடியாதில்ல. எனக்கு ரிஷபனோட எல்லா படைப்பு முத்துக்களும் பிடிக்கும். நீங்க படிக்கணுமா?

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Rishaban

நிலா ஷாப்பில் சக்கரை நோயால் அவதிப்படுற என் மாமியாருக்கு Music for Diabetes என்னும் இசைத்தட்டு வாங்கினேன். நீங்களும் வாங்கணும்னா நிலா ஷாப்புக்கு வாங்க:

http://www.nilashop.com/product_info.php?products_id=477

எப்படியோ ஒரு துக்குணூண்டு ஓசி கதையோட அரட்டையை முடிச்சாச்சு. நிலாகிட்டே டோஸ் கிடைக்காமலிருந்தா ஏமாந்த யாருக்காவது மொட்டை போடறதா வேண்டிக்கிட்டிருக்கேன். கொஞ்சம் ஆஹா ஓஹோன்னு பின்னூட்டம் போட்டுக் காப்பாத்தி விடுங்க, நண்பர்களே! அதுக்கு பிரதி உபகாரமா அடுத்த அரட்டையைக் கண்டிப்பா கலகலப்பாக்கிடுவோம்!

மீண்டும் சந்திக்கும் வரை,

"அன்பாய் இருங்கள்! ஆரோக்கியாமாய் இருங்கள்" எனக் கூறி,
போய் வருகிறேன்.

About The Author

5 Comments

  1. Balasundar Senthilvel

    தலைவி, எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்? கட்டுரை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை.

    //நிலாகிட்டே டோஸ் கிடைக்காமலிருந்தா ஏமாந்த யாருக்காவது மொட்டை போடறதா வேண்டிக்கிட்டிருக்கேன். //

    யாருக்காவது எதுக்கு? எங்க ரிஷி அண்ணனுக்கே போடலாமே!! அவரு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவரு………………

  2. SANTHOSHI

    கவிதா! ஓசி கதை அருமை. வாழ்த்துக்கள். //எங்க ரிஷி அண்ணனுக்கே மொட்டை போடலாமே// சகோதரர் பாலசுந்தர் சக்திவேல் அவர்களே!! என்ன இது? ரிஷியை நல்லவர் என்கிறீர்களா அல்லது ஏமாந்தவர் என்கிறீர்களா?? ஏன் இந்த வன்முறை?? தயவுசெய்து இந்த மாதிரி பின்னூட்டம் போட வேண்டாமே!! பின்னூட்டம் என்பது, கட்டுரை எழுதுபவர் எழுதியதில் உள்ள நிறை குறைகளை சுட்டிக் காண்பிக்க மட்டுமே நமக்கு அவர்கள் கொடுக்கும் உரிமை. அதை நாம் அளவோடு பயன்படுத்துவோம். இது ரிஷியின் வாசகிகள் சார்பாக நான் கேட்டுக் கொள்வது. தவறாக நினைக்க வேண்டாம். (//அவரு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவரு……..:-))

  3. Hema

    கவிதா கொஞ்சமா சொன்னாலும் ஆழமான விசயங்களை சொல்லி இருக்கீங்க! கலக்கலான போட்டோஸ் மட்டும்தான் இல்ல! மற்றபடி எப்பவும்போல நல்ல விசயங்களை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி!!!

  4. Balasundar Senthilvel

    சந்தோஷி, நீங்க உங்கள ரிஷியோட வாசகின்னு சொல்றீங்க, நான் தம்பின்னு சொல்றேன், எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நாங்க இந்த மாதிரி பின்னூட்டம் போட்டாலும் ஒரே குடும்பமா இருக்கோம் எங்க ஒற்றுமையை குழைக்க முயற்சி செய்ய வேண்டாம்.

    //பின்னூட்டம் என்பது, கட்டுரை எழுதுபவர் எழுதியதில் உள்ள நிறை குறைகளை சுட்டிக் காண்பிக்க மட்டுமே நமக்கு அவர்கள் கொடுக்கும் உரிமை//

    அவ்வாறாயின், எனது பின்னூட்டத்திற்கு பதில் அளித்ததன் காரணம் என்னவோ?

  5. Kavitha Prakash

    பாலசுந்தர் சக்திவேல் :

    சில நாள் விடுமுறையில் இருந்தேன்.

    சந்தோஷி , Hஎமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Comments are closed.