சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம், வந்தனம், ஸ்வாகதம்.

நீங்களே அரட்டை அடிச்சுக்கிட்டு நாங்க வரல்லேன்னா எப்படி? அதான் மறுபடியும் களத்தில இறங்கிட்டோம்!

தலைப்பே சில்லுனு ஒரு அரட்டைனு வச்சுட்டு சில்லுனு சில தகவல்கள் சொல்லாட்டா எப்பிடி?

சுத்திவர எல்லா இடமுமே பனிக்கட்டியா இருக்கற இடத்தை மனசில கற்பனை பண்ணிக்குங்க. மரங்கள், மலை என்று எதுவும் கிடையாது. எல்லாமே ஐஸ் கட்டிகள்தான்! அப்ப இப்படியெல்லாம்கூட நடக்கும்னு ஒரு கற்பனை!

அவ்வளவு குளிர்!

பிக்பாக்கெட் அடிக்கிறவன் அடுத்தவங்க பாக்கெட்ல வச்ச கையக் கூட எடுக்கல்ல! சூடா இருக்கட்டும்னு விட்டுட்டுடான்! அவ்வளவு பனி!

மாட்டிடம் இருந்து பால் கறக்கறப்போ ஐஸ்கிரீமாகவே வந்தது! பழுப்பு நிற மாட்டுலேருந்து பால் கறக்கறப்போ சாக்லெட் ஐஸ்கிரீமா வந்துதுன்னா பாருங்களேன்!

அவ்வளவு பனியா இருந்ததில, பேசற வார்த்தையெல்லாம் காத்தில உறைஞ்சு போச்சு! அதை கேக்கணும்னா அந்த உறைஞ்ச வார்த்தைகளைப் பிடிச்சு நெருப்புப் பக்கம் கொண்டு போனாத்தான் முடியும்!

கண்ணாடி கடைக்காரங்க எல்லாம் கண்ணாடியைத் துடைக்க ஐஸ் ஸ்க்ராப்பரையும் சேத்துக் கொடுக்கறாங்க!

பனிப்போர்னு சொல்றோமே, அதுக்கு என்ன அர்த்தம்? ஏன் பனிப்போர்னு சொல்றோம்? பகையை உள்ளுக்குள்ளேயே மறைச்சு வெச்சுக்கிட்டு வெளிக்காட்டாம, அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருத்தரை ஒருத்தர் வேவு பார்த்து அவங்க ரகசியங்களைத் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சாங்க. ஆனா வெளிப்படையா சண்டை போட்டுக்கறதில்ல. உள்ளுக்குள்ளேயே புகைஞ்சுக்கிட்டு வெளியே நெருப்பு வராம இருக்கறதினாலதான் இதற்கு பனிப்போர் என்று பெயராம்!

சரி, கொஞ்சம் சூடான மேட்டருக்கு வருவோம். டெண்டுல்கர் வேலையே எப்போதும் ஏதாவது ரெக்கார்டை முறியடிக்கிறதும், புது ரெக்கார்ட்டை உருவாக்குறதும்தான். 37 வயசிலே இந்தப் போடு போடறாரே..! இதுவரைக்கும் யாரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டில இரட்டை சதம் போட்டதில்லை. இப்ப நம்ம டெண்டுல்கர் அந்த ரெக்கார்டையும் ஏற்படுத்திட்டாரு! இவரை ரன் எடுக்கும் மெஷின்னு கூடச் சொல்லலாம். மகாராஷ்டிர அரசு டெண்டுல்கரோட சாதனைக்காக பாரத ரத்னா விருது கொடுக்கணும்னு சொல்லுது. டெண்டுல்கரோ ‘நாட்டுக்காக ஆடுவதுதான் எனக்கு முக்கியம். பாரத ரத்னா விருதெல்லாம் அப்புறம்தான்’ அப்படீன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காரு! (கொடுத்தா வேண்டாம்னு சொல்லல!).

அதற்குள் இன்னொரு பக்கம். டெண்டுல்கர் ஒன்றும் முதல் ஆளாக இந்த சாதனையைச் செய்யவில்லை. ஆண் பெண் வித்தியாசம் விளையாட்டிலும் பார்க்கிறார்கள். பெலின்டா கிளார்க் எனும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை 1997-ல் மும்பையில் நடந்த ICC உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டென்மார்க்குடன் விளையாடும்போது 155 பந்துகளில் 229 ரன்கள் எடுத்து சாதனை புரிந்திருக்கிறார். அதுவும் ஒருநாள் போட்டிதான். ஆனால் இன்று டெண்டுல்கரைப் பாராட்டுபவர்கள் யாருமே இப்படியும் ஒரு பெண் 229 ரன்கள் குவித்திருக்கிறாள் என்று சொல்லவில்லை. கிரிக்கெட் விளையாட்டு என்னும்போது அதில் ஆணென்ன.. பெண்ணென்ன..? உலக மகளிர் தினம் கொண்டாடும் வேளையில் மகளிருக்கு உரிய நியாயமான இடம்கூட கொடுக்கப்படாமல் இருப்பது ஏதோ நெருடுகிறது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தை சமீபத்தில் பார்த்தேன். அன்றைக்கு அந்தப் படத்தைப் பார்க்க வந்திருந்த பத்து பேரில் நானும் ஒருவன். என்னென்னமோ கிராபிக்ஸ் தொழில்நுட்பம் என்றெல்லாம் சொல்கிறார்களே என்றுதான் போனேன். இவ்வளவு கேவலமான படத்தை இதுவரை பார்த்ததில்லை. ஆபாசம், அருவருப்பு.. இவைகளோடு சோழ மன்னர்களையே இழிவுபடுத்தும் வகையில் கதையமைப்பு. எல்லாமே ஓட்டைதான்! என்ன கிராபிக்ஸும் தொழில் நுட்பமும் இருந்தாலென்ன? கந்தல் துணியைத் தங்க ஊசியால் தைப்பது போன்றதுதான்!

அதே சமயம் தமிழ்ப் படம் என்று ஒரு படம் பார்த்தேன், முழுக்க முழுக்க இதுவரை வெளியான எல்லாப் படங்களையும் நையாண்டி செய்திருந்தார்கள். ரொம்ப ரசிக்கும்படி இருந்தது. சரியான லொ¡ள்ளு படம்!

அடுத்து ஒரு உபயோகமான செய்தி சொல்லப் போறேன். (ஆச்சரியமா இருக்கா?)

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்கு மெயில் பண்னுங்க!
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.

நீங்க cop@vsnl.net-க்கு மெயில் அனுப்பறப்போ உங்க பெயர், விலாசம், போன் மாடல், எந்த வருடம் தயாரிக்கப்பட்டது.. கடைசியா உபயோகப்படுத்தின நம்பர், உங்க ஈமெயில் விவரம், எப்போ தொலைஞ்சுது, IMEI No எல்லாவற்றையும் கொடுங்க. 24 மணி நேரத்தில் போன் பற்றிய தகவல் உங்களுக்கு வரும். (அதுக்காக போனைத் தொலைக்க வேண்டாம் – பத்திரமா பாத்துக்குங்க!)

ஆச்சு, இன்னு கொஞ்ச நாளில IPL ஆரம்பிக்கப் போகிறது! ஒரு மாசத்துக்கு மேல பரபரப்புதான்! இந்தத் தடவை ஐ.பி.எல். மேட்ச் ஆட்டங்களை சினிமா தியேட்டர்லேயே காட்டப் போறாங்களாம், விளம்பரங்கள் இல்லாம. யாராவது ஒரு பிரபலம் தியேட்டருக்கு வருவாராம். அப்புறம் இடைவேளையில் தின்பண்டங்களும் கிடைக்கும். படத் தயாரிப்பாளர்களெல்லாம் இதுக்கு கடுமையா எதிர்ப்புத் தெரிவிச்சிருக்காங்க! ‘ஏற்கெனவே படங்கள் ஓட மாட்டேங்குது. அதுல இது வேறயா’ன்னு முணுமுணுக்கிறாங்க!

ஸ்போ¡ர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடெட் இந்தியா பத்திரிகை சமீபத்தில் ஒரு பட்டியல் வெளியிட்டது. இந்தியாவில் விளையாட்டில் பிரபலமான 50 நபர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு 23-வது இடம் கிடைத்திருக்கிறது. ஐ.பி.எல். மேட்சில் பஞ்சாப் அணியை திறமையுடன் நடத்துவதற்காகத்தான் இந்தப் பெருமை கிடைத்திருக்கிறதாம். ஆனால் சானியா மிர்சாவோ இந்தப் பட்டியலில் இறுதியில்தான் இருக்கிறார்! இது எப்படி இருக்கு!!

சமீபத்தில ஒரு திடீர் காபிக்கு விளம்பரம் பார்த்தேன். அதுல மாட்டுப்பெண் காபி போடறா. மாமியார் ஆச்சரியமாப் பாக்கறா… மாட்டுப் பெண் மாமியாரைப் பார்த்து சதி லீலாவதி பாணியில் ஒரு மர்மப் புன்னகை செய்ய, மாமியாரும் அப்படியா என்பதுபோல ஆச்சரியமாக அதே பார்வையைப் பார்க்கிறாள். ஒன்றுமில்லை. இரண்டாவது டிகாக்ஷன் போடுகிறாள் – அது முதல் டிகாக்ஷனைப் போலவே இருக்குமாம். (ஆமாம்! முதல் டிகாக்ஷனே இரண்டாவது டிகாக்ஷனைப் போலதானே இருக்கும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்!)

ஐந்து தலை நாகம் பார்த்திருக்கிறீர்களா? இயற்கையின் அதிசயத்தை இங்கே பாருங்கள்! மின்னஞ்சலில் உலா வந்தது. இங்கே போட்டுவிட்டோம்.

5 Head Snake
 
 
 

மற்றவர்களிடம் பேசும்போது எப்படிப் பேச வேண்டும் என்பது பற்றி முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. அட, சுவாரசியமாக இருக்கிறதே.. இன்னும் சொல்லுங்கள்!
2. நீங்க என்ன சொல்றீங்கன்னு நன்னாப் புரிய ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.
3 அப்போ உங்க உணர்வுகள் எப்படியிருந்தது?

எப்படி சம்பாஷணையை ஆரம்பிப்பது?

முதலில் பாராட்டுங்கள்.
அவரிடம் யோசனை கேளுங்கள்.
எதற்காவது அவரை உதவி செய்யச் சொல்லுங்கள்.
அவரது அபிப்பிராயத்தைக் கேளுங்கள்.

நம்ம சம்பாஷணையை எப்படி முடிப்பதுங்கறதுதான் பிரச்சினைங்கறீங்களா?

கடைசியா… வழக்கம் போல ஒரு தத்துவம் மட்டும் சொல்லி முடிச்சுடலாம்…

பல நேரங்களில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா.. இல்லையா என்பது அதை நீங்கள் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. உறுதியுடன் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று உங்கள் மனசு சொல்வதைக் கேளுங்கள். இதனால் பிறகு ஒரு நாள் ஐயோ, அன்று அப்படி செய்யாமல் போய்விட்டோமே என்று வருந்த மாட்டீர்கள்.

Many times in life, whether a thing is worth doing or not, really depends on how u look at it.

இன்னும் ஒண்ணே ஒண்ணு…

கிப்லிங் என்ன சொல்றாருன்னா:

என்னிடம் ஆறு உண்மையான வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்
அவர்கள்தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்
அவர்களுடைய பெயர்கள் ‘என்ன, ஏன், எப்போது எப்படி, எங்கே மற்றும் யார் என்பதுதான்!!

About The Author

8 Comments

  1. Jo

    கற்பனை பண்ணிப் பார்த்தப்போ, இது நிஜமாயிருந்தா எப்படி இருக்கும்னு தோணுது. 229 ரன்கள் – புதிய தகவல். ஐந்து தலை நாகம்னு நீங்களும் கிராஃபிக்ஸ் படம் போட்டுக் காட்டிட்டீங்களே!!

  2. maleek

    அரட்டையை சும்மா சில்லிட்டிங்க.
    கப்லிங்ணா வணக்கம்ணா.

  3. Dr. S. Subramanian

    I forgot to mention one thing in my previous post. Yes, there are certain aberrations in nature such as Siamese twins, five-legged calf, and similar species. National Geographic once showed a two-headed snake. We also know of iru talaik koLLi eRumbu” (when I say eRumbu I am reminded of our Jo!). In that case the ant has two heads attached to each other but it is a liability for it because the motion is governed independently by the two heads with the result it suffers not knowing how to move. There is a saying in Thamizh “iru talaik koLLi eRumbu pOl taviththAn”.”

  4. Rishi

    ஜன்பத் ஐயா,
    அது இயற்கையின் அதிசயமல்ல. கிராபிக்ஸ் வல்லுநரின் கைத்திறன்!

    டாக்டர்
    தகவல்களுக்கு நன்றி. இன்னும் கொறும்பை… ஸாரி எறும்பை மறக்கலியா நீங்க…

  5. bharani

    அரட்டை சுவாரஸ்யமாக இருந்தது. எப்படி உரையாடுவது என்று சொன்னதற்கு நன்றி.நம்மில் நிறைய பேருக்கு இது தான் பலவீனம். சுவாரஸ்யமாக பேசும் கலை கைவரும் போது தான் நம் கருத்துகள் ஏற்கப் படுகிறது. தத்துவமும் தேவையான ஒன்றே.

  6. Yocks

    மிகவும் ஆச்சரியமான செய்தி, பெலின்டா கிளார்க் 1997 லிலேயே 229 ரன் எடுத்திருக்கிறார்கள் என்று. டெண்டுல்கர், 25 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அவரது 200 ரன்களில் அடங்கும். இவர், 22 பவுண்டரிகள் அடித்துள்ளார். ஆண்கள் தினறுகையில் இந்த பெண்மனி 229 எடுத்திருக்கிறார் என்றால், பெண்களின் பந்து வீச்சு எந்தளவிற்கு இருக்கும் என நிணைத்துக்கொள்ளவேண்டியது தான். அதிகமாக ஓடியே ரன் எடுத்திருப்பார் போல. பார்க்க சின்ன பிள்ளைகள் ஆட்டம் மாதிரி தான் இருந்திருக்கும். எனக்கு இப்பொழுது இந்த செய்தி பார்த்த பிறகு, மகளிர் ஆட்டத்தை காணவேண்டிய ஆவல் வந்துவிட்டது.

  7. Rishi

    யோக்ஸ், (??)
    மகளிர் கிரிக்கெட்டும் பார்க்க நன்றாகவே இருக்கும், கொஞ்ச நேரத்திற்கு! அப்புறம் கொட்டாவி வந்து விடும்!! (இதைச் சொல்வதற்கு எனக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள்!!!!!) வீட்டில் இதைச் சொன்னால் அம்மா சண்டைக்கு வருகிறார்கள் அதெப்படி பெண்பிள்ளைகள் விளையாட்டை நீ அப்படி சொல்லப் போச்சு” என்று…!!”

Comments are closed.