உ
என்னையும் உங்க அரட்டை மன்றத்துல சேர்த்துக்கிட்டதற்கு உங்களுக்கு சின்ன(பெரிய) நன்றிகள். என்னடா இவன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறானேன்னு பாக்குறீங்களா?. நான் மட்டும் இல்லிங்க கிறிஸ்தவர்கள் ன்னும், முஸ்லிம்கள் ன்னும் சான்ஸ்க்ரிட்காரர்கள் ன்னும் போட்டுதான் எந்த காரியத்தையும் தொடங்குறாங்களாம். இந்தியாவிலேயே கிட்டதட்ட நூற்றுக்கும் மேல் இந்த மாதிரியான குறியீடுகளை பயன்படுத்துறாங்களாம். அட நம்ம இந்தியாவுல மட்டும் இல்லிங்க, உலகம் முழுவதும் கிட்டதட்ட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகள எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பமா பயன்படுத்துறாங்களாங்க
சரி அது கிடக்கட்டும் விடுங்க, சமீபத்துல ‘திருமூலர் திருமந்திரம்’ புத்தகம் ஒன்னு வாங்கினேன். முதலில் இதப்போய் 350/- ரூபாய் குடுத்து வாங்கனுமான்னு யோசிச்ச எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சது அதுக்கு இந்த விலை குறைவுதான்னு. தமிழ் பண்டிட் மாணிக்கவாசகனோட விளக்க உரையோட உமா பதிப்பகம் வெளியிட்டுருக்காங்க. இந்த புக்கோட பைண்டிங் மற்றும் காகிதங்களின் தரமும் நல்லா இருக்கு. சரி..சரி அதுல அப்படி என்ன இருக்குங்கறத நானே சொல்லிடறேன். கைலாயத்துல முழுமையான ஞானம் பெற்ற ஞானி திருமூலர் அப்பிடிங்கறவரு நம்ம தமிழ்நாட்டுலேயே இருக்கற திருவாவடுதுறையில கிட்டதட்ட மூவாயிறம் ஆண்டுகள் தவயோகத்துல இருந்து வருடத்துக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்கள் இயற்றியதே இந்த திருமந்திரம். இதுல சொல்லப்பட்ட கருத்துக்கள் பல நூறு ஆன்மீக புத்தகங்களுக்கு இணையா இருக்குங்க. அதுமட்டுமில்லாம தனி மனித ஒழுக்கத்தையும், வாழும் முறைகளையும் வழியுறுத்தியிருக்காரு திருமூலர். இது நம்ம நிலா ஷாப்ல இருக்கான்னு தெரியல… இல்லன்னா சேர்த்துக்கலாம்னு நினைக்கிறேன்.
சரி இப்ப உங்களுக்கு ஒரு சவால்…
மேலே உள்ள படத்தைப் பார்த்துட்டிங்களா? இந்தப் படத்துல தவளையும் குதிரையும் இருக்குங்க. உங்க வேலை என்னனா, தவளை எது,குதிரை எதுன்னு சொல்லனும் அவ்வளவுதான். இது தெரியாதான்னு சொல்றது எனக்குக் கேட்குது, கடைசில நானே சொல்றேன்.
ஓ.கே அடுத்ததா நமக்கு புடிச்ச சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம்…
தினமும் நடக்குறது, ஓடுறது, சுவாசிக்கிறது, உடம்புல அடிபட்டா வலிக்கிறது இப்படி எல்லாத்தையும் நம்மால உணர முடியுது. ஆனா எப்பவாவது நம்ம வயிறு உணவை ஜீரணிக்கிறத உணர்ந்திருக்கோமான்னா இல்லன்னுதான் சொல்லன்னு. அதையும் நம்மால உணர முடியும்னு சொல்றாங்க.
சரி அத உணர்ந்து நான் இப்ப என்ன செய்யபோறேன்னு கேக்குறீங்களா? சொல்றேன். ஆனா ஒரு எச்சரிக்கை.
அசைவப்பிரியர்கள் ஜாக்கிரதையா வாசிக்கவும், கஷ்டமா இருக்கும்னா இந்த பாரவ விட்டுடுங்க ஓகே வா. பொதுவா ஆப்பிள், ஆரஞ்சுன்னு பழங்கள் சாப்பிட்ட ஒன்னு ஒன்ரறை மணி நேரத்துல முழுமையா ஜீரணமாகி நம்ம குடல் வெறுமையாயிருமாம். பச்சைக் காய்கறிகளான பீட்ரூட், காரட், பூசணிகள சாப்பிட்டா அது நான்கு மணி நேரத்துலயும் இவைகள சமைச்சு சாப்பிட்டா ஏழு மணி நேரத்துலயும் முழுமையா ஜீரணமாயிடுமாங்க. நாம அன்றாட பயன்படுத்தக்கூடிய அரிசி, வெண்ணையெல்லாம் ஜீரணமாக பதினான்கு மணி நேரமாகுமாம். நமக்கு மிகவும் பிடித்த அசைவ சாப்பாடான சிக்கன் 65, தந்தூரி, மட்டன் இவைகள ஜீரணிக்கிறதுக்கு முப்பத்திரெண்டு மணி நேரம் எடுக்குமாங்க. இதையே பச்சையா சாப்பிட்டா (உவ்வே…) ஐம்பத்திரெண்டு மணிநேரமாகுமாங்க. நாம சமைச்ச சிக்கன் மட்டன் எல்லாம் வெளியில ஒரு நாள் இருந்தாலே கெட்டுப் போயிடுது. அப்படின்னா அவைகள் ஒன்ரறை நாள் நம்ம வயித்துக்குள்ள இருந்தா? அம்மாடி நினைச்சாலே பயமாயிருக்குல்ல? வயிற்றுக்குள்ளே உள்ள இவைகளில் பாதி ஜீரணித்தும் மீதம் கெட்டும் போய்விடுகிறது. யோகத்தில இதை முக்கிய கட்டுப்பாடா கடைபிடிக்கிறதால, ஈசா யோகாவை ஏற்படுத்திய சத்குரு ஜக்கி வாசுதேவும் உணவு கட்டுப்பாடு பற்றி விளக்கி கூறியிருக்கிறார். அடிப்படையில நம்ம உடம்பு தாவர உண்ணிக்காகவே படைக்கப்பட்டதுங்கறாங்க. ஆனால் நாம்தான் கிடைப்பதையெல்லாம் வாயில் போட்டுக்கொண்டிருக்கோம்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கோங்க…
நவ் வி கோ டு மைன்ட் ட்ரிக். உங்களோட மனத சோதிக்கிற ஒரு டெஸ்ட். ஒன்னுமில்லிங்க, நம்ம கண்களால பார்த்திட்டிருக்கும்போதே நம்மால ஏமாற முடியுமா? அதெப்படி முடியும் அதான் பாத்துக்கிட்டிருக்கேனேங்கிறீங்களா. மேஜிக் ஷோவிலெலாம் ஏமாத்துறாங்கள்ள அது போலத்தான். கீழ இருக்குற படத்த சும்மா எதார்த்தமா பாருங்க,
இதுல மூன்று உருளைகள் ஒன்னுக்கொண்ணு சுத்திக்கிட்டு இருக்குற மாதிரி தெரியுதா? உண்மையில இதுல எதுவும் சுத்தவே இல்ல. வேணும்னா இதுல உள்ள இரண்டு உருளைகள மறைச்சிட்டு ஒரு உருளையை மட்டும் பாருங்க. அப்படியே இப்ப கீழே உள்ள படத்தைப் பாருங்க…
படம் அப்படியே சும்மா அதிருதுல்ல. நிஜமாவே இதெல்லாம் ஃப்ளாஷ் இல்லைங்க, வெறும் ஜெபெக் இமேஜ்தான். இதுல உள்ள எஃபெக்ட்கள் நம்ம மூளையைத் தப்பா புரிய வைக்குது அவ்வளவுதான்.
இப்ப மேலே சொன்ன தவளை-குதிரை புதிருக்கு வருவோம். இப்போ இந்த படத்தை அம்புக்குறி போடப்பட்ட பக்கமா இருந்து பாருங்க. இப்ப சொல்லுங்க எது தவளை? எது குதிரைன்னு?.
ஹி…ஹி… கொஞ்சம் மொக்கையாதான் இருக்கோ!
பொதுவா இதுமாதிரி எழுதுறவங்கெல்லாம் அவுங்களுக்கு விருப்பமான விஷயங்களைத்தான் எழுதுவாங்க. எனக்குப் புடிச்ச விஷயங்கள் வேறயா இருந்தாலும் உங்களுக்குப் பயனுள்ளதா சில விஷயங்கள சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். கண்டிப்பா உங்க மேலான கருத்துக்களை கடைசியில இருக்கற கட்டத்துல விட்டுடுங்க.
அன்புடன் ,
மாயன்.
“
Asaivam matter superb.
உ
வணக்கம் மாயன்!
உண்மையிலேயே குதிரையின் தலையையும், தவளையின் முழு உருவத்தையும் ஒப்பிட்டு காட்டியது மிக மிக அருமை.
அனைத்துமே பயனுள்ள விசயங்கள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். என்ன மேஜிக் பார்த்ததில் கண்தான் வலிக்குது.
மாயாஜாலமெல்லாம் பண்றீங்க மாயன்..
நாம் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவின் சராசரி அளவு 1 கிலோ (மூன்று வேளை சாப்பாடு, நொறுக்குத்தீனி, டீ, இதர வகையறாக்கள்).
ஸோ, முப்பது நாளைக்கு 30 கிலோ. ஒரு வருடத்திற்கு 365 கிலோ.
சராசரியாக 60 வருடங்கள் ஒரு மனிதனின் ஆயுட்காலம் என்று வைத்துக்கொண்டாலும் சுமார் 21.9 டன் எடையுள்ள உணவுப்பொருட்களை நம் இரைப்பை அரைத்துத் தள்ளுகிறதாம்!! பாவம்ல…?!
ராஜி,
மாயன் அரட்டைக்கு உ போட்டாருன்னா, நீங்க பின்னூட்டத்துக்கே உ போட்டீங்களே!! எனக்கு எங்க வாத்தியார் பரீட்சை பேப்பர்ல உ போட்டுத்தர மாட்டேனுட்டார். இல்லன்னா.. நானும் பெரிய ஆளா வந்திருப்பேன்!!
ரிஷி! எவ்வளவு பெரிய ஆளா? ஒரு 210கிலோ எடையும், 800செ.மீ உயரமுமா?
லதா,
நான் இல்லன்னு சொன்னா நம்பவா போறீங்க…!
அப்பப்போ விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரங்களை அடுக்கிக்கிட்டே இருப்பேன்! அப்படியான்னு மட்டும் கேட்டுக்கணும்.. சரியா?
மாயன் உங்களது படைப்பு பயனுள்ளதாக உள்ள்து வாழ்த்துக்கள்
Dear Mayan , Thanks, But you can write more from Thirumandiram of Thirumoolar..All the very best.