வணக்கம், வாசகப் பெருமக்களே!
எப்படி இருக்கீங்க? நாங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கோம்.
கோடையைக் கொண்டாட பிளான் ரெடியா? சென்னை வெயிலைத் தாங்க முடியாம கோடையில் மறவபாளையம் (அதுதாங்க நான் பொறந்து வளந்த ஊரு) போக நினைக்கிற நான் அமெரிக்காவில் 110 டிகிரி வெப்பத்தில A/C போட்டுகிட்டு காலத்தைக் கடத்தற கொடுமையை என்னனு சொல்றது? பொருளதாரப் பின்னைடைவால வெயிலோட வேலை தேடற வேலை செய்ய வேண்டி இருக்குது. இன்டர்வ்யூ போக டிப்ஸ் தேடினப்போ ஒரு சூப்பரான டிப்ஸ் யூ ட்யூபில் கிடைச்சுது.
நிலாச்சாரல் வாசகர்களாகிய நீங்களும் பயன் பெற கண்டிப்பா இந்த வீடியோவைப் பாருங்க.
http://youtube.com/watch?v=eh_B4tRC3IM
அட்டகாசமா ஆரம்பிக்க வேண்டிய அரட்டையை புலம்பலா ஆரம்பிச்சிட்டனே!
அச்சச்சோ சேஞ்ச் டாபிக். போன அரட்டையில கிரான்ட் கேன்யான் பத்தி சொன்னேன். இந்த முறை செடோனா அப்படிங்கற சிகப்புக் குன்றுகள் பத்தி சொல்றேன். மனித முகங்களை படைக்கிறதுக்கு முன்னாடி பிரம்மா இந்த செந்நிற மலையில்தான் செய்து பழகியிருப்பார்ன்னு செடோனாவில் நான் நினைச்சேன். அந்தளவுக்கு எங்கு திரும்பினாலும் மனித முகங்களை போல மலைகள். அதில ஒரு மலை மேலே அமைதியே நிறைந்த சர்ச். குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான்னு சொல்ற நம்ம ஊர் பழமொழியை நினைக்க வைச்ச அற்புதமான இடம். அன்பாலான உலகம்ன்னு சொல்ற யேசு பிரான் இருக்கிற இடத்தில கல்லுக்கும் கனிவு இருக்கும்ன்னு சொல்ற மாதிரி இரு பாறைக்கிடையே பூத்துக் குலுங்கும் மலர்கள்.
ரிஷி சொன்ன மாதிரி கேமராவை எடுன்னு சொல்லிட்டு ஒரு பாறை மேலே ஏறி என்னவர் எடுத்த போட்டா உங்களுக்காக:
நிலாச்சாரல்ல திருமதி.விசாலம் தொடர்ந்து ஆன்மிக கட்டுரைகளை எழுதி வராங்க. அவங்க இந்த தேவாலயத்துக்குப் போயிருந்தா அதனோட வரலாறையே தோண்டித் துருவி எழுதிருப்பாங்க. அவங்களோட நாசிக் கபாலேஷ்வர் கட்டுரையை படிக்க:
https://www.nilacharal.com/ocms/log/10130810.asp
பட்டப் படிப்பு தராத வேலையை முயற்சியும் பயிற்சியும் தரும்னு சொல்ல வைக்கிற மாதிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூரல் பிபீஒ சக்கை போடு போடுது. பத்தாம் வகுப்புக்கூட தாண்டாதவங்களுக்கு பயிற்சி கொடுத்து பிபீஒக்களில் வேலை கொடுக்கறாங்க. PUORA ie Providing Urban Opportunities in Rural Areas சொல்லி கலக்கிட்டு இருக்காரு Dr.சந்தோஷ் பாபு.
அதைப் பத்தின விவரங்களை கீழே உள்ள சுட்டியில் நீங்க படிக்கலாம்.
எங்க வீட்டுல என் கணவர், அவரோட தம்பிகள், தங்கைன்னு எல்லோரும் மென்பொருள் நிபுணர்கள். ஆளாளுக்கு Production support, online issues, deployment என விதவிதமான பேரைச் சொல்லி வேலையில மூழ்கியே இருக்காங்க.
வெறுத்துப் போய் நான் எழுதின கடிதாசியால ஏதோ கொஞ்சம் மாற்றம் தெரியுது.
என்ன ஒரே வீட்டில இருந்துக்கிட்டே கடிதாசியான்னு நினைக்கிறீங்களா?.
என்னங்க பண்ணறது? சப்ஜெக்ட்ல ஏதாவது சாப்ட்வேர் வார்த்தையைப் போட்டு இ-மெயில் அனுப்புனாதான் மெயிலையே படிக்கிறாங்க. மாற்றத்தைக் கொடுத்த மடல் என்னைப் போல உள்ள அனைவருக்காகவும் அரட்டையில:
Sub: Installing Husband 1.0
மதிப்பிற்குரிய மென்பொருள் பொறியாளரே!
நான்கு வருடங்களுக்கு முன்னால் நாலு பேர் சொல்ல, நாலாயிரம் பேர் வழி மொழிய, காதலன் 2.0 லிருந்து கணவன் 1.0 க்கு மாற்றப்பட்டீர்கள். அத்துடன் நாத்தனார் 2.4, கொழுந்தனார் 2.6A, கொழுந்தனார் 2.6B ஆகியவையும் குடும்பம் என்னும் கணினியுடன் இணைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை தங்களின் செயல்பாடு பலவிதங்களிலும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நகை, பூக்கள் மற்றும் ஆடைகள் வாங்கும் நேரங்களில் வேலை செய்யவதில்லை. காதலன் 2.0 ஆக இருக்கையில் இவை நன்றாக வேலை செய்தன.
அத்துடன் கணவன் 1.0 பல நல்ல புரோகிராம்களான ரொமான்ஸ் 8.7, லவ் 4.6, அக்கறை 7.8, அரவணைப்பு 2.9 போன்றவற்றை நீக்கி விட்டு T.V. 5.0, MONEY 3.0 , CRICKET 4.1. ஆகிய அதிகம் தேவையற்ற புரோகிராம்களைக் கொண்டுள்ளது.
உரையாடல் 8.0 நடப்பதே இல்லை. House cleaning 7.0 என் கணினியை நொந்து நூலாக்கி விட்டது.
Nagging 3.5ஐ ரன் பண்ணியும் வேலையாகவில்லை.
தாங்க முடியவில்லை, தாங்க முடியவில்லை.
என்ன செய்வேன் என் இனிய தமிழ்க் குடும்பமே!.
என்ன எல்லோரும் நல்லா சிரிச்சிங்களா?. மின் மடலில் வந்த மடலை கொஞ்சம் மாற்றி என் ஸ்டைலில் எழுதி அனுப்பினேன். இதை விட காமெடியா என் கொழுந்தனாரும், நாத்தனாரும் பதில் அனுப்பினாங்க. அதை அடுத்த அரட்டையில சொல்றேன்.
அலுவலகக் களைப்பிலிருந்து விடுபட எடிட்டரம்மா ஏகப்பட்ட ஹிந்தி கஜல், பெங்காலி நாட்டுபுறப் பாடல்கள், கர்நாடக சங்கீதம், சங்கர் லால் போன்ற பழைய தமிழ் படங்களோட பாட்டுக்கள்ன்னு நிலாஷாப்பில் வாங்கி குவிச்சிருக்காங்க.
வாங்க வாங்கலாம், வாழ்க்கையை வாழந்து பார்க்க பழகலாம்.
http://www.nilashop.com/products_new.php
அடுத்த அரட்டையில் சந்திக்கும் வரை,
அன்பாய் இருங்கள் !
ஆரோக்கியமாய் இருங்கள்! எனக் கூறிப் போய் வருகிறேன்.
சி(த)ங்கம்
“
ரொம்ப நல்லாருக்கு உங்க கடிதம்!
பாளையத்தம்மா, உங்கள் கடிதம் அருமை.
எதிர் கடிதங்களைப் படிக்க ஆவல்.
அதுசரி… காதலி 2.6 மனைவி 1.2 ஆனவுடன் என்ன ஆனார்? அதச் சொல்லலியே தாயீ… அப்போத்தானே உண்மை நெலவரம் தெரிய வரும்!!!
நீங்களாவது என் நிலைமையை புரிச்சிக்கிட்டீங்களே!.
ரொம்ப நன்றி ரிஸி.
ரிஷி கேட்டது சரிதான்.. இது பாயிண்ட்! பதில் சொல்லுங்க பாளையத்தம்மா.. (வேப்பிலை இல்லாமல்!) :-))
மிகயொஉம் நல்லா எருந்தது உங கடிதம்.
வாங்க, ஸ்ரீ. பிரகாஷை சேர்ந்து காப்பாத்துவோம்.
அது சரி.. நீங்க நிலாச்சாரல்ல ஏற்கெனவே கதையெல்லாம் எழுதிட்டிருந்த ஸ்ரீ தானே!?
உங்கல் ப்கடைப்புகல் ர்ப்ன்ப ப்ரமதம்
காதலி 2.6 இருக்கையில் இந்திய ஆட்சிப் பணிக்கு தாயராகிக் கொண்டு இருக்க, மனைவி 1.2 ஆகியவுடன் சமைலறையே என் அரசாங்கம் என நிலாச்சாரலில் ஆறுதல் பட்டுக் கொண்டிருக்கிறார். மீதிக் கதையை பாளையத்தம்மன் போட்டோவோட அடுத்த அரட்டையில் தெரிச்சிக்கோங்க.
விமர்சித்த அனைவருக்கும் நன்றி.
ம்ம்… கவிதா சொல்றதும் பாயிண்ட்டாத்தான் இருக்கு. ஓகே.. அடுத்த அரட்டையைப் படிக்க பத்தி, சூடத்தோட நான் ரெடி!!!
Hi Thangam,
என்கே இருக்கீங்க , நானும் phoenix la இருக்கறேன் . அண்டிலோப் கான்யன் இன் தங்கம்ஸ் பார்வையி ல் waiting