சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ everybody,

ஹப்பா… அதுக்குள்ளே ஒரு வாரமாச்சா? நாட்கள் எவ்வளவு வேகமா போகுதில்லையா? ஆனா எது என்னவானாலும் நான் உங்ககூட இன்னுமொரு சுவாரஸ்யமான அரட்டைக்கு தயாராகிட்டேன். எல்லோரும் சுகமா இருக்கீங்களா? எப்படி போகுது வாழ்க்கை? இங்கே நான் ரொம்பவே நலமா இருக்கேன். உங்ககூட எல்லாம் அரட்டையடிசிட்டு இருக்கிறதால வாழ்க்கை ரொம்ப ஜாலியாவும், சுவாரஸ்யமாகவும் போயிட்டிருக்கு. புதுப் புது விஷயங்கள் நிறையவே கத்துக்கிட்டிருக்கேன்.

Yashயாகவா… ஏன் இப்படி…? எதனால உங்களுக்கு என்மேலே இப்படியொரு தனி அன்பு? என்ன இருந்தாலும் என்னை ‘தமிழ்ப் பாட்டி’யாக்கினது கொஞ்சம் too much. தமிழ் அறிஞர்களுக்கெல்லாம் இந்த விஷயம் இன்னும் தெரியாது. தெரிஞ்சுதோ நானும், நீங்களும் அம்பேல்தான் போங்க. இந்த புகைப்படத்துல என்னை பாருங்க. இப்பவும் என்னை ‘தமிழ்ப் பாட்டி’ ன்னு சொல்றீங்களா? என்னவோ போங்க…

அதென்ன மந்திரமோ தெரியலை, மாயமோ தெரியலை ஒவ்வோரு வாரமும் உங்களோட எல்லாம் அரட்டை அடிக்கயடிக்கறதைப் பத்தி நினைக்கும் போது ஒரு புது உற்சாகம் எனக்குள்ளே வந்திடுது. இந்த வார அரட்டை கொஞ்சம் வித்தியாசமா இருக்கப் போகுது. கடந்த 3 வாரங்களா நம்ம அரட்டையில இது அதுன்னு இல்லாம பல விஷயங்களையும் அலசி ஆராய்ச்சி செய்திட்டிருந்தோம். ஒரு மாற்றம்… இந்த வாரம் ஒரு விஷயம் சம்பந்தமான சில செய்திகளை அலசி ஆராயலாமா?

போன வாரம் நான் சந்திச்ச (நேர்ல இல்லீங்கோ, தொலைபேசியிலதானுங்கோ) சூரியகலா என்னை ரொம்பவே impress செய்துட்டாங்க. சிறுவயதிலேயே பார்வை இழந்துட்ட சூரியா NIVHல தட்டெழுத்துப் பயிற்சி (தமிழ், ஆங்கிலம்) முடிச்சிருக்காங்க. இதைத் தவிர பெரம்பூரில் இருக்கும் பார்வையற்றோருக்கான நிறுவனத்தில் DCA (Diploma in Computer Applications) முடிச்சிருக்காங்க (99% மதிப்பெண்கள் பெற்றிருக்காங்க). இப்போ பி.ஏ (ஆங்கிலம்) 3ம் ஆண்டு செய்திட்டிருக்கும் சூரியாவிற்கு கணினி சம்பந்தமான துறையில பயிற்சி பெற விருப்பம். சூரியாவின் ஆர்வம் அறிந்து அவருடைய பயிற்சிக்கான செலவை ஏற்கவும் ஒருவர் தயார். ஆனா அது மாதிரியான பயிற்சிகள் இந்தியாவில் மட்டுமில்லாம வெளிநாடுகளில் (வெளிநாட்டுக்குப் போய் பயிற்சி எடுத்துக்கறதுல அவங்களுக்கு எந்த தடையும் இல்லை) எங்க எல்லாம் இருக்குன்னு நான், ஹரி, நம்ம எடிட்டர் நிலா எல்லோரும் விவரங்கள் தேடிக்கிட்டிருக்கோம். உங்களுக்கு ஏதாவது விவரம் தெரிஞ்சா எங்ககூட பகிர்ந்துக்குங்களேன்.

சமச்சீர் கல்வி முறை சரியா? பழைய கல்வி முறை சரியா? – இதைப் பத்தி எல்லோரும் வாதம், விவாதம் செய்திட்டிருக்கோம். (மறுபடியும் அரசியலான்னு யோசிக்கிறீங்களா?) ஆனா இந்த வாத விவாதங்களினால இயல்பான மாணவ, மாணவிகளின் கல்வி மட்டுமில்லாம பார்வையற்ற மாணவ, மாணவிகளின் கல்வியும் சேர்ந்து ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கு. அது எப்படீன்னா… ஒவ்வொரு வருடமும் வழக்கமான பள்ளிகள் ஆரம்பித்த 2/3 மாதங்கள் கழித்துதான் பார்வையற்றோருக்கான Braille புத்தங்கள் கொடுப்பார்களாம். ஏன்னா புத்தகங்கள் அச்சிட்ட பிறகு அதனை பிழைதிருத்தத்திற்கு செல்லும் இடத்தில்தான் அவங்களுக்கு வேலை அதிகமாக இருக்குமாம். எவ்வளவுதான் விரைவா வேலை செய்தாலும் 2/3 மாதங்கள் கழித்துதான் Braille புத்தகம் வெளியிட முடியுமாம். ஆனால் இந்த வருடம் கல்வி முறையே இன்னமும் முடிவு செய்யாததால புத்தகங்களின் வெளியீடு ரொம்பவே தாமதமாகும்ன்னு சொல்றாங்க. இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களிடம் இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனால் அதை எத்தனை பேர் உணர்ந்து சொல்றாங்கன்னு தெரியலை. ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் – அப்படீன்னு பாரதி சொன்னது சரிதானோ?

http://www.hindu.com/2011/06/23/stories/2011062350880500.htm

‘ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது’. இப்படித்தான் எடிட்டரம்மாகிட்ட நம்பள் முதல் முதல்ல பேச்சை ஆரம்பிச்சான். அவங்களும் இந்த வேலைகுடு பூதத்தை (அந்த கதை உங்களுக்கு தெரியுமில்லையா?) எப்படி சமாளிக்கறதுன்னு யோசிச்சு ‘தாமரை இல்ல’த்தில் இருக்கும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் சம்பந்தமான விவரங்கள் சேகரிக்க முடியுமான்னு கேட்டாங்க. நம்மால இதை சரியா செய்ய முடியுமானு ஒரு சந்தேகத்தோடதான் விவரங்கள் தேட ஆரம்பிச்சேன். ஆனா கிடைச்சது என்னவோ bumper prize மாதிரியான தகவல்கள். பல ஆச்சச்சர்யமான விவரங்களை தெரிஞ்சுக்கிட்டேன். அதை உங்ககிட்டே பகிர்ந்துக்கப் போறேன். எனக்கு எதுக்கு இதெல்லாம்னு ஒரு சிலருக்கு தோணலாம் (நானும் பல முறை இப்படி நினைச்சதுண்டு). ஆனால் எப்பவுமே ‘Information is Wealth’ என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இப்போ உங்களுக்கு இந்த விவரம் தேவைப்படலேன்னாலும் இதன் தேவை இருக்கறவங்களுக்கு நீங்க சொல்லலாமே?
நம்ம அரசாங்கம் ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகளில் 1% பார்வை இல்லாதவங்களுக்கு ஒதுக்கி இருக்காங்க என்ற விவரம் எங்களுக்கு முதல்ல கிடைச்சுது. 1% எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திட முடியும்? வேறு வழி ஏதும் இருக்கான்னு தேட ஆரம்பிச்சோம். எவ்வளவோ தேடியும் (சரியான) விவரம் எதுவும் கிடைக்கவேயில்லை. கடந்த வாரம் என்னுடைய நாளேட்டில் இருந்த செய்தி என்னுடைய கண்ல பட்டுது.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2149474.ece

பார்வையற்றவங்களுக்கு அரசு வங்கிகளில் வேலை வாய்ப்புகள் இருப்பது பற்றி தெரிய வந்தது. சரி இந்த ஆராய்ச்சிக்கான முதல் படியா கோவையிலிருக்கும் SBI Zonal officeக்கு போன் செய்தேன். அங்கே இருந்த Telephone operator வெங்கடேஷிடம் பேசினேன். அவரிடம் நான் படித்த செய்தியை சொல்லி என்னுடைய தேவையையும் அவரிடம் சொன்னேன். SMS, yahoogroups இப்படி பல ஊடகங்கள் மூலமா பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளும் வழிமுறைகளை விளக்கினார். (முழு விவரமும் உங்களுக்கு தேவையா? நேயம் குழுவில் இருக்கு. படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க!) என்னுடைய பேச்சு முடியும் சமயத்தில், தானும் ஒரு பார்வை இல்லாதவர்னு சொன்னாரு. அவருடைய பேச்சில் எந்த ஒரு இடத்திலேயும் தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாம ரொம்ப இயல்பா பேசியது எனக்கு ரொம்பவே ஆச்சர்யத்தைத் தந்தது..!

http://groups.google.com/group/neyam?lnk=srg

சரிங்க seriousஆன விஷயங்கள் நிறையவே பேசியாச்சு. நீங்க relax ஆகிற மாதிரி சில விஷயம் சொல்றேன்.

பாடகி சித்ராவின் ரசிகர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல செய்தி. சித்ரா சேச்சி தன் மகளுடைய இழப்புக்கு அப்புறம் கொஞ்ச நாள் பாடாம இருந்தாங்க இல்லையா… இப்போ மறுபடியும் ‘இஷம் + ஸ்நேகம் = அம்மா’ என்ற மலையாளப் படத்திற்காக ஒரு பாடல் பாடியிருக்காங்க. We missed you சித்ரா சேச்சி!

 

 Flower show
2 வாரத்துக்கு முன்னாடி கோவை முழுவதுக்கும் பளீருன்னு வெளிச்சம் குடுக்கறமாதிரி நான் பல்பு வாங்கின கதையை உங்ககிட்டே சொல்ல மறந்துட்டேனே. கதையை பத்தி தெரிஞ்சவங்க எல்லாம் போன் மேல போன் போட்டு கிண்டலடிக்கிறாங்க. (நல்ல வேளை வெளிநாட்டுல யாரும் இல்லை. இல்லைனா அங்கேயிருந்தும் போன் வந்திருக்கும்) கோவையில் ‘மலர் கண்காட்சி’ நடக்கிறதா பத்திரிக்கையில் செய்தி பார்த்தேன். சரி நம்ம வீட்டு தலைவரை எப்படியாவது தாஜா செய்து ‘மலர் கண்காட்சி’க்கு அழைச்சுட்டுப் போகச் சொல்ல முடிவு செய்தேன். இதுக்காக ஏகத்துக்கு வீட்டுப்பாடம் (அதுதாங்க homework) செய்து தயாரா இருந்தேன். (என்ன மாதிரியான வீட்டுப்பாடம்னு கேட்காதீங்க… அப்புறம் நீங்களும் கிண்டலடிக்க ஆரம்பிச்சுருவீங்க) அது இதுன்னு பேசி ஒரு வழியா மலர் கண்காட்சி விஷயத்தைச் சொல்லி, என்னை அழைச்சுட்டுப் போயே ஆகணும்னு சொன்னேன். என்னுடைய மாமியாரும் ‘நீ வேலையே கதின்னு இருக்கிறதால எங்கேயும் போறதில்லை. இதுக்காவது அவளை கூட்டிட்டுப் போகணும்’னு சொன்னாங்க (பெரிய இடத்து recommendation). சரின்னு சொன்ன என்னுடைய வீட்டுக்காரர் நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சாரு. அப்போ அதுக்கு எனக்கு அர்த்தம்னு புரியலை. ஆனா மலர் கண்காட்சிக்கு போனதுக்கப்புறமா காரணம் புரிஞ்சுது. கொஞ்சமே கொஞ்சம் வாடின பூக்கள் அப்புறம் பூக்களாலான ஒரு பட்டாம்பூச்சி, ஒரு டால்பின் அப்புறம் ஒரு பூங்கொத்து. அந்த மலர் கண்காட்சியில மொத்தமே இவ்வளவுதாங்க இருந்தது (ஆனா அதையும் சும்மா விடலியே). இதுக்கு கையில கேமரா வேற. இதெல்லாம் பார்த்துட்டு நான் ஏகப்பட்ட சோகத்துல இருக்கும் போது எங்க அம்மாகிட்டே இருந்து போன் வந்தது. ‘ரொம்ப பிசியா? பூக்களெல்லாம் பாத்துட்டு இருக்கியா? நான் ஏதும் disturb செய்துடலியேன்னு’ கிண்டலடிக்கிறாங்க. ஒவ்வொருத்தரும் போன் செய்து அவங்க அவங்க styleல கிண்டலடிச்சாங்க. எல்லோருக்கும் எப்படி விஷயம் தெரிஞ்சுதுன்னு பார்த்தா எல்லாம் எங்க வீட்டுத் தலைவரோட உபயம்தான். சரி, சரி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு என்னை நானே தேத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தா, என்னுடைய மாமியார் ‘என்னம்மா மலர் கண்காட்சி எப்படி இருந்தது? ஏன் அதுக்குள்ளே வந்துட்டீங்க?’ ன்னு கேட்க அதுக்குVaralakshmi vratham நான் அசடு வழிஞ்சுட்டு நிக்க… ஒன்னும் சொல்றதுக்கில்லை

ஆஹா… ஜுலை மாசம் வந்தாச்சு. இனிமே யஷ் ரொம்பவே பிசியாகிடுவா. சின்ன வயசுல இருந்தே ஒவ்வோரு வருடமும் ஜுலை மாதம் வந்தாலே நான் நெம்ப(?) குஷியாகிடுவேன். வேற என்ன வருஷத்தோட இரண்டாவது பாதியிலேதானே எல்லா பண்டிகையும் வரும். சிறு வயதுல புதுத்துணி, இனிப்புகள் அப்படீன்னு இருந்தாலும் கொஞ்ச நாளைக்கப்புறம் பண்டிகைகள்ல ஒரு தனி ஆர்வம் தோண ஆரம்பிச்சுது. ஆடிப் பிறப்பு, வரலக்ஷ்மி விரதம், கோகுலாஷ்டமி, வினாயகர் சதுர்த்தி, நவராத்திரி … இப்படி போயிட்டே இருக்கும். இந்த மாதிரி பண்டிகைகளிலே நான் என்ன செய்வேன்னு யோசிக்கிறீங்களா? உதாரணத்துக்கு வரலக்ஷ்மி விரதம்னு வெச்சுக்கோங்க அன்னைக்கு செய்ய வேண்டிய special சமையல் தவிர வரலக்ஷ்மி அம்மனுக்கு பூ அலங்காரம், மாலை, பூ மட்டை தைக்கறதுன்னு இதெல்லாம் செய்வேன். போன வருஷம் வரலக்ஷ்மி பண்டிகைக்கு சென்னையில இருந்தேன்.

Potical illusionசரிங்க ரொம்பவே அரட்டையடிச்சாச்சு. கடைசி கட்டி மாம்பழத்துக்கு வருவோமா? பொழுது போக்க இணையத்துல ஏதாவது சுவாரஸ்யமா கிடைக்குமான்னு தேடிட்டிருந்தேன். அப்போ எதேச்சையா இந்த Optical illusion படம் என் கண்ணில் பட்டுது. நீங்க ஏற்கனவே பார்த்திருப்பீங்களோ என்னவோ…எனக்கு பிடிச்சிருந்ததால உங்களுக்கும் காமிக்க நினைச்சேன். படம் ரொம்பவே அழகா இருக்கு இல்லையா?

சரிங்கோ ரொம்ப நேரம் அரட்டையடிச்சாச்சு. அடுத்த அரட்டையில மறுபடியும் சந்திக்கறவரை எல்லோருக்கும் Tata Bye Bye See you… 

About The Author

12 Comments

  1. கீதா

    யஷா… பின்னிட்டீங்க. ஒலி வடிவில் அரட்டை ரொம்ப நல்லா இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்து நீங்க பேசுறது போலவே இருந்தது. புதிய முயற்சிக்கு வித்திட்ட நிலாச்சாரலுக்கும் அதை செயல்படுத்திய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வார சில்லுனு ஒரு அரட்டையில் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் மனம் தொட்டன. உங்க மலர்க்கண்காட்சி நிகழ்வோ ரொம்ப நெகிழவச்சிடுச்சி. பின்னே? இப்படி ஒட்டு மொத்தமா எல்லாரும் சேர்ந்து உங்களைப் பழி வாங்கிட்டாங்களே… பாவம் யஷா நீங்க!

    தொடர்ந்து உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் அரட்டை அடிப்பதற்குப் பாராட்டுகள். நான் சேமிக்கும் நாணயங்களைக் கூடிய விரைவில் புகைப்படம் எடுத்து அனுப்பறேன். அப்புறம் அதன் எண்ணிக்கை நான் சொன்ன மாதிரி நாற்பது இல்லையாம். இதுவரைக்கும் அறுபத்து நாலு வெளியாகியிருக்காம். ம்… இன்னும் நிறைய சேர்க்கணும்.

  2. Yash

    கீதா,

    உங்க ஒருத்தருக்குதான் என்னுடைய கஷ்டம் புரிஞ்சிருக்கு. ரொம்ப சீக்கிரமே நீங்க அறுபத்தி நாலு நாணயங்களையும் சேர்த்திருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒலி வடிவிலான அரட்டை உங்களுக்கு பிடிச்சிருந்ததை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. 🙂

  3. யாகவா

    உங்க ஃபோட்டோவா இது, திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருக்கீங்க இப்பவும் அப்படிதானா?

    அதென்ன //கடைசி கட்டி மாம்பழத்துக்கு//, அப்படின்னா என்னப்பா?

    ஏதோ ஆப்டிக்கல் இல்லூசன் காமிக்கிறேன்னிங்க, அந்த படத்த இடைசெருக மறந்துவிட்டீர்களோ!

    நீங்க பி.பீ.ஓ ல வேலை பார்த்தீங்களா என்ன? இவ்ளோ அழகா பேசுறீங்க (பாட்டின்னு சொன்னது தப்பாயிடுத்தோ!)

  4. Hema

    ரொம்ப நல்லாயிருக்கு யஷ் ஒலி வடிவ அரட்டை…நல்ல பேசுறீங்க…வாழ்த்துக்கள்…

  5. janani

    யஷ் ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர் பா அரட்டை பின்னி பெடலெடுக்கறிங்க. நீங்க சித்ரா சேச்சி பாட்டு தான் போட்டிருக்கிங்கன்னு நினைச்சேன், ஆனா ஒலி வடிவ அரட்டை, சான்சே இல்லைப்பா, தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. நன்றி……………..நன்றி

  6. Yash

    நன்றி ஹேமா.

    ரசிச்சு பாரட்டினதுக்கு ரொம்ப நன்றி ஜனனி :-).

  7. maleek

    பேச்சும் இப்படித்தானா? பேஷ் பேஷ். நி.கொ.ப.செ?

Comments are closed.