சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ everybody,

எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே? நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன். (என்னை பத்தியும் யாராச்சும் விசாரிக்கிறீங்களா?)

என்ன குமார் சார்? முந்தின அரட்டையில உங்களை காணலியே? ரொம்ப busyo?

தேவியின் பின்னூட்டம் படிச்சுட்டு ஒரே ஜாலியா திரிஞ்சுட்டிருந்தேன். அதை பார்த்துட்டு எங்க வீட்டுல இருக்கிறவங்க "யார் கண்டா நேர்ல வந்து அரட்டை அடிக்கலியேன்னு தேவி சந்தோஷப்படறாங்களோ?"ன்னு ஒரு வெடியை கொளுத்திப்போடறாங்க. "நீங்களே சொல்லுங்க தேவி அப்படி எல்லாம் இல்லைதானே?"

ஜனனிக்கு தான் என்மேலே எவ்வளவு பாசம்! நேர்ல வந்து வாழ்த்தியே தீருவேன்னு ஒரே அடம் (ஜனனி இதை கண்டுக்காதீங்க). அப்புறம் நாந்தான் காசு செலவழிச்சு ஆட்டோல வந்துதான் வாழ்த்தனும்னு இல்லை. உங்க பாசம் எனக்கு புரியுதுன்னு சமாதனப்படுத்தினேன். (ஹூம்… எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு. இப்போவே கண்ணைக் கட்டுதே!)

யாகவா என்னை மாதிரியே நீங்களும் smart போல. அதுதான் சட்டுனு புரிஞ்சுக்கிட்டீங்க. (அப்படீன்னு நீங்க சொன்னதை நான் நம்பிட்டேன். நான் கூட நம்பலேன்னா எப்படி? உங்களுக்காக இதுகூடவா நான் செய்யமட்டேன்? என்ன நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொல்லிட்டேனா? மாட்டிக்கிடீங்களா?)

DoveActualy speaking… நான் வானத்துல பறந்துட்டு இருந்தேன் தெரியுமோ! இந்த வாரம் அரட்டையடிக்க யஷ் வரலேன்னா நீங்களாம் ஏங்கி போயிடுவீங்கன்னு தெரியும். அதனால கொஞ்சமே கொஞ்ச நேரம் உங்களுக்காக பூமிக்கு வந்தேன். (‘ஒன்னுமே புரியலியே’ன்னு நீங்க அங்க முணுமுணுக்கறது இங்க எனக்கு கேட்டுடுத்து. புரியறமாதிரி பேசியிருக்கேன்? புரியறமாதிரி பேசிட்டா அப்புறம் எனக்கு இங்க வேலை இருக்காதே?) விஷயம் என்னன்னா… போன வாரம் நிலா தன்னுடைய ‘மடை திறந்து’ல சுவாதிப்ரியா பத்தி சொல்லி இருந்தது உங்களுக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அவங்க படிக்க ஆசைப்பட்ட பொறியியல் கல்லூரி சீட் சம்பந்தமா பலரையும் தொடர்பு கொண்டு பேசினேன். அதே நேரம் இணையத்துலேயும் உதவிகள் சம்பந்தமான தேடுதல் வேட்டையில இறங்கினேன் (என்ன ஆனாலும் சரி ஒரு கை பார்த்துடற்துங்குற முடிவோட). அப்போ எதேச்சையா Facebookன் இந்த சுட்டி கிடைச்சுது.

http://www.facebook.com/note.php?note_id=226074230737173

இதன்மூலமா நான் திரு. E.K.T.SIvakumar அவர்களை (இவர் அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரிபவர்) தொடர்பு கொண்டபோது, தன்னாலான உதவியை செய்றதா உறுதியளிச்சது மட்டுமில்லாம திரு. மயில்சாமி அண்ணாதுரை (இவரை பத்தி தெரியாதவங்களே இருக்கமுடியாது) அவங்களை தொடர்பு கொண்டா உதவி இன்னும் விரைவா கிடைக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னாரு. ஒரு வித பிரமிப்போட மயில்சாமி அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். நான் பேசி முடிச்சு 2 மணி நேரம் கழிச்சு எனக்கு அவரிடமிருந்து மின்னஞ்சல் (Email) மற்றும் குறுந்தகவல் (SMS) வந்துது (யஷ்ஷோட தமிழ் எந்த அளவு முன்னேறியிருக்குன்னு பார்த்தீங்களா?). கோவையில் ஒரு கல்லூரியிலும், சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியிலும் சுவாதிப்ரியாவிற்கு இலவச சீட் அளிக்க முன்வந்திருப்பதா அதில் மயில்சாமி சார் சொல்லி இருந்தாரு. என்னால கொஞ்ச நேரம் நடக்கிற எதையுமே நம்ப முடியலை. (அதனாலதான் ‘Expect the unexpeted’ன்னு சொல்லுவாங்களோ!) ISROவின் டைரக்டர் என்கிற பந்தா கொஞ்சம்கூட இல்லாம இயல்பா நடந்துகிட்ட ஒரு நல்ல மனிதர்கிட்டே பேசின சந்தோஷம் இன்னும் என்னுடைய மனசுல நிறைஞ்சிருக்கு. Hats off to you, மயில்சாமி சார். நம்ம வேலை இங்கே முடியுது. இனிமே முடிவு செய்யறது சுவாதியோட பொறுப்பு. இந்த நேரத்துல எனக்கு தோனின சில விஷயம்:

* முகம் தெரியாதவங்களா இருந்தாலும் படிப்புன்னு வரும்போது (இக்கட்டான நிலையிலும்) உதவிகள் செய்யற உள்ளங்கள் இன்னும் நிறையவே இருக்கு.

* இணையம் மூலமா எவ்வளவோ ஏமாற்று வேலைகள் நடக்குறதா நாம தினமும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆனா இது போன்ற உபயோகமான விவரங்களும் நமக்கு அதே இணையம் மூலமா கிடைக்குது. எதிலேயும் நல்லதும் இருக்கு தீயதும் இருக்கு. அன்னப்பறவையும், சக்கரவாகமும் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கற மாதிரி நாமும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கலாமே!

* யாரும் உதவி செய்யறது இல்லைன்னு குத்தம் சொல்ல நமக்கு உரிமையிருக்கும்போது, உதவிகள் செய்யும்போது அவங்களைப் பாரட்டறதும் நம்ம கடமையில்லையா?

இப்போ சொல்லுங்க மக்களே! நான் வானத்திலே பறக்கறது நியாயமா? இல்லையா? (மின்னஞ்சல், குறுஞ்செய்தி ரொம்பவும் பத்திரமா வைத்திருக்கேன்)

என்னங்க ஆச்சு? யாருமே விடுகதைக்கு பதிலே சொல்லலியே? இப்படி என்னை ஏமாத்திடீங்களே! சரி நானே பதிலை சொல்லிடறேன். மொத்தம் 10990 கால்கள். எண்ணிக்கை சரிதானா?

சரி சரி இந்த சின்ன விடுகதைக்காவது பதில் சொல்லுறீங்களா? ஒரு சுவர் மேலே 5 தவளைகள் இருந்ததாம். அதிலிருந்து 4 தவளைகள் குதிக்க முடிவு செஞ்சுதாம். இப்போ சுவர் மேலே மீதம் எத்தனை தவளைகள் இருக்கு சொல்லுங்க? தெரியலேன்னா அரட்டையோட முடிவுல பதில் சொல்றேன்.

சரி KT(Knowledge Transfer) முடிஞ்சுது. நம்ம வழக்கமான அரட்டையை தொடரலாமா? போன வாரம் (முந்தைய நிறுவனத்தின்) சக ஊழியர்கள்ல சிலர் phoneல கூப்பிட்டு பேசினாங்க. அப்போ நம்முடைய அரட்டையை பத்தி ஏகத்துக்கும் கிண்டல், கலாய்ப்பு,etc, செய்தாங்க. ஆனா அதுக்கெல்லாம் கலங்குற ஆளா நான்? இல்லையே. (சொல் பேச்சு கேட்கற பழக்கம் நமக்கு என்னைக்குமே இருந்ததில்லை). இன்னும் நிறைய நிறைய எழுதப்போறனே. இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?

Coins Collectionநம்ம கலையரசியின் ‘நிலவினில் என் நினைவோடை’ தொடரை படிக்கிறவங்க யாரா இருந்தாலும் கொஞ்ச நேரமாவது அவங்க தன்னுடைய பழைய நினைவுகளுக்கு கண்டிப்பா போயே தீரனும். அவ்வளவு அற்புதமா எழுதறாங்க. 2 வாரங்களுக்கு முன்னாடி ’25 பைசாவும் நானும்’ என்ற தலைப்பில் அவங்க எழுதியிருந்ததை படிச்சதும் எனக்கு என்னுடைய ரூ.5 நாணயங்களின் சேகரிப்புதான் நியாபகத்துக்கு வந்தது. (இன்னும் சேகரிச்சுட்டு இருக்கேன்) புதிய ரூ.5 நாணயங்கள் மேலே எப்பவுமே ஒரு தனி பிரியம் உண்டு. கடைகளுக்கு சில்லறை கொடுக்க நேரும் போதெல்லாம் புது நாணயங்களை மட்டும் கொடுக்கவேமட்டேன். (அதுக்கு பதிலா ரூ.1/ரூ.2 மாதிரியான சில்லறைகளா குடுத்துடுவேன்) கொஞ்ச நாள்லேயே மத்த நாணயங்களையும் (வித்தியாசமான ரூ.5, ரூ.2, ரூ.1, 10 பைசா, 25 பைசா, 50 பைசா நாணயங்கள்) சேகரிக்க ஆரம்பிச்சுட்டேன். இங்க வீட்டுல யாருக்கு சில்லறை கிடைச்சாலும் ‘ஹேய் யஷ், இது உனக்கு வேணுமா பாரு’ன்னு கேட்டுடறாங்க. அதுவும் புதிய ரூ.5 நாணயம்னா கேட்கவே வேண்டாம். நேரா வந்து கையில கொடுத்துடுவாங்க. இதனாலே எனக்கு கிடைச்சிருக்கும் பட்டப் பெயர் ‘Coin Bank’. இந்த மாதிரி இன்னும் நிறைய பட்டப்பேர் எனக்கு உண்டு. மத்ததையெல்லாம் அப்புறமா சொல்றேன்.

நம்ம வீட்டு தலைவர் பத்தி நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்லையா? கடந்த வாரம் ஒரு நாள் ராத்திரி ரொம்பவே lateஆ வந்தாரு. எப்போ வீட்டுக்கு வந்தாலும் ‘இன்னைக்கு என்ன என்ன ஸ்பெஷல் news?’னு கேட்பாரு. அதே மாதிரி அன்னைக்கும் அவர் கேட்ட உடனே நான் ‘CBI தயாநிதி மாறனையும் 2G scamல சேர்த்துட்டாங்கப்பா. இன்னைக்கு மதியம் அவர் Cabinet Minister பதவியில இருந்து விலகிட்டாரு. கூடிய சீக்கிரமே ராசா, சரத்குமார், கனிமொழி மாதிரி அவரும் திகார் ஜெயில்ல admission வாங்கிடுவாரு போல இருக்கு’ன்னு சொன்னேன். (தேர்தலுக்கு கொஞ்சம் முன்னாடியிலிருந்து அரசியல்லை கொஞ்சமில்லை நிறையவே ஆர்வமா கவனிச்சுட்டு வரேன்). அதுக்கு அவர் ‘இந்த ராத்திரி நேரத்துல அவங்க வீட்டில இருக்கறவங்க கூட இந்த அளவு அவங்களைப் பத்தி நினைப்பாங்களான்னு தெரியலை’ன்னு கிண்டலடிக்கறாரு. ஏதோ ஆபீஸ்ல எப்போ பார்த்தாலும் கணினியைக் கட்டிட்டு அழுதுட்டு இருக்காரு. நாட்டு நடப்பை பத்தி சொல்ல நினைச்சா… தேவையா? இது எனக்குத் தேவையா?

BRO Sign Boardsசரி கடைசி கட்டி மாம்பழத்துக்கு வருவோம். நெடுஞ்சாலைகளிலே காரில் பயணம் செய்யறது ரொம்பவே போரான விஷயம். (நானும் கார் ஓட்டுவேனாக்கும்) அந்த மாதிரி சாலைகளிலே போயிட்டுருக்கும்போது இந்த ஊர் இவ்வளவு கி.மீ, அந்த ஊர் இவ்வளவு கி.மீன்னு சொல்ற ‘தகவல் பலகைகள்’ நிறைய இருக்கும். போனா போகுதுன்னு அங்கொன்னும் இங்கொன்னுமா விளம்பரப் பலகைகள் வந்து போகும். சமீபத்துல லடாக்கின் மாநில நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணியை ஏற்றிருக்கும் BRO (Border Roads Organisation) நிறுவனம், சாலைகளிலே பயணிகளைக் கவரும் விதமா வித்தியாசமான ‘தகவல் பலகை’களை நிறுவியிருக்காங்க. ஆபத்தான வளைவுகளில் இந்த மாதிரி நகைச்சுவை கலந்த ‘தகவல் பலகை’யை பயணிகள் பலரும் ரசிச்சு பாராட்டியிருக்காங்க. நம்பள்க்கி ரொம்ப பிடிச்ச வாசகம் ‘Love thy neighbour but not while driving’. இந்த மாதிரி தகவல் பலகைகள் பத்தி நிம்பள் என்ன நினைக்கிறான்? என்ன சொல்றான்? சொல்லுங்கோ…

என்னங்க எத்தனை தவளைகள் சுவர் மேலே மீதம் இருக்குன்னு தெரிஞ்சுதா? ஒரு தவளையா? நல்லா யோசிச்சு சொல்லுங்க… ஒரு தவளைதானா? ஏங்க 4 தவளைகள் குதிக்க நினைச்சுதுன்னு தானே சொன்னேன். குதிச்சுதுன்னு சொன்னேன். நினைக்கறதுக்கும் செயல்படறதுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு தெரியுமா? இப்போ சொல்லுங்க சுவர் மேலே எத்தனை தவளைகள் இருக்கு? ம்… ம்…. 5 தவளைகள். இப்போ சரியா சொல்லிட்டீங்க. ஜோரா ஒரு தடவை உங்களுக்கு நீங்களே கை தட்டிக்குங்க பார்க்கலாம்.

சரிங்கோ ரொம்ப நேரம் அரட்டையடிச்சாச்சு நான் மறுபடியும் வானில் பறக்கறதை continue செய்யறேன். டா டா… பை பை…

About The Author

21 Comments

  1. கலையரசி

    அன்பு யஷ்,

    சுவாதிப்பிரியாவுக்கு உதவி செய்றதுக்காக இந்த அளவு முயற்சி எடுத்துக்கிட்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரு.மயில்சாமியும் எந்த வித பந்தாவும் இல்லாம அவருக்கிற வேலைப் பளுவில, நீங்க கேட்டதைக் கவனத்துல எடுத்துக்கிட்டு உடனே மின்னஞ்சல் கொடுத்திருக்கார்னா, நம்பவே முடியலை. தாம் ஒரு நிறைகுடம்னு நிரூபிச்சிட்டாரு. நீங்க வானத்துல பறக்கிறதில நியாயமிருக்குது!

    என்னோட நினைவோடையைப் படிக்கிறதுக்கும், அதைப் பாராட்டுனதுக்கும் ரொம்ப நன்றி. என்னோட பழைய நினைவுகளை எழுதும் போது அந்தக் காலத்துக்குத் திரும்பவும் போய் வந்த மாதிரி ஓர் உணர்வு. எல்லாமே நேத்து நடந்தது மாதிரி ஞாபகத்துக்கு வருது. இதுக்கு, என்னை எழுதச் சொன்ன நிலாவுக்குத் தான் நான் நன்றி சொல்லணும்.

    ஒங்களைப் போலவே எனக்கும் நாணயங்களைச் சேகரிக்கிற பழக்கம் இருக்கு. புதுசுன்னு நான் சேகரிக்கிறதில்லே, ஒன்னு மாதிரி இன்னொன்னு இருக்கக்கூடாது.

    நெடுஞ்சாலையிலே வைச்சிருக்கிற தகவல் பலகை வாசகங்களை நான் ரொம்பவே ரசிச்சேன். நீங்க சொன்னது நல்ல நகைச்சுவை கலந்த வாசகம். என்னைக் கவர்ந்த இன்னொன்னு, IT IS A HIGHWAY, NOT A RUNWAY”

    தவளை புதிர் ரொம்ப ஈஸியா இருந்துது. ஆகா சரியான பதிலைச் சொல்லி யஷ்கிட்ட பாராட்டு வாங்கிடலாம்னு பார்த்தா, அதை நீங்களே சொல்லி ஏமாத்திட்டீங்க. சரி, அடுத்தப் பதிவுல இதே மாதிரி ஈஸியான கேள்வி கேட்கும் போது பார்த்துக்கிடலாம்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.
    பாராட்டுக்கள் யஷ்!

  2. janani

    யஷ், உங்க அரட்டை சூப்பரா இருக்குப்பா, ஜாலியா போகுது. நீங்க ஏதாவது ப்ளாக் எழுதரீங்களா? ஸ்ஸ், இதுக்கு மேல தமிழ்ல டைப் பண்ண முடியாதுப்பா. மீதி அடுத்த கமெண்ட்ல…………

  3. Janani

    Hats off to you for tamil typing, not only for you, its for all the people who typed in tamil. Actually i dont know how to do it. Everyweek im waiting for your chatting. ok!

  4. யாகவா

    எப்படி யஷ் இந்த மாதிரியெல்லாம் யோசிச்சு விடுகதை போடுறீங்க. செம மொ-கை போங்க, நான் முதல்லையே கண்டுபிடிச்சிட்டேன் 5 தவளைதான்னு. இதுக்கு ஒரு வியாக்கியானம் வேர தேவையா.

    நானும் 5-ரூபாய் நாணயங்களை நிறைய பதிக்கி வச்சிருக்கேங்க, ஒரு கேரிபேக்ல பாதியலவுக்கு. இது எதுக்குன்னா, இங்க பஸ்ஸுக்கு சில்லரை கொடுக்குறதே பெரும் தொல்லையா இருக்குறதினால இந்த ஐடியா. சேர்த்து வச்சு அப்புறம் காலிபண்றது.

    கலையரசி அது ஈசியான கேள்வி இல்லை…….மொ-கையான கேள்வி.

    சாரி யஷ்….. நீங்க நல்ல விடுகதை போட்டா கண்டிப்பா பாராட்டுவேன்!

  5. DeviRajan

    வணக்கம் யஷ்! அதெப்படி உங்க வீட்டுல உள்ளவங்க அவ்வளவு கரெக்டா சொன்னாங்க.(சும்மா…….!) ஆமா எங்க இருன்து பிடிக்கறீங்க இந்த புதிர் எல்லாம்! நல்லா இருக்கு…

  6. Yash

    கலை,

    ந்ன்றி கலை. உண்மையிலேயே திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் ஒரு நிறைகுடம் தான். நீங்களும் நாணயங்கள் சேகரிக்கிறீங்களா? ஜாலி. என்னுடைய ரூ.5 நாணயங்களும் ஒன்னொன்னும் வித்தியாசமா இருக்கும் (புதுசு பழசு இரண்டுமே). உங்களை போலவே எனக்கும் உங்களுடைய நினைவோடையை படிக்கும் போது என்னுடைய பழைய நினைவுகளை உலா வருவது மாதிரி ஒரு உணர்வு. நீங்களும் தகவல் பலகை வாசங்களை ரசிச்சீங்களா? அச்சசோ என்னுடைய விடுகதைக்கு பதில் சொல்ல வந்த முதல் ஆளை இப்படி பதில் சொல்லி இப்படி மிஸ் பண்ணிட்டேனே :-(? கவலைய விடுங்க நிறைய விடுகதை வைத்திருக்கேன். அடுத்த வாரம் கலைக்காவே ஸ்பெஷலா ஒரு விடுகதை உண்டு. என்ன சரியா?

  7. Yash

    நன்றி ஜனனி. நான் பிளாக் எதுவும் எழுதறது இல்லைப்பா. கவலைப்படாதீங்க. நாம ஒவ்வொரு வாரமும் நிலவின் சாரலில் அரட்டையடிக்கலாம். சரிதானா?

  8. Yash

    யாகவா,

    என்ன செய்யறது? போன வாரம் கேட்ட விடுகதைய யாருமே கன்டுக்கவேயில்ல. அதனால இப்படி ஏதாவது விடுகதை சொன்ன என்ன மாதிரியான பதில் வருதுன்னு ஒரு சின்ன முயற்சிதான். முன்னாடி எல்லாம் நானும் இந்த மாதிரி நிறைய நாணயங்களை பதுக்கி வெச்சுருக்கேன். (அதே பஸ் காரணம் தான்)

  9. Yash

    ஜனனி,

    தமிழ்ல டைப் செய்யறது ரொம்பல்லாம் கஷ்டமில்லை. எதுவுமே ஆரம்பத்துல புதுசுன்கிறதால கொஞ்சம் அப்படியிருக்கும். ஆனா போகப் போகப் பழகிடும். நானும் உங்ககூட அரட்டையடிக்க அடுத்த வாரம் வரை காத்திருக்கேன்.

  10. Yash

    தேவி,

    இப்படி சொல்லிட்டேங்களே? சும்மான்னு சொன்னதால சமாதானமாகிட்டேன். வேற எங்க படிப்பேன்? கழுதை கெட்டா குட்டிச்சுவரு இணையம் தான்…

  11. கலையரசி

    யாகவா,

    செம மொக்கையான கேள்வின்னு சொன்னா, நம்ம யஷ் மனசு கஷ்டப்படுமேன்னு, ஈஸின்னு ஒரு பேச்சுக்குச் சொன்னா, உண்மையை இப்படி புட்டுப் புட்டு வைச்சிட்டீங்களே! சரியான உணமை விளம்பியா இருப்பீங்க போலேயிருக்கு!

  12. குமார்

    பரவாயில்லையே தமிழ்ல கலக்க ஆரம்பிச்சிட்டீங்களே………
    அது சரி மாம்பலம்ன்ன உடனே எனக்கு ஞாபகத்துக்கு வருது, சென்னைலதான் கிலோ 50/-ன்னு கொல்லையடிக்கிறானுவ….கிராமங்கள்லைலாம் எவ்வளவு சீப்பா இருக்கு பாருங்க!

  13. யாகவா

    //குமார் அது மாம்பழமா? மாம்பலமா?//

    நீங்க என்ன போன ஜென்மத்துல அவ்வையாரா இருந்திருப்பீங்க போலிருக்கு…..(தமிழ் பாட்டி)

  14. Yash

    உங்களுக்கு என் மேலே அப்படி என்ன கோவம்? போன ஜென்மத்துல அவ்வையாருனு சொன்னதால தப்பிச்சேன். இந்த ஜென்மத்துலன்னு சொல்லி இருந்தீங்கன்னா என்னுடைய புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியிருப்பேன் 😉 (தமிழ் பாட்டி, அவ்வையாருன்னு பெருமையாதான் சொல்லி இருக்கீங்க. ஆனா அவ்வையாருக்கு இந்த விஷயம் தெரியாம பார்த்துக்குங்க)

  15. கீதா

    உங்க சமூக ஆர்வலர் பணிக்கு என் பாராட்டுகள் யஷ். உங்களுடைய ஆர்வத்துக்கு உடனே உதவமுன்வந்த திரு.மயில்சாமி அவர்களுக்கும் மற்ற நல்லுள்ளங்களுக்கும் நன்றி. யஷ், நானும் நாணயங்கள் சேர்ப்பதில் விருப்பமுடையவள். ஆஸ்திரேலியாவில் நாற்பது வகையான ஒரு டாலர் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளனவாம் அனைத்தையும் சேர்க்கும் முயற்சியில் இப்போது நான்!

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் போக்குவரத்து தகவல் பலகைகள் பாராட்டப்படவேண்டிய மற்றும் வரவேற்கப்படவேண்டிய விஷயம். சில லாரிகளின் பின்னால் என்னை முத்தமிட்டு விடாதே என்று எழுதியிருப்பதை ரசித்திருக்கிறேன்.

    நல்லா எழுதறீங்க, படிக்கும்போதே உற்சாகம் தொத்திக்குது. மனமார்ந்த பாராட்டுகள். தினமொன்றாக நான் இட்ட ஆறாவது பின்னூட்டம் இது. வெளிவரும் வரை நானும் விடுவதாய் இல்லை. 🙂

  16. Yash

    கீதா,
    நல்ல ரசனை உங்களுக்கு. என்னுடைய அரட்டையை படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி. உங்களுடைய விடாமுயற்சியை கண்டிப்பா பாரட்டியே தீரனும். 🙂

Comments are closed.