வந்தனம்! வந்தனம்! வந்த சனம் எல்லார்க்கும் வந்தனம்!
வணக்கம் சொல்றது கவிதா பிரகாஷ்.. யாராவது ‘புதுசா அரட்டை அடிக்க வந்தா தம்பிகளை விட்டு பின்னி எடுப்பேன்’னு ஸ்வர்ணாக்கா பயம் காட்டியும் நான் எப்படி வந்தேன்னு யோசிக்கிறீங்களா? கொங்கு நாட்டு சிங்கிகிட்ட (சிங்கத்தின் பெண்பால்!) யாரா இருந்தாலும் கொஞ்சமாச்சும் பயந்துதானே ஆகணும்? தம்பி படையை எப்படி கரெக்ட் பண்ணினேன்னு அப்புறமா சொல்றேனுங்க!
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கேற்ப, நாங்க அமெரிக்கா கிளம்பிய போது நடந்ததைக் கேட்டா நீங்க வாய்விட்டு சிரிப்பீங்க. (வாயை விட்டுட்டு எப்படி சிரிக்கிறதுன்னு ரிஷி மாதிரி புத்திசாலித்தனமான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது!)
கூட்டுக் குடும்பமான எங்கள் வீட்டில் கேலி, கிண்டல்களுக்கு குறைச்சலில்லை. நாங்க அமெரிக்கா கிளம்பறதுக்கு ரெண்டு நாட்களுக்கு முன் குடும்பத்தோட ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருந்தோம். நம்மவர்களுக்கு அட்வைஸ் பண்றதுன்னா அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே! ஆளாளுக்கு அதைச் செய்தியா, இதைச் செய்தியான்னுகேட்டுக்கிட்டே இருந்தங்க. திடீரென என்னவர் என்கிட்டே, அங்கே போனதும் ஒரு வாரத்துக்கு jet lagனு சொல்லி வேலை செய்யப் போறதில்லைன்னார். முதன் முறையா அயல்நாடு போறதால அர்த்தம் புரியாம அப்பாவியா, "jetlag அப்படின்னா என்ன?"ன்னு நான் முழிப்பதைப் பார்த்த என் தம்பி, "அச்சச்சோ! அதை நீ வாங்கலையா? மாமா அப்பவே வாங்கிட்டாங்களே!" என்றான். "அண்ணி எப்படி மறந்தீங்க! அதில்லாம அமெரிக்காவில் உள்ளே விடமாட்டார்களே!" என என் நாத்தனார் சொல்ல, நான் சோகமே உருவானேன். அவர்களின் கேலி புரியாமல் நான் என்னவரை முறைக்க, பின் என்னவர் “நான் வேறே.. நீ வேறயா? உனக்கும் சேர்த்து நானே வாங்கிவிட்டேன்” என்ற பின்பே சமாதானம் ஆனேன். இப்போ யார் வெளிநாடு கிளம்புகிறேன் என்றாலும் எங்கள் வீட்டில் நடந்த கலாட்டா நினைவில் வரும். நீங்களும் என்னைப் போல அப்பாவியா இருந்தா இங்கே பார்த்து தெரிஞ்சுக்குங்க:
http://en.wikipedia.org/wiki/Jet_lag
இதே போல தமிழறிஞர்களிடம் இருந்த டைமிங்கான நகைச்சுவை படிக்கணும்னா ஜ.ப. ர, எழுதியதைப் பாருங்க:
https://www.nilacharal.com/ocms/log/07210805.asp
காயத்ரியோட குடும்பத்தில் நடந்த கலாட்டாவை சில வாரத்துக்கு முன்னே படிச்சிருப்பீங்க. அவ்வளவு புத்திசாலியான காயத்ரியை ஸ்வர்ணாக்கா ஏன் ஆளை வைச்சு அடிக்கலைன்னு யோசிச்சேன். ஒருவேளை தங்கச்சி காயத்ரியை ‘இவல்லாம் ஒரு ஆளு… இவளுக்கெதுக்கு ஆளு?’ன்னு நெனச்சு விட்ருப்பாங்களோன்னு தோணுச்சு.
"புலிப்பால் குடித்து வளர்ந்த மறத்தமிழச்சி காயத்ரியே! பொறுத்தது போதும் பொங்கி எழு!" (அப்பாடா! செய்ய வேண்டிய முக்கிய வேலையை முடிச்சாச்சு. இனி உடன்பிறவா சகோதரிகள் பாடு!)
என்னடா.. அரசியல்வாதி மாதிரி பேசறேன்னு நினைக்கிறீங்களா? அரசியல் சாக்கடையை சுத்தம் பண்ணாவிட்டாலும் அசுத்தம் பண்ணாமல் சிலர் இருக்கிறாங்க. அதில் என்னோட சாய்ஸ் இரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ். சில வருடங்களுக்கு முன், லொள்ளு பிரசாத் என பத்திரிக்கைகளில் கேலி செய்யப்பட்ட விவசாயி, இன்று உலகின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான இந்திய இரயில்வே துறையை ஆண்டுக்கு ரூ.20,000 கோடி லாபம் ஈட்டச் செய்திருக்கிறார். திரு.சிதம்பரம், திரு. மன்மோகன்சிங் போன்ற பொருளாதார மேதைகள் செய்ய முடியாத மாற்றத்தை இந்த பட்டறிவு மேதை செய்துள்ளார். ராகுல், அத்வானி, மாயாவதி, நரேந்திர மோடி என்னும் எதிர்கால பிரதம வேட்பாளர்களை விட லல்லுவுக்கு பிரதமராவதற்கு தகுதி உண்டு என நினைக்கிறேன். மாண்புமிகு மக்களே.. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எழுதுங்க. (காமெடியெல்லாம் இல்லீங்க)
அரசியலை அலசி உலர வைக்கும் துக்ளக் பத்திரிக்கையின் 39-வது ஆண்டுவிழா DVD-ஜ வாங்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குங்க:
http://www.nilashop.com/product_info.php?products_id=994
அரசியலை சுத்தம் செய்ய முடியாவிட்டாலும் நம் அருகிலுள்ள சாக்கடையைச் சுத்தம் செய்ய வெட்டிவேர் உதவுகிறது. நம் ஊர் வெட்டிவேர் உலகெங்கும் வெற்றிவேரா வலம் வருவதை இணையத்தில் படிக்க:
குழந்தைகள் உலகத்தில் கவலைகளற்ற கற்பனை மிக உண்டு. நாம் கூறும் கதைகள் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கும். கதை சொல்லுகிறேன் என்றால், என் பெண் என்ன செய்யச் சொன்னாலும் செய்வாள். கால்களை மடக்கி, தலையை சாய்த்து, கன்னத்தில் கை வைத்து அவள் கதை கேட்கும் அழகே.. அழகு!. நிலாச்சாரலில் வரும் பூஞ்சிட்டுக் கதைகளை அவளுக்கு இரவில் படுக்கும்முன் சொல்வேன். அவளுக்குப் பிடித்த பூனையும், நரியும் திருமணம் செய்து கொள்ளும் கதையைப் படிக்க:
https://www.nilacharal.com/ocms/log/09010812.asp
ஜோ ஆங்கிலத்தில் சொன்ன பாடலைக் கண்டுபிடிச்சும், நிலாச்சாரலுக்காக நியூஸ்லெட்டர் தயாரித்துக் கொடுத்தும் அரட்டை அரங்கில் பங்கு வாங்கினேன். உங்களில் யாராவது போட்டிக்கு வருவதாய் இருந்தால் என்னைப் போல நேர்வழியில வாங்க!
Don’t look at me! With those pricking eyes!
Don’t go away! Don’t go leaving me!
Love is not a loan to ask back!
This is not a street show to watch it amidst a crowd.
(மாலீக் இந்த முறை போட்டியில் நான் இல்லை!)
என்ன பாட்டுன்னு நீங்க கண்டுபிடிக்கற வரை "அன்பாய் இருங்கள்! ஆரோக்கியமாய் இருங்கள்!" எனக் கூறி போய் வருகிறேன்!”
வாங்க சிங்கி,ஜோதியிலெ கலந்திட்டிங்க வாழ்த்துக்கள்!.அப்புறம் லல்லு
பிரதமர்னு ..சொன்னீங்களே காமெடி கீமெடி பண்ணுலயே?அந்த பாட்டு
எதுன்னு கண்டுபிடிச்சிடுவோம்,அது வரைக்கும் நீங்களும் குஷியா இருங்க
குஷாலா இருங்க.
ஆல்ல் தெ பெச்ட் மலேக்.
அந்த பாடல் ஆரூ படதில் வரும் பாக்காத பாக்காத , சரியாஙா கவிதா
கலக்கல் கவிதான்னு உங்களுக்குப் பேர் வைக்கலாம்.
சரியாச் சொல்லிட்டிங்க சூர்யா! எங்க தலைவர் ஜோவிடம் சொல்லி பரிசு அனுப்பச் சொல்றேன்.
நன்றி ஜோதி! எல்லாப் பகழும் நிலா குழுவினருக்கே!
Hello. And Bye.ya.ru