சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே!

எப்படியிருக்கீங்க? மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி (உண்மையாத்தாங்க சொல்றேன்).

கலி முத்திப் போச்சு. எங்க பார்த்தாலும் கொலையும், கொள்ளையுமா இருக்கு. 2012ல் உலகம் அழிஞ்சு போகும்னு சொல்றாங்க சில பேர். ஆனா வேத நாட்காட்டிப்படி இந்த உலகத்தோட ஆயுட்காலம் 4,29,40,80,000 வருடங்களாம், அதுல நாம இருக்கறது 1,95,58,85,109 வது வருடத்திலாம். எது எப்படினாலும் இருக்கட்டுங்க.. நம்ம ஆயுட்காலம் 100 வருடத்துக்கும் கீழ.. இருக்கற காலத்தில் ஒருத்தொருக்கொருத்தர் அன்பா, ஆதரவா இருந்துட்டுப் போலாமே.. எங்க பள்ளிக்கூடத்திலெல்லாம், வாழ்வியல் நெறின்னு வாரத்துக்கு ஒரு வகுப்பு உண்டு. அங்க நல்ல கருத்துக்களை கதைகளாச் சொல்லுவாங்க.. இப்ப இருக்கற பிள்ளைங்களுக்கு இந்த வகுப்பெல்லாம் இருக்கா இல்லையான்னே தெரியலை. நமக்கடுத்த தலைமுறை எப்படி இருக்கப் போகுதோ?

கொஞ்ச நாள் முன்னால ஒரு விளம்பரம் பார்த்தேன்.. ‘DAIRY MILK’ – கிரிக்கெட்டில் இந்தியாவை கென்யா ஜெயிச்சுடும், அதில் அந்தச் சின்னப் பையன் ‘யார் ஜெயிச்சா என்ன? யாரோ ஒருத்தர் ஜெயிச்சுட்டாங்கள்ல, அதைக் கொண்டாடுவோம்’னு சொல்லி எல்லாரும் மிட்டாய் சாப்பிடுவாங்க.. இப்படி வாழ்க்கையில் எல்லாத்தையும் ஒரு நல்ல கோணத்தில் யோசிக்கலாம்ல அப்படின்னு என் தம்பிக்கிட்ட சொன்னேன். பாகிஸ்தான் ஜெயிச்சா இப்படிக் கொண்டாடுவியான்னு திரும்பக் கேட்டான்.. என்னங்க பதில் சொல்றது?

எனக்கொரு மின்னஞ்சல் வந்ததுங்க, இந்த மும்பை சம்பவத்துக்கப்புறம்..

"ஒரு ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீரர் தங்கம் வென்றதற்கு அரசாங்கத்தின் பரிசு 3 கோடி ரூபாய்.
மற்றொரு துப்பாக்கி சுடும் வீரர் பயங்கரவாதிகளுடன் போராடி நாட்டையும் உயிரையும் காத்துத் தன்னுயிர் ஈந்தார். அவருக்கு அரசாங்கத்தின் சன்மானம் 5 லட்சம் ரூபாய்! அரசியல்வாதிகளே யோசியுங்கள்!"

யோசிக்க வேண்டியது தான். ஆனால் நாட்டைக் காக்கும் வீரன் தேசப்பற்றுக்காக வரணுமே தவிர, சன்மானத்திற்காக பணியில் அமரக்கூடாதுங்கறது என் கருத்து. ஆனால் அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான எல்லாம் செய்து கொடுக்கலாம். அதே போல விளையாட்டு வீரனுக்கு விளையாட்டு கடமை. அதற்கு அரசாங்கம் இவ்வளவு கொட்டிக் கொடுக்கணும்னு தேவையுமில்லை. ஏன்னா துப்பாக்கி சுடும் பயிற்சியில் சேர்றதுக்கே ஒருவர் கோடீஸ்வரராய் இருக்கணும். அப்படிப்பட்டவர்களுக்கு எதுக்கு மேல மேல கோடிகள்? நீங்க என்ன நினைக்கிறீங்க?

வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போச்சுன்னு சொல்வாங்க! கிரேசி மோகனோட நகைச்சுவை நாடகமெல்லாம் ‘நரசிம்ம ராவை’க் கூட சிரிக்க வச்சுடும். நிலாஷாப்ல கிரேசி மோகனோட ஒரு பேபியின் டைரிக்குறிப்பு வாங்கி வச்சுருக்கேன். நீங்க அவங்களோட வெளியீடுகள் வாங்க விரும்பினா இங்க ஒரு நோட்டம் விடுங்க:
http://www.nilashop.com/advanced_search_result.php?keywords=crazy+mohan&x=0&y=0

தமிழ் மேல் இருக்கற ஆவல்ல, சின்ன வயசுல ஒரு கோமாளித்தனம் செஞ்சேன். சென்னை தி.நகரில் Temple Trees னு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தா என் தோழி. நான் மதுரையில் இருந்தேன். சென்னையில் முக்கால்வாசி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ஆங்கிலப்பெயர் தான் சூட்டப்பட்டிருக்குன்னு எனக்கு அப்போ தெரியாது.(இப்ப ஊர் முழுக்கவே ஆங்கிலப் பேரா தான் இருக்கு) அவளுக்குக் கடிதம் எழுதும்போது முகவரியில் Temple Trees ங்கறதுக்குப் பதிலா ‘கோயில் மரங்கள்’னு மொழிபெயர்த்து அனுப்பினேன். இரண்டு வாரம் கழிச்சு தொலைபேசியில் கிழிச்சா பாருங்க.. தபால்காரருக்குப் பைத்தியம் பிடிக்காத குறையாம். (கிரேசி மோகன் நாடகம் பார்க்காமலே, என் தோழி குடும்பத்தினர் வாய்விட்டு சிரிச்சிருக்காங்க!) தமிழில் அழகழகா எத்தனை பேர் இருக்கு? அதையெல்லாம் வச்சா குறைஞ்சா போவாங்க?

சரி உருப்படியா இரண்டு தகவல் சொல்றேன். குறிச்சு வச்சுக்கோங்க..

1) ரயிலில் முன்பதிவு பண்ணிருக்கீங்களா? அதோட இருக்கை நிலவரம் தெரியணுமா? உங்க அலைபேசியிலிருந்து (cellphone) குறுந்தகவல்(sms) அனுப்பியே தெரிங்சுக்கலாம். நம்ம இந்திய ரயில்வேத் துறை கூகுள் கூட சேர்ந்து இந்த சேவையை அறிமுகப்படுத்திருக்காங்க.. 9773300000 ங்கற எண்ணுக்கு (முன்னாடி 0 அல்லது +91 சேர்க்க வேண்டாம்) உங்க PNR எண்ணை குறுந்தகவல் முறையில் அனுப்புனீங்கன்னா, உடனடியா எல்லா விவரமும் உங்க அலைபேசிக்கே வந்துடும். ஒரு சாதாரண குறுந்தகவலுக்கு என்ன கட்டணமோ அதே தாங்க இதுக்கும்.. நல்ல சேவை தானே! இது மாதிரி ஏகப்பட்ட தகவல் தெரிஞ்சுக்கலாம்.. அவை பற்றித் தெரியணும்னா இங்க சொடுக்குங்க: http://www.google.co.in/mobile/default/sms/#

2) மும்பை சம்பவத்துக்கு அப்புறம் நாடு முழுக்க ஒரு பதட்டம் இருக்கு. நீங்க யாராவது சந்தேகப்படற மாதிரியான ஆளைப் பார்த்தீங்கன்னாலோ, ஏதாவது தகவல் தெரிஞ்சாலோ, உடனே தீவிரவாத தடுப்புப் படைக்குத் தெரியப்படுத்துங்க. அதற்கான தொலைபேசி எண் 1090. அலைபேசியிலிருந்து கூட அழைக்கலாம். இந்த எண்ணை அழைக்க எந்தக் கட்டணமும் கிடையாது. (All India TOLL-FREE Terror Help Line "1090"). உங்களைப் பத்தின தகவலும் ரகசியமாவே இருக்கும். அதனால நமக்கெதுக்கு வம்புன்னு யாரும் ஒதுங்கிப் போகத் தேவையில்லை. உங்களுக்குத் தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் சொல்லுவீங்க தானே?

இதுக்கு மேல அரட்டை அடிச்சேன்னா(அறுத்தேன்னா) உங்க கழுத்தில் இரத்தம் வந்துடும். அதனால ஒரே ஒரு கேள்வியோட என் அரட்டையை(அறுவையை) முடிச்சுக்கறேன்.

பூமியில் விளையற கிழங்கு வகைகள்ல மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கிழங்கு எதுன்னு தெரியுமா? ……………………………..

உங்கள் பதிலை எதிர்பார்த்து அன்புடன் விடைபெறுவது,

உங்கள் !? (மாலீக், ரொம்ப யோசிக்கறீங்களோ?)

About The Author

10 Comments

  1. Hema Manoj

    Hi, Excellent message. There are some good people like you and all your Nila family members. Your website is doing a great job. Hope your messages will slowly transform every individual into a positive way.

    With High Regards
    Hema Manoj.

  2. Rishi

    //பூமியில் விளையற கிழங்கு வகைகள்ல மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கிழங்கு எதுன்னு தெரியுமா? ……………………… //

    ஹைய்யா… கோடிட்ட இடம் நிரப்பி ரொம்ப நாளாச்சு. இதோ ஆன்ஸர்.
    கருணைக்கிழங்கு தானே அது.

    பொதுவா, பூமிக்கடியில விளையிற எதுவுமே அதிக நல்லதில்லைதான். வாய்வு, மந்தம் மற்றும் சில விஷயங்களைக் கொடுக்கக் கூடியது. ஆனால் எனக்குத் தெரிந்து கருணைக்கிழங்கு எந்த கெடுதலும் செய்வதில்லை. மூலத்திற்கும் நல்லது. புதிய கிழங்கை சமைத்தால் தொண்டையில் அரிக்கும். பழைய கிழங்கு வாங்கி சமைப்பது நல்லது. சித்தப்பா காய்கறிக் கடை வைத்திருப்பதால் கறந்த விஷயங்கள் இவை.

    விடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  3. maleek

    கலி முத்திப்போய் அரசியல் அராஜகங்கள் தலைவிரித்து ஆடறதாலே தான் மும்பை சம்பவங்கள் போன்று மக்கள் நாளும் அவதிக்குள்.ஆளாகும்
    நிலைத்தொடர்கிறது.சுதந்திரம்—இரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” என்று சொல்லும் ஒரு புதுக்கவிதை எத்தனை சத்தியமான வார்த்தை?”கோவில் மரங்களே” லேசா உங்க முகம் பார்த்தேன்.அது சரி அதென்ன,கொ.ப.செ.எங்கெய்ய்யோ கேட்டமாதிரி இருக்கு.”

  4. !?

    Hema, தொடர்ந்து உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி. கட்டாயம் நல்லதொரு தனிமனித மாற்றம் நிகழும்னு நானும் எதிர்பார்க்கிறேன்.

  5. !?

    ரிஷி…. (கோபத்தில் கத்தறதா கற்பனை பண்ணிக்கோங்க!) கருணைக்கிழங்கு சம்பந்தமா அடுத்த அரட்டைக்காக எடுத்து வச்ச தகவலைப் போட்டு உடைச்சுட்டீங்களே 🙁

    சரியான விடையே தான்.. எல்லோருக்கும் பயன் தரும் கிழங்கு கருணைக்கிழங்கு.

  6. !?

    மாலீக், எப்படி இருக்கீங்க.. கோவில் மரங்கள் முகம் பார்த்திருக்கீங்கன்னா, நீங்க சென்னைவாசியா? தெரியப்படுத்துங்க.. உங்களுக்கு நிலா குடும்பம் மேல வட்டமிட ஒரு வழி சொல்றேன்.

    கொ.ப.செ ன்னா, கொள்கை பரப்பு செயலாளர்.. எல்லாம் நம்ம அரசியல் சுருக்குங்கள் தான்

  7. maleek

    இல்லை.சென்னையிலிருந்து தூ……………………………ரம்.இன்னும் எத்தனை
    நாளைக்கு ஆச்சரியக்குறியாகவும்,கேள்விக்குறியாகவும் இருக்க உத்தேசம்
    நி.கொ.ப.செ.?

  8. meenashi. sankarasharma.

    ரயில்வே சம்மந்தமாக குருந்தகவல் பரிமாற்றமும் , தீவிரவாதிகள் பற்றி தகவல் தொலைபேசி இலவச எண்ணும் பற்றிய செய்திகள் மிகவும் உபயோகமானவை. எந்தகாலத்திலும் சாதாரணமனிதனுக்குகூட உபயோகமாக இருக்கும். இதுமாதிரியான உபயோகமான விஷயங்களை அடிக்கடி தெரியப்படுத்தினால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
    மீனாஷி. சங்கர சர்மா. ஜோதிஷம் & வைதீகம். சிதம்பரம். 9944380121

  9. !?

    மாலீக், அப்போ நீங்க கண்டுபிடிக்கிறாப்ல உத்தேசம் இல்லையா? சீக்கிரமே சொல்லிடுவோம்..

  10. !?

    மீனாஷி ஐயா, உங்க பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இது போன்று மேலும் பயனுள்ள தகவல்கள் தர முயற்சிக்கிறோம்.

Comments are closed.