ஹாய்! ஹாய்!! ஹாய்!!!
எல்லாரும் எப்படி இருக்கீங்க? சூப்பரா இருக்கீங்களா? சில வாரங்களுக்கப்புறம் உங்களை எல்லாம் சந்திக்கிறதால பேசறதுக்கு நிறைய விஷயம் இருக்கு. சொல்ற விஷயங்கள் வரிசையில இல்லாம கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா கண்டுக்காதீங்க.
சின்ன வயசில மணல்ல விளையாடி அம்மாகிட்ட அடி வாங்காதவங்க யாரும் கிடையாது. அப்படி வாய்ப்பு கிடைக்காதவங்க நிறைய மிஸ் பண்ணிட்டீங்க, போங்க. இந்த வீடியோல இருக்கற லேடியைப் பாருங்க, இவங்க அம்மா திட்டினதே இல்லைன்னு நினைக்கிறேன். மணல்லஜாலியா விளையாடறதோட மட்டுமில்லாம இன்னும் என்னவெல்லாமோ ஜாலம் செஞ்சு காமிக்கிறாங்க. ஓவரா பில்டப் கொடுக்காம விஷயத்தை சொல்லு அப்படிங்கறீங்களா? சரி நீங்களே பாருங்க. ஆனா ஒரு கண்டிஷன் எப்படியிருக்குன்னு சொல்லனும். என்ன ஓக்கேவா?
http://www.dailymotion.com/video/xivlf_sand-art_creation
காட்டன் புடவைகள் மொடமொடப்பா இருக்க என்ன செய்யலாம்னு ஜோதி கேட்டிருந்தாங்க. கேட்டு இல்லைன்னு சொல்ல மனசு வராத வள்ளலல்லவா நான்? இதோ பிடிங்க டிப்ஸ்: ஒரு காட்டன் புடவைக்கு 3 டேபிள் ஸ்பூன் மைதாமாவு வீதம் எடுத்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைச்சு அடுப்பில் கொதிக்க வைச்சு கஞ்சி பதம் வந்தப்புறம் இறக்கிடுங்க. ஆறினப்புறம் கால் பக்கெட் தண்ணீரில மைதா மாவு கஞ்சியை கலந்து புடவையை நனைச்சு காயவைங்க. காய்ஞ்சப்புறம் புடவை சூப்பர் மொடமொடப்பா இருக்கும். இதைக் கேட்ட என்னோட தங்கை, சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் இன்ஸ்டண்ட் கஞ்சி மாவு (Revive) கிடைக்குது. அதைத் தண்ணீரில் கலந்து புடவையை நனைச்சு காயவைச்சால் புடவை புதுசு மாதிரி ஆகிடும்ன்னு சொல்றா. இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு. ஐடியா மன்னியோட தங்கைன்னா சும்மாவா…
மதிநிறைச்செல்வன் சார, உங்களுடைய பதில் படிச்சேன். ஏதாவது அமைஞ்சுதா? உங்களுடைய ஆர்வத்தைப் பார்க்கும் போது ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருக்கு. எதையும் கத்துக்ணும்ங்கற ஆர்வம் இருக்கும்போது வயசெல்லாம் ஒரு பிரச்சனை இல்லைங்கறது என்னுடைய தாழ்மையான கருத்து. உண்மையை சொல்லணும்னா உங்களுக்கிருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, புதுசா ஏதாவது கத்துணும்ங்கற ஆர்வம் எனக்கும் வந்திருக்கு. ஆனா பாருங்க, நான் ஒரு சுறுசுறுப்புத் தேனீஈஈஈஈ… !!! (ஹுக்கும்னு எங்க வீட்ல யாரோ கனைக்கிறாங்க)
இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில நாம்ப எல்லாம் ரொம்ப சுயநலமா மாறிட்டோமோன்னு தோணுது. போன வாரம் ஃப்ரெண்ட்ஸ் கூட பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போயிருந்தேன். வரிசையில் நின்னுட்டு இருந்த பெரியவர் ஒருவர் மயங்கி விழுந்துட்டார். யாரும் அவருக்கு உதவ முன் வரல்லை. உதவி செய்ய வந்தவங்களையும் தடுத்திட்டாங்க. ஃப்ரெண்ட்ஸ் நாங்க எல்லோரும் சண்டை போட்டு பெரியவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்தது தனி விஷயம். உதவினா நமக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோங்குற எண்ணம்தான் அங்கயிருந்த எல்லோருடைய மனசுலேயும் இருந்தது. அவங்களுடைய எண்ணங்களை தப்புன்னு சொல்லலை. ஆனால் தவிக்கிறது இன்னொரு உயிரா இருந்தா நம்ம பயங்களைக் கொஞ்சம் உதறலாமேன்னு தோணுது.
நம்ம கவிதா பிரகாஷைப் பாருங்க, தன்னுடைய நண்பர்களோட சேர்ந்து ஈ-ரிபல் (e-rebel)னு ஒரு அமைப்பு தொடங்கியிருக்காங்க. பழைய பாடப் புத்தகங்கள், உபயோகப்படுத்தின உடைகள், பொம்மைகள் எல்லாம் சேகரிச்சு தேவையானவங்களுக்குக் கொடுக்கிறாங்க. இது மட்டுமில்லாம 2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சில அனாதைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும் முடிவு செய்திருக்காங்க. இப்போதைக்கு சென்னை, பெங்களூர் இடங்களில் கிளைகள் இருக்கு. நீங்களும் உதவ ஆர்வமா இருந்தீங்கன்னா தொடர்பு கொள்ளுங்க:
சென்னையில்: அருண் ஸ்டாலின் – 9442620427 (arunstalin@gmail.com)
பெங்களூரில்: ப்ரவீன் குமார் – 9980819112 (praveen1420@yahoo.co.in)
இப்படி நீங்க ஏதாவது நல்ல காரியம் செய்யறீங்க, ஒத்த எண்ணமுள்ள மற்றவங்களோட தொடர்பு வேணும்னா எங்களுக்கு எழுதுங்க… அதுக்குத்தானே நிலாச்சாரல் இருக்கு?
போன வாரம் வெங்கட்ரமணி சார்கிட்ட பேசினேன். அப்போ அவர் நீங்க எல்லாம் எழுதற ‘சில்லுனு ஒரு அரட்டை’ படிச்சேன், ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாரு. அது மட்டுமில்லாம உங்க ஜோக்ஸெல்லாம் நல்லா இருககுன்னு பாராட்டினாரு. சந்தோஷத்தில் எனக்கு தலை கால் புரியல்லை. உடனே ‘ஹய்யா ஜாலி எம்பளுக்கு ஜாலி’ ன்னு பாடணும்னு தோணிச்சு. என்ன இது தங்கிலீஷ் மாதிரி ஏதோ புது பாஷையா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? எனக்கு சின்ன வயசில ‘எங்களுக்கு’ வார்த்தை சொல்ல வராதாம். ‘எம்பளுக்கு’ன்னு தான் சொல்லுவேனாம். நாளடைவில் அந்த வார்த்தை பிடிச்சுப் போய் ரொம்ப சந்தோஷமானா இப்படி பாடிடுவேன். இந்த மாதிரி நிறைய தடவை ஆபிஸில் நான் பாடறதைக் கேட்ட (கொலீக்) சுப்ரியா இதுக்கு ‘ஆதிவாசிகள் பாஷை’ன்னு பேரே வச்சுட்டா.
நிலாச்சாரலில் நமக்கு பிடிச்ச வேலைன்னு பார்த்தா நிறைய இருக்கு. அதுல ஒண்ணுதான் பிரபமானவர்களை பத்தி ப்ரொபைல் (profile) தயார் செய்யறது. பிரபலங்கள் பத்தின விஷயங்களை யாராவது சொல்லி கேட்டா அப்படியான்னு கேட்டு சீக்கிரமே மறந்திடுவோம். ஆனால் புரொஃபைல் தயாரிக்கறதாலே பிரபலங்கள் பத்தின பல விஷயங்கள் மனசில நல்லா பதியுது. பல சமயம் ‘அடேங்கப்பா இவ்வளவு திறமைகள் இவங்களுக்கு இருக்குதான்னு’ ஆச்சர்யமாயிருக்கும். உதாரணமா நடிகை பானுமதி, குன்னக்குடி வைதியநாதன், இயக்குனர் ஸ்ரீதர் புரொஃபைல் படிச்சுப் பாருங்க புரியும்.
https://www.nilacharal.com/enter/celeb/director_sridhar.asp
அட நான் கூட இவ்வளவு ப்ரொஃபைல்கள் தாயாரிச்சிருக்கோம்னு நினைச்சா ஆச்சர்யமாவும் மலைப்பாவும் இருக்கு. ஆனா PS, எடிட்டரம்மா வழிகாட்டுதல், உதவி இல்லாம இந்த அளவுக்கு செய்திருப்பேனாங்கறது சந்தேகம்தான். அவங்களுக்கு நன்றி (நரேனோட நன்றி கட்டுரை படிச்ச எஃபக்ட்)
சுந்தரி, நம்ம ஜோக்ஸ் எல்லாம் படிச்சுட்டு ஆஸ்பத்திரி செலவை நான்தான் ஏத்துக்கனும்னு அன்பா கட்டளையிட்டு இருக்கீங்க. ஜி3 என்னைக்குமே அன்புக்கு அடிமை. (என் அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்து கேக்கவா போறீங்கன்னு ஒரு தைரியம்தான்)
வீட்டை அழகு படுத்தனும்னா அழகுப் பொருட்கள் வாங்கி நிரப்ப வேண்டிய அவசியமில்லைங்க. தேவையில்லைன்னு நாம நினைக்கும் பல பொருட்களைக் கொண்டே வீட்டை அழகு படுத்தலாம். உதாரணமா ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வருட மேஜை காலண்டர்கள் தேவையில்லாம போயிடுது. அதில் இருக்கும் தாள்களை எடுத்துட்டு இருக்கும் அட்டையில் உங்களுக்கு பிடிச்ச டிசைனை வரையலாம். பேபரிக் கலர், ஸ்கெச் பென்கள், கிரையான்ஸ் உதவியோட வரைஞ்சிருக்கும் டிஸைன்களுக்கு அழகு சேர்க்கலாம். நாம செய்யற பொருட்களோட பெருமை என்னைக்குமே தனிதானே!
கார்டூன் படங்கள் பார்க்கும்பொது கிடைக்கிற சந்தோஷமே அலாதிதான். பல நேரங்களில நாமும் குழந்தைகளாவே மாறிடறோம். டாம் & ஜெர்ரி, பாப்பை ஷோ இதெல்லாம் ஒரு வகைன்னா பால் கணேஷ், ஐஸ் ஏஜ், கடோத்கஜ் போன்ற கார்டூன் திரைப்படங்கள் இன்னொரு வகை. இது மாதிரி கார்டூன் படங்களை தமிழாக்கம் செய்யும் போது நகைச்சுவை இன்னும் அதிகரிக்குது. போன மாதம் விஜய் டீவியில் ஒளிபரப்பான ஐஸ்-ஏஜ் (தமிழாக்கம்) படத்தில் மாண்டி யானை குழந்தையைத் தாலாட்டும் போது நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தில் வரும் ‘அப்பப்பா நான் அப்பனல்லடா தப்பப்பா நான் தாயுமல்லடா’ பாடலை இணைச்சிருந்தங்க. ரொம்பவும் ரசிச்சு பார்த்தேன். உங்களுக்கும் கார்ட்டூன் படங்கள் பார்க்கணும் போல இருக்கா? அங்க இங்க தேடாதீங்க. நம்ம நிலாஷாப்லயே ராமாயணம், மகாபாரதம், தென்னாலி ராமன் கதைகள் இப்படி நிறைய இருக்கு.
http://www.nilashop.com/product_info.php?products_id=861
இந்த வாரம் எக்கச்செக்கமா அரட்டையடிச்சாச்சு. சரி விடுங்க இதெல்லாம் இன்னைக்கு நேத்தா நடக்குது? நாம்ப மறுபடியும் பார்த்தாலும் சரி, பார்க்கலைன்னாலும் சரி, பேசினாலும் சரி பேசலைனாலும் சரி,
"நல்லாயிருப்போம், நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்."
“
hi…gayathri…your way of kidding approach is nice and the given matters are worthful….good job….carry on …..best of luck..
regards,
Prabu B.Tech,
கலக்கிறீங்க, கலக்கிறீங்க, எப்போதும் போல கலக்கிறீங்க காயத்ரி
Hi Multi-talented Gayathri, Your article is lively. Nice. Keep rocking….
Warm Regards
Hema Manoj.
Thanks a lot Prabu. Thank u for the support.
Thank for the wishes Hema and ur continous support. Will try to give more useful and interesting articles. 🙂
காயத்ரி, வண்டி வண்டியா மேட்டர் வச்சிருக்கீங்க போல..
எப்புடி இப்படியெல்லாம்..
மணலுக்குள் ஒளிந்திருக்கும் ஓவியங்கள் அதிசயம்!. நல்லாயிருக்கு நல்லாயிருக்கு
எல்லாமே நல்லாயிருக்கு.
னிcஏ……னிcஏஎ…என்ட்ரு சொல்ல டொனுதூஊஉ….. நிcஏஏஏஏஏ
சுபெர் ரொம்ப நல்லா இருக்கு
nicccccccccccccccccccccccccc
கயத்ரி ஈ அம் யொஉர் நெந் fஅன் Hஒந் டொ கெட் அ நெப் பகெ ப்ல். கெல்ப் மெ
சன்ட்ரி