சாலை ஓரத்தில்
திடீரென முளைத்து
தனக்குத்தானே
காவல் கொண்டு
சில்லரை நிரப்பும்
கோலப் பிள்ளையார்.
இராமநவமியன்று
வீடு தேடி வந்து
பிச்சை பெற்று
அருள் பாலிக்கும்
இராமன் அனுமன்.
பேருந்து ஓட்டத்தில்
கிழவியின் சேலை முடிப்பில்
விடுபட்டு வீசியெறியப்படும்
சில்லரையில் அடிபட்டு
வழிவிடும் கருப்பன்.
கார்த்திகை மாதத்தில்
பூசையறை உண்டியலின்
சில்லரையை
தன் உண்டியலுக்கு
மாற்றிக் கொள்ளும்
பழனி முருகன்
ஊரெங்கும் சில்லரைகளில் கடவுள்.
கத்தைகளால் வாழும் செல்வந்தக் கடவுளரோடு சில சில்லறைக் கடவுள்களும் வயிறு வளர்த்துக் கொள்ளட்டுமே… கவிதை வெகு நன்று.
நன்றி கீதா அவர்களுக்கு.