இப்பாயசம் வித்தியாசமான பாயசமாகவும், rich ஆகவும் இருக்கும். தமிழ் நாட்டில் தலை தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளைக்கு இந்தப்பாயசத்தை சிறப்பாகச் செய்து பரிமாறுவது வழக்கம். சிலர் கொழுக்கட்டையில் தங்கக்காசை வைத்துக் கொடுப்பார்கள்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு – ஒரு கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
(சர்க்கரை சேர்த்த) பால்கோவா – ¼kg
பால் – ஒரு லிட்டர்
நெய் – ஒன்றரை தேக்கரண்டி
சர்க்கரை – அவரவர் விருப்பத்திற்கேற்ப
செய்முறை :
பாயசம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் மைதா மாவில் ஒரு சிட்டிகை உப்பும், சிறிதளவு எண்ணெயும் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சப்பாத்திகள் செய்யும் குழவியை உபயோகித்து மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
பின்மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டி சிறு சிறு மூடிகளைக் கொண்டு வட்டமாக வெட்டி அதனுள்ளே துளித் துளி(அதற்குள் கொள்ளுமளவு மட்டும்) பால் கோவாவை வைத்து குட்டி குட்டி கொழுக்கட்டைகளாக செய்து நிழலில் ஆற விடவும்.
பாயசம் செய்யும் பொழுது பாலை அடுப்பில் வைத்துபாதியாகக்குறுக்க வேண்டும்.பின் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி சூடாக்கி மட்டான தழலில் வைத்து குட்டி கொழுக்கட்டைகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
குறுக வைத்த பாலில் குட்டிக்கொழுக்கட்டைகளை சேர்த்து, சர்க்கரை சேர்த்த பால்கோவாவையும் சேர்த்து, சிறிதளவு சர்க்கரையையும் சேர்த்து சிறிது நேரம் மட்டான தழலில் கொதிக்க விட்டு குளிர வைத்துபின் கப்புகளில் பரிமாறவும்.
“
பாயசம் செய்து சாப்பிட்டு பார்த்தென் நன்ராக இருந்தது