பாம்புகளைக் கண்டு
கொக்கரிப்பதில்லை நான்
அவை என் தோழர்கள்
ஆயிரமாயிரம் மைல்கள்
வலசைபோகும் என் சிறகுகள்
எப்போதும் சோர்ந்துபோனதில்லை
வலசைபோவது பற்றிய
என் உள்திட்டம்
ஏதோவொரு யுகத்தில்
என்னுள் என்னால் எழுதப்பட்டது
(ஆதலால் கோழிகளைப்போல்
குப்பைபொறுக்கத்
தெரிவதில்லையெனக்கு)
அடர்கானக உச்சியும்
உச்சி மலைகளின்
பனிமரக் கிளைகளும்
என் உறைவிடங்கள்
எனக்கான சூழலுக்காய்
யுகக்கணக்கில்
நில்லாது வலசைபோகும்
பேரில்லாப் பறவை நான்.
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here“