(நன்றி : மின்னஞ்சல்கள்)
பாசிடிவ் அப்ரோச்:
அப்பா: டியர் சன், உனக்கு நான் ஒரு பொண்ணு பாத்து வச்சிருக்கேன்!
பையன்: பொண்ணை என் விருப்பப்படி நானே தேடிக்கறேன்!
அப்பா: ஆனா நான் பார்த்திருக்கிற பொண்ணு பில்கேட்ஸோட பொண்ணு!
பையன்: ஓ! அப்படின்னா ஓ.கே!
அப்பா பில் கேட்ஸ் வீட்டிற்குச் செல்கிறார்.
அப்பா: உங்கள் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை இருக்கிறார்.
பில்கேட்ஸ்: என் மகளுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை.
அப்பா: ஆனால் மாப்பிள்ளை உலக வங்கியின் வைஸ் –பிரசிடெண்ட்
பில்கேட்ஸ்: ஓ! அப்படி என்றால் ஓ.கே!
அப்பா உலக வங்கியின்பிரஸிடண்ட் வீட்டிற்குச் சென்றார்
அப்பா: என்னிடத்தில் உங்கள் வங்கிக்கு வைஸ் –பிரசிடெண்ட் வேலைக்கு ஒருவர் இருக்கிறார்.
பிரசிடெண்ட்: என்னிடத்தில் நிறைய வைஸ்- பிரசிடெண்ட்ஸ் இருக்கிறார்களே!
அப்பா: ஆனால் அவர் பில்கேட்ஸின் மருமகன்…
பிரசிடெண்ட்: ஓ! அப்படி என்றால் ஓ.கே!
(இப்படித்தான் எல்லா பிஸினஸும் நடக்குதாமே!)”
மிக அருமை.
வெரி டெலென்ட் ஜோக்
சிந்திக்க வைக்கும் சிரிப்பு இது. ஒரு பாடம்போலவும் அதே சமயம் இரசிக்கும்படியான சுவையான நகைச்சுவை பானமாகவும் தந்தமைக்காக எழுதியவரைப் பாராட்டுகிறேன்
எழிலன்
எதார்த்தமான மற்றும் இன்றைய உலகத்தை உணர்த்திய நகைச்சுவை.