மகன்: அப்பா, ரொம்ப கஷ்டப்பட்டுத் தேடி அம்மா மாதிரியே ஒரு பெண்ணைக் கண்டுபிடிச்சுட்டேன்.
அப்பா: மகனே, உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பரிதாபமாயிருக்குடா!
நபர் 1: நேத்து எனக்கும் என்னுடைய மனைவிக்கும் பெரிய சண்டை
நபர் 2: அப்புறம் என்னாச்சு?
நபர் 1: கடைசியில என்னோட மனைவிதான் இறங்கி வந்தா.
நபர் 2: இப்படித்தான் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்குடுத்து வாழணும். உன்னுடைய மனைவி என்ன சொன்னாங்க?
நபர் 1: கட்டிலுக்கடியில் இருந்து வெளியே வாங்க. உங்களை அடிக்க மாட்டேன்னு சொன்னா.
மனைவி: ஏங்க இவ்வளவு லேட்?
கணவன்: தெரு ஓரத்துல ஒருத்தர் 100 ரூபாய் நோட்டைத் தொலைச்சுட்டு தேடிட்டிருந்தாரு.
மனைவி: நீங்களும் அவர்கூட தேடிட்டு இருந்தீங்களா?
கணவன்: நான் அந்த 100 ரூபாய் நோட்டு மேல நின்னுட்டிருந்தேன்.
கணவன்: நம்ம பெண் எவ்வளவு புத்திசாலியா இருக்கா? அதுக்குக் காரணம் என்னோட அறிவுதான்.
மனைவி: நீங்க சொல்றது சரிதான். ஏன்னா என்னோட அறிவு எங்கிட்டதான் இருக்கு!
மனைவி: நீங்க கூப்பிட்டா நான் நரகத்துக்குக் கூட வருவேன் தெரியுமா?
கணவன்: நிஜமாதான் சொல்றியா? அப்புறம் திரும்ப வந்துடமாட்டியே?!
“