சிரிக்க… சிரிக்க… – 3

மனைவி: ஹூம்… உங்க கையில இருக்கும் மொபைலா பிறந்திருந்தா எப்பவும் உங்க கூடவே இருந்திருப்பேன்.

கணவன்: ஹூம்… அப்படி மட்டும் நடந்திருந்தா, மார்க்கெட்ல புது மாடல்கள் வரும்போது பழசை மாத்திக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைச்சிருக்குமே!!

*******************

நண்பன் 1: எதை மறந்தாலும் என்னுடைய காலேஜ் நாட்களை மட்டும் என்னால மறக்கவே முடியாது.

நண்பன் 2: ஏண்டா அப்படி?

நண்பன் 1: நான் என்னுடைய மனைவியை முதல் முதல்ல சந்திச்சது அங்கேதான்.

********************

மனைவி: உலகத்துல எங்கே தேடினாலும் என்னை மாதிரி மனைவி உங்களுக்கு கிடைக்கமாட்டா தெரியுமா?

கணவன்: நான் கொஞ்சம் மக்குதான். அதுக்காக, முதல் தடவை செய்த தப்பையே மறுபடியும் செய்வேன்னு நினைச்சியா?!

*******************

மனைவி: என்னங்க இது வேட்டைக்கு கிளம்பறேன்னு சொல்லிட்டு இங்கே வாசல்லேயே நிக்கறீங்க?

கணவன்: எனக்கும் வேட்டைக்கு லேட்டாகுது. ஆனால் அங்கே வாசல்ல நாய் இருக்கு. அது போகட்டும்னு காத்துட்டிருக்கேன்.

********************

About The Author