"ஏங்க, நீங்க ஏலக்கடையிலா வேலை செய்யறீங்க?"
"ஆமாம், ஆமாம், ஆமாம்."
*****
"லோன் வாங்கி உங்க பையனை படிக்க வச்சீங்களே, இப்ப எப்படி படிக்கிறான்?"
"ஏதோ கடனேன்னு படிக்கிறான்!"
*****
"வைர வியாபாரம் செய்துக்கிட்டு இருந்தீங்களே, இப்போ எப்படி இருக்கு?"
"எல்லாமே தலைகீழாப் போச்சு, இப்போ ரவை வியாபாரம் பண்றேன்."
*****
ஜோஸ்யர் : "ஐயா, உங்களுக்கு தூங்கும் போது ஒரு கண்டம் இருக்கிறது."
அவர் : "வீட்டிலா? ஆபீசிலா?"
*****
"சினிமா நடிகையானா வாழ்க்கை ‘கிளு கிளு’ன்னு இருக்கும்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு?"
"போடி, ஒரே கிசு கிசுன்னு இருக்கு."
*****
"நாங்க ஒரு புது மாதிரியான நாடகம் போடப்போறோம். சீன், செட்டிங் எதுவுமே கிடையாது."
"அட, அப்போ எங்கே ஓடி ஒளிஞ்சுப்பீங்க?"
*****
“