எங்கள் வீடுகளுக்கிடையே
இடைவெளி இல்லை.
அரை நாள் பயணத்தில்
நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.
நான் அவளது திருமணத்திற்கும்
அவள் என் திருமணத்திற்கும்
சாட்சியாய் இருந்தோம்.
என் குழந்தைகள் அவள் வீட்டிலும்
அவள் குழந்தைகள் என் வீட்டிலுமாய்
பெரும் பகுதி நேரம்.
எங்களுக்குத் தோன்றாத ஒரு வியப்பு
ஊராரிடம்.
எப்படி சாத்தியமாயிற்று..
சிக்கல்களில்லாத நட்பு எங்களுக்குள்?
என் மனைவியும்
அவள் கணவரும்தான்
இன்னமும் ஜீவிக்கிற
எங்கள் அன்பின் பின்புலம் என்று
எங்களுக்குள் நாங்கள்
அடிக்கடி சொல்லிக் கொள்வது
ஊராருக்கு எப்படித் தெரியும்!
superb poem thola…..
சொன்ய் எரிcச்சிஒன்
எல்லோருக்குள்ளேயும் உள்ள கனவாகும் ஆசை (நிராசை…)