இசைஞானி நடிக்கும் ‘அழகர் மலை’
இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் சங்கிலி முருகன் தயாரிக்கும் படம் ‘அழகர் மலை’. இப்படத்தில் பாடல் ஒன்றினைப் பாடியது மட்டுமல்லாமல் அப்பாடலுக்காக நடித்துமிருக்கிறார் இளையராஜா. இப்பாடலில் மதுரையில் உள்ள பள்ளியை அவர் பார்வையிடுவதாகவும், திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் அவர் தியானத்தில் ஈடுபடுவதாகவும் படமாக்கப்பட்டுள்ளது.
‘ஒழுங்கா இரு’ – படப் பேருங்கோ!!
டாக்டர்.ராஜசேகர் தெலுங்கில் நடிக்கும் ‘சத்யமேவ ஜெயதே’ படம் தமிழில் ‘ஒழுங்கா இரு’ என்ற தலைப்பில் டப்பிங் செய்யப்படுகிறது. புதுமுக நடிகைகளான ஷெரில் பின்ட்டி, சஞ்சனா, நீது சந்திரா நடிக்கும் இப்படத்தினை இயக்குகிறார் ராஜசேகரின் மனைவி ஜீவிதா.
கரணின் குரு கமல்
"என்னுடைய குரு கமல்ஹாசன். அவர் கற்றுக் கொடுத்ததுதான் எனக்கு இன்று உதவுகிறது" என்று கூறியுள்ளார் கரண். கராத்தேவில் ப்ளாக் பெல்ட் பெற்ற கரண் தன்னுடைய அடுத்த படமான ‘கந்தா’வின் சண்டைக் காட்சிகளில் கராத்தேவை உபயோகிக்கிறாராம்.
மலாய் மொழியில் ‘1977’
தன் தந்தை வெகுளி என்று நிரூபிக்கப் போராடும் மகனைப் பற்றி சொல்லும் படம் ‘1977’. பெரும்பான்மையான காட்சிகள் மலேஷியாவில் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மலேஷியாவின் இரட்டை கோபுரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நமீதா மற்றும் பர்சானா நடிக்கும் இப்படத்தினை கண்டோன்ஸ் மற்றும் மலாய் மொழிகளில் டப்பிங் செய்யவிருக்கின்றனர்.
மீனவனாக நடிக்கிறார் விவேக்
‘அந்தோணி யார்’ படத்தில் மீனவனாக நடிக்கும் விவேக்கின் பெயர் ‘கிங் பிஷர்’. இப்படத்தில், ‘படகோட்டி’ படத்தின் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் தோன்றுகிறார் விவேக். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி கிராமத்தில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஷாம், மல்லிகா கபூர் நடிக்கும் இப்படத்தின் இயக்குனர் பாண்டி.
‘ஏகனி’ல் கலக்கும் ஜெயராம்
ராஜூ சுந்தரம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் ‘ஏகனி’ல் ஜெயராம் கல்லூரி பிரின்சிபலாகவும் நயன்தாரா மற்றும் சத்யன் விரிவுரையாளர்களாகவும் நடிக்கின்றனர். ஜெயராம் காமெடியில் கலக்கும் இப்படம் செப்டம்பர் வெளியீட்டுக்குத் தயாராகிறது. "ஒளிவு மறைவில்லாதவர் அஜீத்குமார். மிகவும் நேர்மையான நடிகர். வெளியே அவரைப் பற்றி பலர் பலவிதமாகக் கூறினாலும் அவருடன் பழகினால் மட்டுமே அவர் சிறந்த மனிதர் என்பதை அறிய முடியும்" என்று கூறியுள்ளார் ஜெயராம்.
புதுமுக நடிகர்களின் ‘முதல் முதல் முதல் வரை’
கிருஷ்ணன் சேஷாத்ரி கெதம் இயக்கத்தில் வெளிவரும் படம் ‘முதல் முதல் முதல் வரை’. "இன்றைய இளைஞர்களாஇப் பற்றியது இப்படம். வில்லன், சென்டிமென்ட் காட்சிகள் இல்லாத இப்படத்தினை அனைத்து வயதினரும் கண்டு மகிழலாம்" என்று கூறியிருக்கிறார் இயக்குனர். 100 புதுமுக நடிகர்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றனர் என்பது இப்படத்தின் ஸ்பெஷல் செய்தி.
நடிகர் சீமானின் கண்டிஷன்கள்
நடிகர் சீமான் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மாஸ்கோவின் காவேரி’. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்குனராகும் முதல் படம் இது. கதாநாயகனாக நடித்திட சீமான் போடும் கண்டிஷன்கள் – சிறந்த கதை மற்றும் தமிழ் வசனங்கள், நியாயமான கதாபாத்திரம் ஆகியவை இருக்க வேண்டும்.
“