ரஜினிக்கு பதில் சரத் நடிக்கும் ‘ஜக்குபாய்’
சிறிய இடைவெளிக்குப் பிறகு சரத்குமாருடன் இணைந்து ‘ஜக்குபாய்’ படத்தை இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார். அப்பா, மகளிடையே உள்ள உறவினைச் சொல்வருகிறது ‘ஜக்குபாய்’. மற்ற கதாபாத்திரங்கள் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் அப்பாவாக சரத்குமாரும் மகளாக ஸ்ரேயாவும் நடிக்கவுள்ளனர்.
14 வேடங்களில் சிம்ரன்
ஜெயா டிவியின் ‘சிம்ரன் திரை’ மாதம் ஒரு கதை சொல்லும் மெகாத் தொடர். இந்த மாதத் தொடரான ‘நவவெள்ளி’யில் 14 வேடங்களில் நடிக்கிறார் சிம்ரன். இதில் சிம்ரன் தீமைகளை அழித்து பக்தர்களுக்கு நீதி வழங்கும் அன்னை பராசக்தியாகத் தோன்றுகிறார். அர்விந்த்ராஜ் இயக்கும் இத்தொடரில் பூவிலங்கு மோகன், ஓ.ஏ.கே.சுந்தர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சுப்புலக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கமல் ரசிகர்களின் இசை வீடியோ
கமல்ஹாசனின் ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பணியினை எடுத்துக்காட்டும் விதமாக இசை வீடியோ ஓன்றை உருவாக்கியுள்ளனர். லியோன்.கே.தாமஸ் மற்றும் நண்பர்கள் இணைந்து ‘அவதாரம் – எ சல்யூட் டு த லெஜண்ட்’ என்ற இசை வீடியோவை ‘யு ட்யூப்’ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
மோதிரக் கையால் வாழ்த்து!
தமிழ் சினிமாவின் 75 வருட சாதனையைக் கொண்டாடும் வகையில் ‘குசேலனி’ல் ‘சினிமா… சினிமா’ இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ரஜினியின் அறிமுகப் பாடலாகவும் அமைந்துள்ளது. பாடல் சிறப்பாக அமைந்துள்ளதாக ஜீ.வி.பிரகாஷை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினாராம் சூப்பர் ஸ்டார்.
நண்பர்களை கௌரவித்த ‘குசேலன்’ இசை வெளியீடு
‘குசேலன்’ நட்பின் அடிப்படையிலான படமென்பதால் அதன் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் தங்களுடைய நெருங்கிய நண்பர்களுக்கு இசைத் தட்டினை வழங்கினர். ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் முரளிக்கும், பாலச்சந்தர் பாரதிராஜாவிற்கும், பி.வாசு லியோ கிரிஸ்டோபருக்கும், பிரகாஷ் குமார் இயக்குனர் விஜய்க்கும், ஜகபதி பாபு அர்ஜூனுக்கும் இசைத் தட்டினை வழங்கினர். இவ்விழாவில் தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்கள் வெளியிடப்பட்டன.
ஏ.ஆர்.ரஹ்மானின் உயர்ந்த மனப்பான்மை
"நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத வயதான இசைக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்" என்று கூறி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
“