பிரம்மாண்டமாக வளர்கிறது ‘ஜெகன்மோகினி’
ரீமேக் லிஸ்டில் சேர்ந்திருக்கும் அடுத்த படம் ‘ஜெகன்மோகினி’. இதில் நமீதா, நிலா மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் இயக்குனர் என்.கே.விஸ்வநாதனும் இசையமைபாளர் இளையராஜாவும் நீண்ட கால நண்பர்கள். கடந்த வாரம் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்களை கண்ட இளையராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டூயட் இல்லாத ‘பேராண்மை’
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிப்பில் வளர்கிறது ‘பேராண்மை’. இப்படத்தில் வனத்துறை அதிகாரியாகத் தோன்றுகிறார் ‘ஜெயம்’ ரவி. படப்பிடிப்பிற்காக ஒரு நாள் முழுவதும் தேக்கடி காட்டில் தலைகீழாக தொங்கியுள்ளார். படத்தில் ஐந்து ஹீரோயின்கள் தோன்றினாலும் ஒரு டூயட் பாடல் கூட இல்லாமல் படமாகிறது ‘பேராண்மை’.
சுதந்திர தினத்திற்குத் தயாராகும் ‘சத்யம்’
விஷால், நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘சத்யம்’, சுதந்திர தினத்தன்று வெளிவருகிறது. முதல் முறையாக வில்லனாகத் தோன்றுகிறார் கன்னட நடிகர் உபேந்திரா. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தினை இயக்குகிறார் இராஜசேகரன். படத்தில் போலிஸ் அதிகாரியாக விஷால் தோன்றுவதால் உண்மையான போலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையுடன் தயாராகிறது ‘சத்யம்’.
அஜீத்தின் ரசிகரான நடிகர்
‘பகவதி’, ‘சென்னை 600028’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் ஜெய், அஜித்தின் தீவிர ரசிகர். ’தல’யின் வழிகாட்டுதலும் அறிவுரைகளும் தன்னுடைய நடிப்பிற்கு பலவகையில் உதவியதாகக் கூறி இருக்கிறார் ஜெய்.
மீண்டும் உங்கள் பாக்கியராஜ்
தன்னுடைய மகன் சாந்தனுவை கதாநாயகனாகக் கொண்டு தன்னுடைய அடுத்த படத்திற்குத் தயாராகிறார் பாக்யராஜ். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது இத்திரைப்படம். மேலும் ப்ருத்விராஜ், சக்தி, ப்ரியாமணி இணைந்து நடிக்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் பாக்யராஜ்.
இசையமைப்பாளராகும் யுகேந்திரன்
மலேஷியா வாசுதேவன் மகன் பாடகர் யுகேந்திரன் ‘பலம்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அரவிந்த் வினோத், தீபா சாரி ஆகிய புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தின் இயக்குனர் முரளிகிருஷ்ணா. மேலும் இப்படத்தில் முதல்முறையாக மலேஷியா வாசுதேவன் பாடல்கள் எழுதியுள்ளார்.
வாழ்நாள் சாதனை விருது பெறும் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பணிக்காக, பாராட்ட எண்ணிய மெட்ராஸ் ரோட்டரி சங்கம் அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியுள்ளது. "நான்கு வயதில் பியானோ வாசிக்க ஆரம்பித்தால் நாற்பது வயதில் கண்டிப்பாக வாழ் நாள் விருது பெற முடியும்" என்று கூறினார் ரோட்டரி சங்கத் தலைவி இந்திரா சுப்ரமணியம். விழாவில் திரையிடப்பட்ட டாக்குமெண்ட்ரி படத்தில் பாலச்சந்தர், வைரமுத்து, மணி ரத்னம், கமலஹாசன், பிரபு மற்றும் பலர் தோன்றி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
6 வில்லன்கள், 6 கதாநாயகிகளுடன் வரும் ‘ராஜாதி ராஜா’
6 வில்லன்கள் மற்றும் 6 கதாநாயகிகளுடன் வரவிருக்கிறது லாரன்ஸ் நடிக்கும் ‘ராஜாதி ராஜா’. உடுமலை, பொள்ளாச்சி, காரைக்குடி, மூணாறு, ஹாங்காங், இந்தோனேஷியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இது முழு நேர காமெடி படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம்.
“