தமிழ்ப்படத்தில் ஹாலிவுட் நடிகர்
அமெரிக்காவில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் படப்பிடிப்பு ரம்பித்துவிட்ட நிலையில், சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. முதல்முறையாக ஹாலிவுட் நடிகர் ஜால் ஷே தமிழ்ப்படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ‘ரெட்’ எனப்படும் புதுவகையான காமிரா உபயோகிக்கின்றனர். படத்தைப் பற்றிய விவரங்கள் இணையதளம் மற்றும் இயக்குனரின் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளன.
எம்.ஜி.ருக்குப் பிறகு பாடப் புத்தகங்களில் இடம்பெற்ற ரஜினி
எம்.ஜி.ருக்குப் பின் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள நடிகர் என்ற பெருமை ரஜினியைச் சேருகிறது. சீபிஎஸ்ஈ (CBSE) 6ம் வகுப்பிற்கான பாடப் புத்தகத்தில் பஸ் கண்டக்டராக இருந்து மிகப் பெரிய நடிகராக உழைத்து வெற்றி பெற்றவர் (From Bus conductor to Film star) என்ற தலைப்பின் கீழ் வருகிறது ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு. அது மட்டுமல்லாது ரஜினி மற்றும் அவரது நண்பர் ராஜ் பஹதூர் இடையே உள்ள ழ்ந்த நட்பும் பாடத்தில் இடம்பெற்றுள்ளது. க்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டுக்கு செல்லும் ‘மொழி’
தமிழில் வெற்றிநடை பயின்ற ‘மொழி’ படம் பாலிவுட்டுக்கு செல்கிறது. போனிகபூர் பட உரிமையைப் பெற்றுள்ளார். ஹிந்தியிலும் ராதா மோகன் இயக்க, பிருத்விராஜ் வேடத்தில் அபிஷேக் பச்சனும், ஜோதிகா வேடத்தில் கரினா கபூரும் நடித்திட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
விகடன் டாக்கீஸின் ‘வால்மீகீ’
விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் ‘வால்மீகீ’ படத்தின் கதை எழுதி இயக்குகிறார் அனந்தநாராயணன். இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். படத்தின் நாயகன் ‘கல்லூரி’ புகழ் அகில் மற்றும் நாயகி மலையாள நடிகை மீரா நந்தன். ‘சிவா மனசுல சக்தி’க்குப் பிறகு விகடன் டாக்கீஸின் இரண்டாவது தயாரிப்பு ‘வால்மீகீ’.
தந்தையின் நினைவாக…
கிராமத்துப் பின்னணியில் காதலைச் சொல்ல வருகிறது ‘முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு’. படத்தில் பரத், தாரா, வடிவேலு, பொன்வண்ணன், யுவஸ்ரீ, யுகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் திருமுருகனின் தந்தையின் பெயர் முனியாண்டி. தந்தையின் நினைவாக படத்திற்கு அவர் பெயரை வைத்துள்ளார் இயக்குனர்.
கவிதாலயாவின் அடுத்தடுத்த தயாரிப்புகள்
‘குசேலனு’க்குப் பிறகு கவிதாலயா தயாரிப்பில் உருவாகும் படங்கள் ஜீவன் நாயகனாக நடிக்கும் ‘கிருஷ்ணலீலை’, அர்ஜூன் நாயகனாக நடிக்கும் ‘திருவண்ணாமலை’ மற்றும் இயக்குனர் செல்வா ரீமேக் செய்யும் பாலசந்தரின் பழைய படம் ‘நூற்றுக்கு நூறு’. இவரே பாலசந்தரின் ‘நான் அவன் இல்லை’ படத்தையும் ரீமேக் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நதியா
‘பட்டாளம்’ திரைப்படத்தில் படத்தின் இயக்குனர் ரோஷன் குமார், இயக்குனர்கள் ப்ரியதர்ஷன் மற்றும் சந்தோஷ் சிவன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அவருடைய ‘பரமபதம்’ என்னும் குறும்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். லிங்குசாமியின் திருப்பதி ப்ரதர்ஸ் தயாரிப்பில் வெளிவருகிறது ‘பட்டாளம்’. இப்படத்தில் பள்ளித் தாளாளராகவும், மனவியல் வல்லுனராகவும் நடிக்கிறார் நதியா.
ஓச்சர் ஸ்டூடியோஸ் அதிவேக வளர்ச்சி
‘சுல்தான் – தி வாரியர்’, ‘பில்லா-2’க்கு அடுத்தபடியாக சவுந்தர்யா ரஜினிகாந்தின் ஓச்சர் ஸ்டூடியோஸ், வார்னர் ப்ரதர்ஸுடன் இணைந்து மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்க மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். இவர்கள் ‘அத்தடூ’, ‘போக்கிரி’க்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகின்றனர்.
‘லீலை’யில் ஹிந்தி நாயகன்
ஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ன்ட்ரூஸ் இயக்கத்தில் வளரும் படம் ‘லீலை’. இதில் ஹிந்தி நடிகர் ஷிவ் பண்டிட் நாயகனாக நடிக்கிறார். இவர் ‘கோல்கேட் க்டிவ் சால்ட்’ மற்றும் ‘ஏர்டெல்’ விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கிரிக்கெட்டில் ஐபில்(IPL) மேட்ச்களின் பிராண்ட் அம்பாஸிடராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“