சினி சிப்ஸ் கொறிக்க, சுவைக்க (3)

மாதவன் ஏற்படுத்தும் விழிப்புணர்வு

கல்வி மற்றும் புவி வெப்பமடைதலைத் தவிர்த்தல் போன்ற சமூக நோக்கங்களுக்காக பணியாற்றுகிறார் நடிகர் மாதவன். அஜய் தேவ்கன், கஜோல், நரேன் கார்த்திகேயன் மற்றும் கிரண் பேடி வரிசையில் மாதவனும் ரவுண்ட் கிளப் என்ற அமைப்பின் கல்வி மூலம் சுதந்திரம் என்ற திட்டத்தின் தூதுவராகியுள்ளார். இவர்களின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு விரைவாகச் சென்றடையும் என்பதே இதன் நோக்கம்.

*****

முதல்வர் மகாத்மா

காமராஜ் திரைப்படத்தை இயக்கிய அ.பாலகிருஷ்ணன், ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பில் முதல்வர் மகாத்மா என்று நமது தேசத் தந்தையைப்பற்றி திரைப்படம் இயக்க உள்ளார். மகாத்மா உயிரோடிருந்தால் அவருடைய ள்கைகளின் மூலம் எவ்வாறு நாட்டின் பிரச்சினைகளைக் கையாள்வார் என்ற கற்பனையே படத்தின் கரு.

*****

விஜய்யின் நற்பணிகள்

ஈரோட்டில் விஜய்யின் தலைமை மற்றும் இளைஞர் நற்பணிமன்றங்கள் இணைந்து நடத்திய விழாவில் கலந்து கொண்ட விஜய், அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக 10 கம்யூட்டர்கள், மருத்துவமனைகளுக்கு இலவசப் படுக்கைகள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின்கள், இஸ்திரிப்பெட்டிகள் வழங்கியுள்ளார்.

*****

ரோபோ வில்லன்

ரஜினியின் ரோபோ படத்தில் வில்லனாக நடிக்க அனைவரும் தயங்கும் போது, நடிகர் நரேன் ரஜினிக்கு விருப்பமிருந்தால் வில்லனாக நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நரேன் இவ்வாறு கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

*****

2007 ஹிந்தி ஃப்லிம்பேர் விருதுகள்

சிறந்த நடிகர் – ஷாருக்கான் (சக் தே)
சிறந்த நடிகை – கரீனா கபூர் (ஜப் வீ மெட்)
சிறந்த இயக்குனர் – அமீர்கான் (தாரே ஜமீன் பர்)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ. ஆர். ரமான் (குரு)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – தர்ஷீல் சபாரி (தாரே ஜமீன் பர்)
சிறந்த புதுமுக நடிகர், நடிகை – ரன்பீர் கபூர் (சாவரியா), தீபிகா படுகோனெ (ஓம் சாந்தி ஓம்)

*****

ஹாங்காங்கில் ஏகன்

அஜீத்தும் நயன்தாராவும் ஏகன் படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர். படத்தின் இயக்குனர் ராஜூ சுந்தரம், ஹாங்காங்கில் 15 நாள் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். சுகாசினி, ஜெயராம், நாசர், சுமன், நவ்தீப் மற்றும் பலர் இப்படத்தில் இடம் பெற்ள்ளனர். தன் இசையின் மூலமாக அனைவ அசத்தும் யுவன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

*****

About The Author