ஆங்கிலப் படத்தில் கமல், அசின்
வால்ட் டிஸ்னி, பரத் பாலா புரடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரிக்கும் ஆங்கிலப் படம் ’19 ஸ்டெப்ஸ்’. கேரளாவுக்கு களரிப் பயிற்று கலையைக் கற்க வரும் ஜப்பானியரைப் பற்றிய படம் இது. களரிப் கற்றுக் கொடுப்பராக கமலஹாசனும், ஜப்பானியரைக் காதலிக்கும் இளவரசியாக அசினும் நடிக்கின்றனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஜாப்பனீஸ் ஆகிய மொழிகளிலும் வெளிவரவிரவிருக்கிறது இத்திரைப்படம்.
கலைத் துறைக்கு முதல்வரின் சலுகைகள்
முதல்வர் கருணாநிதி 2005 மற்றும் 2006ல் வெளிவந்த படங்களில் 70 தரமான படங்களுக்கு 4.9 கோடி ரூபாய் உதவித் தொகையினை வழங்கினார். சின்னத்திரை தொடர்களுக்கான விருதுகளை ராதிகா, குஷ்பு மற்றும் ஏ.வி.எம்.சரவணன் ஆகியோருக்கு முதல்வர் வழங்கினார். மேலும், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிடத்திற்கு அரசே நிலம் வழங்கும் என்றும் அறிவித்தார்.
புதியவர்கள் நிறைந்த ‘என் பெயர் குமாரசாமி’
அபரிமிதமாக அன்பைப் பொழியும் அன்னை, தன்னுடைய கோப தாபங்களை வெளிப்படுத்தும் தந்தை – இவர்களிடையே சிக்கித் தவிக்கும் மகன் குமாரசாமியைப் பற்றிய படம் ‘என் பெயர் குமாரசாமி’. புதுமுகங்கள் நிறைந்த இப்படத்தினை திருநல்லன் ஃபிலிம்ஸ் தயாரித்திட ரத்தன் சந்திரசேகர் இயக்குகிறார். தாமரை, யுகபாரதி, தொல்காப்பியன் மற்றும் ரத்தன் சந்திரசேகரின்ன் பாடல் வரிகளுக்கு தஷி இசையமைத்துள்ளார்.
‘பில்லா’ கெட்டப்பில் சிம்பு
சிம்பு தன்னுடைய ‘சிலம்பாட்டம்’ படத்தில் அஜீத்தின் ‘பில்லா’ கிளைமாக்ஸ் காட்சி கெட்டப்பில் தோன்றுகிறார். இதற்கான உடைகளை இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவி அனுவர்தன் வடிவமைத்துள்ளார். உடைகள் மட்டுமல்லாது அஜீத் போல் டயலாக்கும் பேசுகிறாராம் சிம்பு!
இயக்குனரை பாதித்த தமிழ் மக்கள்
"புதிய எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; அதுவே நான் தமிழில் படம் இயக்கக் காரணம்" என்கிறார் இயக்குனர் அனிதா உதீப். "குளிர் 100 டிகிரி" படத்திற்காக அவரும் அவருடைய குழுவும் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். உண்மைச் சம்பவங்கள் நிறைந்த இப்படத்தின் கதை முழுவதும் மலைத் தொடரில் நடைபெறுவதாக படமாக்கப்பட்டுள்ளது.
‘அவள் பெயர் தமிழரசி’
மோசர் பியர் தயாரிப்பில் மீரா கதிரவன் இயக்கும் படம் ‘அவள் பெயர் தமிழரசி’. ‘சுப்ரமணியபுரம்’ புகழ் ஜெய் நடிக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. பெண்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது இஇப்படம். பாலு மகேந்திரா, தங்கர் பச்சான், லோஹிதா தாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் மீரா கதிரவன் என்பது குறிப்பிடத் தக்கது.
அமீர்கானுக்கு டப்பிங் பேசிய சூர்யா
அமீர்கானின் ஹிந்தி படம் ‘தாரே சமீன் பர்’ தமிழில் ‘வால் நட்சத்திரமா’க மொழி மாற்றம் செய்யப்படுகிறது. செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தில் அமீர்கானுக்கு பின்ன்னணி குரல் கொடுத்திருக்கிறார் சூர்யா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.
சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழா
‘தி லெஜன்ட்ஸ் ஆஃப் இந்தியன் சினிமா – சிவாஜி கணேசன்’ என்ற நூலினை வெளியிட்டிருக்கிறார் தியோடர் பாஸ்கரன். இந்நூலின் முதல் பிரதியை ஏ.வி.எம்.சரவணன் வெளியிட சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் பெற்றுக் கொண்டார். "பழைய படங்களின் தலைப்புகளை புதிய படங்களுக்கு உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவகதர் மற்றும் நடராஜ முதலியார் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார் தியோடர் பாஸ்கரன்.
“
வாழ்த்துக்கல் தாரே ஜமின் பர்