கதிரப் பெத்துப் போட்டு
வயிறு ஒட்டிக்
கிடக்கும் கரிசல் தாயி
சுணங்கி அழுவா
மாசம் முழுசும்.
வானம் அகண்டு
அவளப் பாத்து
சிரிப்பான் – கண்
திறந்து எரிப்பான்
அக்னி நட்சத்திரம்.
இருக்கும் ஒத்த
மொலையும்
வத்திப் போய்
வெறுமனே
கனக்கும் அவளுக்கு.
கருவேலமரம்
சாட்சியாய் நிக்க
தண்ணிக்கும்
நிழலுக்கும் – ஓடி
ஒதுங்கும் அத்தனை
ஜீவனின் கண்ணும்
காலும் பொத்துக்
கொப்பளிக்கும்.
ஊரே அக்னிய
தீச்சட்டியாய் சுமக்கும்
பூவென மிதிக்கும்
ஆத்தா வருவா
மழையான்னு
கரிசல் தாயி
கண்ணீர் கரையும்னு!
கருவேலமரம்
சாட்சியாய் நிக்க
தண்ணிக்கும்
நிழலுக்கும் – ஓடி
ஒதுங்கும் அத்தனை
ஜீவனின் கண்ணும்
காலும் பொத்துக்
கொப்பளிக்கும்.
சிரப்பான கரிசல் நில காட்சி. சோமா உஙளின் கவிதை சிறப்பு.