பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.
"இறந்து போனவர் ஒருவரைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். எவ்வளவு சார்ஜ் ஆகும்?"
"ஒரு அங்குலத்திற்கு இருபது ரூபாய்"
"இறந்து போனவர் ஆறடி உயரம். அவ்வளவு செலவு செய்ய எனக்குக் கட்டாது."
***
அவள் : உங்க வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கா?
மற்றவள் : இருக்கார்.
***
நண்பர் (சினிமா தயாரிப்பாளரிடம்) : உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே!
***
அவள்: இந்த ஆஸ்பத்திரியிலேதான் என் கணவரைப் பறி கொடுத்தேன்.
மற்றவள்: அடப்பாவமே! என்ன ஆச்சு? ஆபரேஷனில் இறந்து விட்டாரா?
அவள்: இல்லை. ஆஸ்பத்திரி நர்சோடு ஓடிப்போயிட்டார்.
***
“
இன்னுமொரு ஜோக்
உங்க நாய் காணுமா? பேப்பரில் விளம்பரம் செய்யரு தானே
செய்யலாம் ஆனால் எங்க நாய்க்கு படிக்கத்தெரியாதே