சற்றே திரும்பிப் பார்க்கையில்..

குழந்தைகள் அவ்வப்போது
விளையாடுகின்றன
அப்பா.. அம்மா விளையாட்டு.
பெரியவர்கள்
மறந்தே போய் விட்டார்கள்
‘குழந்தை’ விளையாட்டு!
ஒரு குழந்தையாய் மாறி
கொஞ்சி
விளையாடிப் பாருங்கள்..
இது நாள் வரை
தொலைத்தவைகளின்
பட்டியல் புலப்படும்
உங்களுக்கும்!

About The Author

1 Comment

  1. இராமநாதன்

    நான் முதலில் உங்கள் படைப்பை படித்தது பொறாமையில் தான்…
    என் படைப்பு இடம்பெறா இடத்தில் தங்களது படைப்பு குவிவதன் காரணம் எண்ணி…
    ஆனால், தங்களால் நிறைய கற்றுக் கொண்டேன்…
    நன்றி…
    கூடிய விரைவில் என்னுடன் போட்டி கொள்ள தயாராகுங்கள்…
    -இராமநாதன்(ரசிகன்)

Comments are closed.