தேவையான பொருட்கள்:
பால் – ஒரு லிட்டர்
சீரக சம்பா அரிசி (அ) புது அரிசி – அரை கப்
சர்க்கரை (அ) வெல்லம் – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
நெய் -ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு -ஆறு
திராட்சை – பத்து.
செய்முறை:
பாலை அடி கனமான ஒரு கடாயில் ஊற்றிப் பால் நன்றாகப் பொங்கி வந்ததும் பத்து நிமிடங்கள் நீரில் ஊறவைத்து கழுவிய அரிசியைப் பாலில் போட்டுத் தழலை மட்டாக வைத்து கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். முக்கால் பாகம் இறுகியதும் சர்க்கரை சேர்க்கவும். மீண்டும் கை விடாமல் கிளறிக்கொண்டே வரவும்.
குங்குமப்பூவைச் சேர்த்துக் கலந்து நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரித் துண்டுகளை போட்டுப் பரிமாறவும். ஏறத்தாழ பால்கோவாவின் சுவையில் இருக்கும்.
“