உருவேற்றி அழிக்கும்
மாய வித்தைக்காரன்
எவனென்று அறியாமல்
ஊமைக் கடவுள்கள்
உரிமை கொண்டாடின…
பிளக்கவும் விலக்கவும் முடியாதென
உணர்ந்து ‘வெளி’யினூடே சமரசம்
கொள்ளலாயிற்று.
சவுகரியங்களும் பாடுகளும்
முன்னிழுத்துச் செல்ல
‘கால வெளித் தத்துவம்’
காணாமல் போயிற்று.
இதுவும் கடந்து போகுமென
மகிழ்ச்சியும் துயரமும்
நிரந்தரமின்மையில்
மூழ்கி மறைந்தன.