சத்து மாவு தயாரிக்கும் முறை

இயந்திரமயமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதன் மன, உடல் நலப் பிரச்சினைகளை அதிகமாக எதிர்கொள்ள நேர்கிறது. கூட்டுக் குடும்பங்கள் அருகி வரும் இக்காலகட்டத்தில் மக்களுக்கு, குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவை செய்து கொடுப்பது பற்றிய கை பக்குவங்களும் மறைந்து வருகின்றன. அவர்களுக்கென்று உதவ சில மாவு முறைகளைத் தயாரிப்பது பற்றில் குறிப்புகளை வழங்குகிறேன்.

Multigrain Powder என்னும் சத்து மாவு தயாரிக்கும் முறை

ஜவ்வரிசி – 50 கிராம்
காபூலி சென்னா (வெள்ளை கொண்டைக்கடலை) – 150 கிராம்
வேர்க்கடலை (அ) நிலக்கடலை – 100 கிராம்
வறுத்த கடலைப்பருப்பு – 100 கிராம்
கோதுமை – 100 கிராம்
அரிசி – 50 கிராம்
ராகி – 150 கிராம்
உலர்ந்த பச்சை பட்டாணி – 50 கிராம்
உளுத்தம்பருப்பு – 50 கிராம்
காய்ந்த மொச்சைக்கொட்டை – 50 கிராம்
மக்காச்சோளமணிகள் – 200 கிராம்
கொள்ளு – 50 கிராம்
பாதாம்பருப்பு – 200 கிராம், முந்திரிப்பருப்பு – 200 கிராம், பிஸ்தாப்பருப்பு – 200 கிராம், ஏலக்காய் – 25 கிராம் (இந்த நான்கையும் வறுக்கக்கூடாது)

செய்முறை:

மேல் குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக சூடான கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் குளிர வைத்து எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு மெல்லிய ரவை பதத்தில் அரைத்து ஒரு containerல் போட்டு வைத்துக் கொள்ளவும். பத்து மாதம் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு cerelac போன்று பால் சேர்த்தோ, சர்க்கரை சேர்த்தோ கொடுக்கலாம்.

About The Author