கருவறையில் அமைதியாய் உறங்கிய எனக்கு
இறைவன் அளித்த பரிசு பிறப்பு…
மண்ணில் விழுந்த முதல் நொடியே
அழுதாலும் கூட, அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்…
பள்ளிப் படிப்பை பளிச்சென்று முடித்து,
கல்லூரிப் படிப்பை கணப்பொழுதில் கடந்து,
சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தயாரானேன்…
அமைதிப் பூங்காவாய் இருந்த உலகம்
வெறும் பொய்யென உணர்ந்தேன்…
எங்கு நோக்கினும் தீவிரவாதம்,
யுத்தம், கொலை, கொள்ளை என
அமைதியைக் காவு வாங்கும் செயல்கள்…
இங்குதான் வன்முறை எனில்,
இயற்கை எழில் கொஞ்சும்,
பனிப்பிரதேசங்களும் கூட
மானுடனின் விஞ்ஞான வளர்ச்சியினால்
உருகி நிலை குலைந்துள்ளது….
மனம் உடைந்து இறைவன் சந்நிதியை அடைந்தேன்
அங்கும் பணம் மட்டுமே பிரதானம் என்று
வாய் வார்த்தைக்கு இறைவனை வணங்குபவர்கள்…
என்ன உலகம் இது?!? இறைவா!
எனக்காக ஒரு முறையேனும் மீண்டும் கருவறை திற…
உயிருடன் நொடிப்பொழுதேனும் நிசப்தமாய் வாழ…
கோரிக்கை நிறைவேறினால் பட்டாம்பூச்சியென
சிறகடித்துப் பறப்பேன் சிறகுகளின் சப்தம் கூட எழாமல்…
கவிதை மிகவும் அருமை கடைசி வரி அழகாக இருந்தது.