கோவைக்காய் வறுவல்

தேவையானவை:

கோவைக்காய் – கால் கிலோ,
காய்ந்த மிளகாய் – 6,
துவரம்பருப்பு – கால் தேக்கரண்டி,
மிளகு – அரை தேக்கரண்டி,
வெங்காயம் – 2,
தேங்காய்த் துருவல் – 4 தேக்கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கோவைக்காயை வட்ட வட்டமாக, மெல்லிய துண்டுகளாக நறுக்குங்கள். காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, மிளகு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை இளம் வறுப்பாக வறுத்துக் கொள்ளுங்கள். இவற்றை வெங்காயத்துடன் சேர்த்துக் கரகரவென அரையுங்கள்.

பிறகு, நறுக்கி வைத்திருக்கும் கோவைக்காயில், அரைத்த மசாலாவை உப்பு போட்டுப் பிசறி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

வாணலியைக் காய வைத்து, எண்ணெயை ஊற்றி, பிசறிய காயைப் போட்டுக் கிளறி மிதமான தீயில் மூடி வைக்க வேண்டும்.
சில நிமிடங்கள் கழித்துத் திறந்து மீண்டும் கிளறிவிட வேண்டும்.

பின்பு, கோவைக்காயைச் சுருளச் சுருள வதக்கிச் சிப்ஸ் பதத்தில் இறக்குங்கள். சுவையான கோவைக்காய் வறுவல் தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author