கோதுமை ரவை இட்லி

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை – 250 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
புளித்த தயிர் – 2 கோப்பை
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 4
கொத்துமல்லி – சிறிது
மிளகு – ½ டீஸ்பூன்

செய்முறை:

கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பச்சை மிளகாய், கொத்துமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடலைப்பருப்பு நன்கு ஊறியவுடன், மிளகுடன் அதை மிக்ஸியில் போட்டு, கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு, அதை கோதுமை ரவை, உப்பு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, புளித்த தயிர், எண்ணெயுடன் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வையுங்கள்.

மாவை இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொண்டு, இட்லிகளாக வார்த்து ஆவியில் வேக வைத்து எடுங்கள். சுவையான கோதுமை ரவை இட்லி தயார்! இட்லியை தேங்காய் (அ) கொத்துமல்லிச் சட்னியுடன் சூடாகப் பரிமாறுங்கள்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author